Showing posts with label உன்னோடு வாழ. Show all posts
Showing posts with label உன்னோடு வாழ. Show all posts

Sunday, January 01, 2012

உன்னோடு பேச,உன்னோடு வாழ..!

வீணையை
கையில் குடுத்துவிட்டு
விரல்களை விறகாக்கி பார்க்கிறது
"காதல்"



வைத்தியம்
செய்யப்போவது
நீ
என்றால்...
உன்
மடியிலேயே
மயங்கிகிடக்க
நான் தயார்..!


நீ
மனம் வீசும்
மலரல்ல...
மலர்
வீசும் மனம்...



நீ
நிறைகுடம் தூக்கி
செல்கிறாய்..!
நான்
ததும்பிக்கொண்டு
இருக்கிறேன்..♥



காதல் தரும்
இன்பம்
சில வருடம் தொடரும்..!
காதல் தரும்
துன்பம்
சில ஜென்மங்கள்
தொடரும்..!



எல்லோருக்கும்

சூரியன் உதிக்கும் விடியல் ஆகும்...!


எனக்கு

உன் கனவு களையும் வேளைதான் விடியல்..!


உன் நினைவுகள் என்னிடம்
இருக்கும் வரை ..
நீ என்னிடம் இல்லை என்றாலும்
பறவை இல்லை ..



என்
கவிதைக்கு
எழுத்துப்பிழை நீ ...
நீ
இல்லாமல்
நான் கவிஞன் இல்லை ...♥

நல்லவேளை
நீ
நீயாகவே இருக்கிறாய்
கனியாக
இருந்துதால்
வேரோடு விழுங்கி
இருப்பேன் ..!


உன்
நினைவு மட்டும்
இருந்தால்
போதும்...
என்
நிழலுக்கு
கூட மரணம் கிடையாது..!



என்
ஆயுள் ரேகை
உன்னால் தான் வளர்கிறது .
அதை
எந்த இடத்தில் வேண்டுமானாலும்
துண்டிக்க
உனக்கு மட்டுமே
உரிமை உண்டு..♥


உன்
நினைவு மட்டும்
இருந்தால்
போதும்...
என்
நிழலுக்கு
கூட மரணம் கிடையாது..!


ஏ...
அழகிய கப்பலே...
உன்னால்
கவிழ்ந்த கடல்களில்
நானும் ஒன்று..!



உன்னோடு பேச கவிதை இருக்கிறது...
உன்னோடு வாழ கனவு இருக்கிறது...



ஒரு
புத்தகத்தில்
முதல் பக்கத்தில்
உன் பெயரை
வாசித்துவிட்டேன்...
அடுத்த பக்கம்
புரட்டவே மனம்
இல்லை..♥