Monday, February 27, 2012

உயிரை வதைக்க வேண்டாம் ~மகேந்திரன்



இந்த காட்சியை காணும் இதயங்கள் இனியாவது மாமிசம் உண்ணாமல் இருக்குமா..?
மாமிசம் உண்பதே தவறு ,
அதிலும் ஒரு நல்ல விஷேச தினங்களில் , அதுவும் கோவிலில் உயிர் பலி இட்டு தன் சுயனலதிர்க்காக வாழ்வது கடவுள் ஏற்குமா ?
எந்த கடவுள் உயிர்பலி கேட்கிறது ?
எந்த கடவுள் உயிர் பலிக்கேட்கிறதோ அதை கடவுளாக எண்ணுவதும் வணங்குவதும் நியாயமா ?
~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

3 comments:

sury siva said...

கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

என எழுதினார் வள்ளுவப்பெருந்தகை.

வள்ளலார் எல்லா உயிரினிடத்தும் அன்புடன் இருக்கவேண்டும்
எனச் சொன்னார்.

வள்ளுவனையும் வள்ளலாரையும்
வாழ்த்தும் சமூகம்
வாழும் நிலை என்ன என‌
விவரிக்கும் தங்கள் பதிவு என் நெஞ்சை
விம்மி விம்மி அழச்செய்கிறது.


சுப்பு ரத்தினம்.

நெல்லி. மூர்த்தி said...

நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல இருந்தது உங்களின் தொடர் நிழற்படங்களும் இறுதியிலுள்ள வரிகளும். இறைவனின் பெயர் கூறி இந்த நூற்றாண்டிலும் மூடநம்பிக்கைகளில் மூழ்கியிருப்பவர்களை என்னவென்று கூறுவது?

ராஜி said...

மனிதர்கள் பலி கொள்ளும்போதே பதறாத மனதாக மாறிவிட்ட நம் நெஞ்சம் வாயில்லா இந்த ஜீவங்களுக்காவவா துடிக்க போலிறது?!

Post a Comment