Showing posts with label அம்பு. காதல். Show all posts
Showing posts with label அம்பு. காதல். Show all posts

Tuesday, December 13, 2011

எல்லா மழையிலும் நனைகிறேன்...

உன்
நினைவுகளில் இருந்து
என்னால்
தப்பிக்க முடியாது..!
உன்
நினைவுகளுக்குள்ளேயே
ஒளிவது தவிர
வேறு வழியும்
இல்லை..♥


ஒரு
பறவையின்
இறகின் நுனி போன்ற
மென்மையானது,
பூக்களின் இதழ்கள்...
அதாவது,
உன்
இதழுக்கும் வார்த்தைக்கும் தொடர்பு போல..♥



என்னை
உன்னில் நனைய
வைத்து கவிதை
வரைய வைக்கிறது காதல் ..♥



ஒரு
குழந்தை மீது தாய்
கோவம் கொண்ட
மௌனத்திலும் தாய்மை இருக்கிறது..!
அதுபோலதான்
நீ
என் மீது
கொண்ட கோவத்திலும்
காதலை
காண்கிறேன் ..♥



என்னையே
உனக்கு பிடிச்சுருக்கு,
இதை
விட உன்னை எனக்கு
பிடிக்க காரணம் என்ன
வேணும்..!


புல்லாங்குழலில்
உள்ள செல்லும்
காற்று
இசையாவது போல..!
எனக்குள் செல்லும்
உன்
நினைவுகள் கவிதையாக
வெளிபடுகிறது..!


இந்த மழை போகட்டும்
அடுத்த
மழையிலாவது
நமக்கு
ஒரேகுடை கிடைக்க
வேண்டும்..♥



எல்லா மழையிலும்
நனைகிறேன்...
ஏதாவது
ஒரு துளியாவது
உன்
இதயத்தில் ஈரம் படியாதா..♥



பரந்த கடலில்
உன்
படகு மட்டும் தான்
பயணிக்க வேண்டும் என்று
அடம் பிடிக்கும்
ஆறறிவு மீன்
நான்..♥









Friday, October 07, 2011

விழப்போவது உன் காலடியில்...

காதல்
என் தலைக்கு மேல்...
உன் கையில் அம்பு...
குறி  காதலுக்கா..?
என் கழுத்துக்கா?
எதுவாயினும் சரி,
விழப்போவது உன் காலடியில் தானே..♥