Monday, February 17, 2025

இமைகளின் காதல்

*இமைகளின் காதல்* 

என் காதலியின் புகைப்படத்தை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருக்கும் வேளையில், 'நீ உன் காதலியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக எங்களைக் கட்டித் தழுவ விடாமல் தடுப்பது நியாயமா' என்று என்னைப் பார்த்துக் கேட்டன என் இமைகள்.

இது என்னடா புதுத் தடங்கல் என்று பதைத்தபடி, என் இமைகளிடம் கேட்டேன்  ‘ஏன்... நீங்களும் காதலிக்கிறீர்களா' என.

'ஆம்... பிறந்ததில் இருந்தே நாங்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம். அதனாலேயே நீ விழித்திருக்கும்போது நொடிக்கு ஒரு முறையும், நீ தூங்க ஆரம்பித்தால், கண் விழிக்கும் வரையும் கட்டித் தழுவி முத்தமிட்டபடியே இருப்போம்' என்றன இமைகள்.

ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால், தன் காதல் தானே வளரும் என்கிற ஆசையில் என் கண்களை கொஞ்சம் மூடி, இமைகள் இரண்டையும் கட்டித் தழுவ விட்டேன்.

மூடிய கண்களுக்குள் 
உள்ளே ஓங்கி வளர்ந்து காட்சி தந்தாள் என் காதலி.

அதற்குள் அறைக்குள் வந்த என் காதலி நான் வரும்வரை காத்திருக்காமல் எப்படி நீ உறங்கலாம் என்று என்னிடம் சண்டை போடுகிறாள் 😒

~மகி ~
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment