******
[For English version, please scroll down]
https://www.facebook.com/
~ நன்றி (157/2013)
எந்த சுயநலமும் இல்லாமல் சமூக பொறுப்புணர்வோடு மனிநேயம் மிக்க நமது கடமைகளை செய்ய வேண்டும். அப்படி ஒரு எண்ணத்தோடு செயல்பட்டு வந்த நாங்கள் கடந்த ஆண்டு 23-4-2012 அன்று ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கப் பட்டது தான் எங்கள் ஈரநெஞ்சம் அமைப்பு. முறையாக இது அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. உலகில் யாரும் தனியாய் இல்லை. உற்ற துணையாய் பராமரிக்க நாங்கள் இருக்கிறோம் என்று செயல்படுவதோடு வரும் காலங்களில் ஆதரவற்றோர் என்று யாரும் இல்லை உறவாய் நாங்கள் இருக்கிறோம் என்ற நிலையை உருவாக்குவது தான் எங்கள் நோக்கம்.
சாலையோரங்களில் ஆதரவின்றி இருக்கும் முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, நோய் வாய்ப்பட்ட ஆதரவற்றவர்களை காப்பங்களிலும் மருத்துவமனைகளிலும் சேர்த்து பராமரித்தல், அவர்களில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களுக்கு இறுதி காரியங்கள் செய்தல், குடும்பத்தை விட்டு தவறுதலாக பிரிந்து விட்டவர்களை அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தல், ஆதரவற்றோர் காப்பகங்களில் இருந்து பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குதல், மேலும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்குதல் போன்ற உதவிகள், ரத்த தான முகாம் மற்றும் மரம் நடுதல் நிகழ்வுகள், இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்துதல், உடல் தான விழிப்புணர்வு முகாம்கள், வாரம் தோறும் காப்பங்களுக்கு உணவு வழங்குதல், மளிகை பொருட்கள் வழங்குதல், ஆதரவற்ற மகளிருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி தொழில் வசதி செய்துகொடுத்தல், போன்ற பல்வேறு சேவைகளை இந்த ஓராண்டில் நிகழ்த்தி இருக்கிறோம்.
தற்போது 23-4-2013 அன்றுடன் எங்கள் ஈரநெஞ்சம் முதல் ஆண்டு வெற்றிகரமாக நிறைவடைந்ததை ஒட்டி பயனுள்ள ஒரு செயல் செய்ய வேண்டும் என முடிவு செய்தோம். எனவே கோவை R.S.புரத்தில் உள்ள மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் துப்புரவு பணி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 28/04/2013 அன்று அங்கே சுவர்களுக்கு வெள்ளை அடித்தல், கழிப்பறைகள் சுத்தம் செய்தல், மரம் நடுதல், அங்கே உள்ள முதியவர்களுக்கு முடி திருத்துதல், நகம் வெட்டுதல், நற்சுவை உணவு வழங்குதல் போன்ற செயல்பாடுகள் ஈரநெஞ்சம் உறுப்பினர்களால் செய்யப்பட்டது. உணவு வழங்க நண்பர்கள் நன்கொடை அளித்தனர் என்பதையும் நந்தியோடும் மகிழ்வோடும் தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் ஆதரவற்ற இரு பெண்களுக்கு சுயமாய் தொழில் செய்து நல்ல முறையில் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தையல் எந்திரம் வழங்கப்பட்டது. காப்பகத்தில் உள்ள ஒரு சிறுவனுக்கு சிறுநீரக பிரச்சினைக்காக மருத்துவத்திற்கு பண உதவி செய்யப்பட்டது.
இதில் உறுப்பினர்கள் திரு. மகி மற்றும் உறுபினர்கள் திருமதி.சசிக்கலா, திரு. அன்பு, திரு.பரணி, திரு. அருண், திரு. தபசு ராஜ் திரு. ஜெகதீசன், திரு. கண்ணன், திருநங்கை. வைஷ்ணவி, திருநங்கை. பிரியா திருமதி.அஸ்மிதா, திருமதி.வசந்தா, செல்வி. சுதா ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் கோவை வலைப்பதிவாளர்கள் சங்கத்தை சேர்ந்த நண்பர்கள் கோவை சக்தி, கோவை சரளா, அகிலா, அனுசுயா ஆகியோரும் கலந்து கொண்டு பாராட்டினர்.
எங்கள் செயல்களுக்கு பல்வேறு வகையில் உதவிய நண்பர்களுக்கும், மாநகராட்சி காப்பகத்தில் துப்புரவு பணி செய்ய எங்களுக்கு அனுமதி அளித்த காவல்துறை ஆணையாளருக்கும், பத்திரிகை துறை நண்பர்களுக்கும், ஆதரவு தந்த காப்பக பணியாளர்களுக்கும், துப்புரவு பணிகளில் உதவி புரிந்த ஒரு சில துப்புரவு பணியாளர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இந்த செயல்பாடுகள் அனைவருக்கும் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஈரநெஞ்சம் அமைப்பின் நோக்கம் ஆகும். ஆதரவற்றவர்களுக்கு மனிநேயத்தோடு இது போன்ற உதவிகள் செய்வது நமது கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும். மேலும் முதியோர்களை கை விடாமல் பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும். மிக கஷ்டமான ஒரு சூழ்நிலையில் வாழ அவர்களை நாம் விட்டு விடக்கூடாது. அப்படி இருப்பவர்களுக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும்.
