Friday, June 06, 2014

பெத்த மனம் பித்து : பிள்ளை மனம் கல்லு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
(315 / 06-06-2014)"
*********************

02-06-2014 அன்று சுமார் 51 வயதான ஒருவர் கோவை, காந்திபுரம் நகர பேருந்து நிலையம் எதிரில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார் . அங்கு வந்த ஈரநெஞ்சம் அமைப்பினர் அவரை மீட்டு உடனடியாக அவரை கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர் .

https://www.facebook.com/photo.php?fbid=576204495810304&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater

அவரிடம் ஈரநெஞ்சம் அமைப்பினர் பேசியதில் அவர் தன் பெயர் சதிஷ் என்றும் , தன் ஊர் பாப்பநாயக்கன் பாளையம் என்றும் தெரிவித்தார் . அவருக்கு தாய் தந்தை இருப்பதாக தெரிவித்த அவர் .

மேலும் அவர் " நான் மிகவும் மோசமானவன் சிறு வயது முதல் தீய நண்பர்களின் சகவாசத்தால் குடி மற்றும் போதை பழக்கத்தால் பெரியவர்களை மதிக்காமல் , திருட்டு , சங்கிலி பறிப்பு போன்ற பல களவாணி தனங்கள் செய்து பல பேர் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறேன் . அவர்களின் வயித்தெரிச்சலும், சாபமும் தான் 15 நாட்களாக இப்படி அசைய கூட முடியாத நிலையில் இருக்கிறேன் . இந்த நிலையில் என்னை பார்த்தால் கூட என் பெற்றோர் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் . நான் அவர்களுக்கு அவ்வளவு கஷ்டங்கள் கொடுத்திருக்கிறேன். சிலர் என்னை மருத்துவ மனையில் கொண்டு சேர்த்தனர் . ஆனால் அங்கிருந்தவர்கள் என்னை மீண்டும் வெளியே கொண்டு வந்து விட்டு விட்டனர் . அடுத்தவர்களின் பாவத்தைக் கொட்டிக் கொண்ட எனக்கு ஆண்டவன் கொடுத்த இந்த தண்டனை சரியானது தான் . நான் இப்படியே இந்த நிலையிலேயே இறந்து போனால் கூட பரவாயில்லை " என்று கண்ணீருடன் கூறினார் .

அவர் தன் தவறுக்காக வருந்தி கண்ணீர் விடுவதை கண்ட ஈர நெஞ்சம் அமைப்பினர் அவரை அவரது பெற்றோருடன் சேர்த்து வைத்து விட வேண்டும் என்று விரும்பி அவர்களை நேற்று இரவு 04/06/2014 தொடர்பு கொண்டு பேசினர் . அப்போது பேசிய அவரது அப்பா குபேந்திரன் , தன்னால் இரவில் வரமுடியாது காலையில் வருகிறேன் என்று கூறினார் . அதே போல் இன்று காலை அவர் கோவை மாநகராட்சி காப்பகத்தில் வந்து தன் மகனை சந்தித்து கண்ணீர் விட்டார் ... தந்தையை பார்த்ததும் சதிஷும் கண்ணீர் விட்டு கதறினார் அதை பார்த்து அருகில் இருந்த அமைப்பினரும் மனம் நெகிழ்ந்தனர் .

பின்னர் குபேந்திரன் " நான் இருதய நோயாளி ,என் மனைவி ஜோதி இப்போது உடல் நலமில்லாமல் இருக்கிறார் அதனால் தான் நான் மட்டும் என் மகனை பார்க்க வந்தேன் . இருபது வருடங்களுக்கு முன்னால் இவன் பண்ணாத தப்பே கிடையாது என்று கூறலாம் , இரவில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போலீஸ் வந்து வீட்டுக் கதவை தட்டி இவனை பற்றி விசாரிப்பார்கள் . இவனால் எங்களுக்கு பலவகையிலும் அவமானங்கள் தான்
ஏற்பட்டது . எங்கள் வீட்டில் நடைபெற இருந்த ஒரு திருமணம் கூட இவனால் தடைப் பட்டது ... பல இலட்சங்கள் இவனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது . இவன் வீட்டை விட்டு வெளியேறியதும் போலீஸ் ஸ்டேஷன் போய் சதிஷுக்கும் எங்களுக்கும் இனி எந்த சம்பந்தமும் கிடையாது அவனை தேடி இனி யாரும் எங்கள் வீட்டுக்கு வராதீர்கள் என்று எழுதி கொடுத்து விட்டோம் ... இன்று என் மகனின் இந்த நிலையை பற்றி கேட்டதும் எங்கள் மனம் தாங்கவில்லை நான் அவனை நாளை இங்கிருந்து அழைத்து சென்று வேறு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க போகிறேன் " என்று கண்ணீருக்கு இடையில் கூறினார் .

இதை தான் நம் முன்னோர்கள் ' பெத்த மனம் பித்து : பிள்ளை மனம் கல்லு ' என்று கூறினார்கள் போலும் .

மீண்டும் ஒரு உறவை இணைத்து வைத்ததில் ஈர நெஞ்சம் மகிழ்கிறது .

நன்றி
~ஈரநெஞ்சம்

On 02.06.2014 there was a 51 year old man with poor health found opposite to the Gandhipuram bus station in Coimbatore. The members of the Eera Nenjam Trust rescued him and admitted at the Coimbatore City Corporation Home.

When the members spoke to him, he mentioned in tears that his name was Sathish, he was from Pappanayakkan Palayam and he had both parents. He also said that “I am an evil person. Since I was small, with the bad friendship I got used to alcohol and drugs. I never respected the grownups, played evil games with people by breaking gold chains, and doing other robberies. I think it is the curse and the suffering of the people that I am in this bad situation and not being moved myself for the past 15 days. My parents won’t accept me in this terrible situation. I gave them a lot of hardship. Some people admitted me at the hospital, but people at the hospital sent me out. It is right for God to punish me like this for doing sins for other people. I won’t mind suffering like this and later die in this situation.”

When the members saw him realizing his mistakes and being in tears, they liked to reunite him with his parents. They contacted his parents and talked to them last night 04.06.2014. His father Kubendran said that he was unable to travel in the night and will arrive in the morning. As he said, this morning he came to the Coimbatore City Corporation Home and was in tears when he saw his son. Sathish also cried when he saw his father, this made the hearts of the trust members of the trust melt.

Kubendran said in tears “ I am a heart patient, now my wife Jothy is not well because that I came alone to see my son. 20 years ago there was no bad things being left without him doing them. The police came any night knocking on the door to inquire about his whereabouts. He brought a lot of shame onto us. He made us loose several lacks of money. When he left home, we went to the police station and gave a report saying that we have no connection with Sathish and never come looking for him to our door step. Today when I heard the situation of my son we couldn’t bare it. I am going to bring him with me tomorrow and admit him in another hospital for treatment.”

This was why our ancestors said “ parents hearts are soft and the children's hearts made of rock”.

The Eera Nenjam Trust is very pleased about the fact that they managed to reunite another needy individual back with their family and is happy to share that with you all.

~thank you
Eera Nenjam
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
பதிவை பார்த்தவுடன் எங்கள் நெஞ்சும் ஈரமாகியது யாரும் செய்ய முன்வராத பணியை செய்கிற தங்களுக்கு இறைவன் எப்போதும் துணைஇருப்பான்.. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்
த.ம 1வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment