18/04/12 அன்று முகநூல் அன்னக்கொடை ,புன்னகை தோட்டம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து , கோவை அன்னை தெரேசா காப்பகத்தில் இருக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை,மற்றும் கண் அறுவை சிகிச்சைக்கு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன் படி அங்குள்ளவர்களுக்கு 18/04/12 காலை அரவிந்த் மருத்துவமனை மருத்துவர் dr. வித்யா தேவி தலைமையில் 11 பேர் கொண்ட குழு காப்பகத்திற்கு நேரில் வந்து அங்கு இருக்கும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு கண் பரிசோதனை நடத்தினர் பலருக்கு கண் கண்ணாடி பொருத்தப்பட்டு , அறுவை சிகிச்சைக்கு தகுதியான கண்களில் குறையுள்ளவர்களை 7 பேரை தேர்வு செய்து மருத்துவமனைக்கு அறுவைசிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டு . அவர்களுக்கு அறுவை சிகிச்சை 20/04/2012 அன்று அவர்களை நல்லபடியாக அன்னை தெரேசா காப்பகத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர் .
இந்த முகாமிற்கு முகநூல் அன்னக்கொடை ,புன்னகை தோட்டம் நண்பர்கள் ஏற்பாடு செய்ய நண்பர்கள் ஆடி தபசு, Yamidhasha Nisha , Madhu Alex. மற்றும் magi mahendran கலந்துகொண்டு முகாம் சிறப்பாக நடக்க உதவினர்.
மேலும் இந்த முகாமிற்கு ஆதரவளித்த முகநூல் அன்னக்கொடை, புன்னகை தோட்டம் நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
Tweet | ||||

1 comment:
தங்கள் சேவைக்கு பாராட்டுகள்!
Post a Comment