பால் என்பது
ரத்தம்...
அது போல
தேன் என்பது
பூக்களின் ரத்தம்..!
"பூக்கள்"
இறைவன்
எழுதிய
புன்னகை கவிதை..!
புன்னகை நிரந்தரம் இல்லையா ?
பூக்கள்
உதிர்ந்து விடுகிறது...
முட்கள்
மட்டும் நிரந்தரமாய் இருக்கின்றதே..?
உன்
புன்னகைக்கும்,
பூவுக்கும்
என்ன வித்யாசம் இருக்கிறது...
என்
தோட்டத்தில்
உன்
புன்னகைதான் பூத்திருப்பதை
கண்டு இருக்கிறேன்...
சுதாகரித்த பிறகுதான்
தெரியும்
அவையெல்லாம் பூக்கள் என்று..♥
பூக்கள் கூட கனமாக இருக்கிறது...
என் வேதனை எல்லாம்...
உலக அளவு உள்ள
உன்
ஞாபகம் அவ்வளவு லேசா..?
சுமக்கையில்
சுமையே இல்லையே ..♥