இது போன்ற செயல்களை பார்த்த பல நண்பர்கள் தாங்களே மனமுவந்து நாங்களும் உங்களோடு இணைந்து செயல்படுகிறோம் என்று சொன்ன போது எங்கள் அமைப்பின் நோக்கம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை மேலும் உயர்ந்தது. மனித நேயத்தை வளர செய்ய முடியும் என்ற விதை முளைத்தது போல் மகிழ்வாய் இருந்தது. இந்த விழிப்புணர்வு தான் எங்கள் நோக்கம். சக மனிதனின் துன்பத்தை பார்க்கையில் உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலே போதும். செயல் படுத்த வழி பிறந்து விடும்.
இன்னும் ஆண்டுகள் செல்ல செல்ல எங்கள் செயல் பாடுகள் குறைய வேண்டும் என்பதே எங்கள் மறைமுகமான நோக்கம். ஆதரவில்லாதவர்கள் என்று யாரும் இல்லை என்று ஆகி விட்டால் எதற்கு சேவை?
ஒவ்வொரு மனிதரும் தனால் இயன்றவரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும். தன்னை சேர்ந்தவர்களை பாதுகாக்க வேண்டும் என்று எண்ணினாலே இந்த லட்சியம் நிறைவடைந்து விட விடும்.
http://www.thehindu.com/
~நன்றி
The Hindu
Service to mankind with humanity and without selfishness formed the base on which the Eera Nenjam
trust was built. With this aim our trust was started on 23.4.2012. Eera Nenjam is a government
registered trust and is functioning effectively. No one is alone in this world, now and in the near future
since we are here to take care is our motto.
Eera Nenjam has involved itself in various activities for the past one year like taking care of the old
people who are found on roads, giving care to the mentally challenged, taking care of the diseased
and the desolate by giving them treatment in good hospitals, arranging funeral for the abandoned,
counseling those who have left their families due to various reasons and guiding them to go back to
their family, giving financial help to students who study from orphanages and also providing them with
their needs, blood donation camps, planting trees, free eye check up camps, camps on importance of
organ donation, providing food to old age homes and orphanages every week, providing groceries to
such homes, giving tailoring machines to desolate woman who find it hard to make their living and
many more.
Now since we have stepped in to our first yea, we decided that we should do something useful. Hence
we came up with the idea of doing service at the old age home at R.S Puram, Kovai. Painting the walls,
cleaning the rest rooms, planting of trees, grooming hair and nails of the old people and providing good
food were part of our activity on that day. We express our sincere gratitude with happiness to our
friends who provided funds for the food that was served.
Apart from these two destitute women were given tailoring machines with the aim of giving good life for
them. Fund was also provided for treating a boy who has problem in the kidney.
Members of the trust Mr. Magendran, Mr. Anbu, Mr. Barani, Mr. Arun, Mr. Thabasu Raj, Mr.
Jagadeesan, Mr. Kannan, Thirunangai. Vaishnavi, Thirunangai. Priya, Mrs. Ashmitha,Mrs.Sasikala Mrs. Vasantha, and
Ms. Sudha took part in these activities. Bloggers from Kovai Mr. Sakthi, Ms. Kovai Sarala, Ms. Akila, and
Ms. Anushiya also took part and appreciated the works of the trust.
Eera Nenjam takes this opportunity to express its sincere thanks to our dear friends who helped us
in various ways for our activities, the police officials who gave us permission to clean the corporation
maintained home for destitute, friends from the press, workers who supported us from the home, few
workers who helped us in the cleaning process and the people who provided the funds.
We believe that our activities will be an eye opener for others. Everyone should understand that doing
service to such destitute people is our responsibility. People should also know that forsaking old people
and leaving them to suffer in difficult living conditions is not humane. We should help such people.
Our confidence about the success of our trust grew when many of our friends were gladly willing to
join and be part of the trust on seeing our activities and we are sure that our motto will be successful.
We are happy with the though t that seed of humanity that we sowed will reap soon. Creating this
awareness among others is our aim.
The very thought of giving a helping hand to those who need it will surely show us a way to help them.
As years go by, we wish that the activities of the trust should be lesser. This is the hidden intention of
the trust because when there is no one left uncared there is no question of our service being needed.
Every human being should help the other person to his or her ability. If people are willing to take care of
their kith and kin then our aim will be achieved soon.
~ Thank you
EERANENJAM
Tweet | ||||
3 comments:
கோவை வலைப்பதிவாளர்கள் கோவை சக்தி, கோவை சரளா, அகிலா, அனுசுயா ஆகியோர் உட்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் ...! ஈரம் பெருகட்டும் ..!
உங்கள் சிறப்பான சேவை தொடரட்டும் வாழ்த்துகள் மகி!
Post a Comment