நான் மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கும் தமிழினி குழும நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
என்னை மகளிர் தின சிறப்பு போட்டிக்கு நடுவராகத் தேர்வு செய்தமைக்கு நன்றிதனை தெரிவித்துக்கொள்கிறேன்!
நம் மனதைக் கவர்ந்த காட்சிகளை, நம்மோடு சேர்ந்து பயணிக்க வைப்பது நாம் எடுக்கும் சில புகந்தைகள் (போட்டோகிராப்) தான். குகைகளில் ஓவியமாகவும், பாறைகளில் சித்திரமாகவும், பிறந்த புகைப்படங்கள் இன்று பரிணாம வளர்ச்சி பெற்று தாமி (செல்ஃபி) வரை வளர்ந்து இருக்கிறது.5ம் நூற்றாண்டு தொடங்கி இன்று கை பேசி காலம் வரை நிறைய, அழகிய, அற்புதமான, ஆச்சரியமூட்டும், விசித்திரமான படங்களை இந்த உலகம் தன் செருகேட்டில் (ஆல்பம் ) சேர்த்து வைத்திருக்கிறது.
கைக்குள் உலகத்தைக் கைப்பேசி கொண்டுவந்து சேர்க்கிறது. அந்த கைப்பேசி நாம் அனைவரையும் ஒரு சிறந்த புகைப்படக்காரர்களாகவும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதுக்குச் சான்று நாம் எடுக்கும் படங்கள்.
சாதாரண மழைத் துளியின் அழகை அசாதாரண அழகாகக் காட்டும் வல்லமை கொண்டது புகைப்படக் கருவிகள். கருவிகளைக் கலைநயம் மிக்க ஒன்றாய் மாற்றும் திறன் கலைஞனுக்கே உண்டு.
நாம் காணும் காட்சிகளுக்கும் மனதுக்கும் எப்படி நெருங்கிய தொடர்பு உண்டோ அது போலத் தான் நாம் பதிவு செய்யும் புகைப்படங்களும்.
சில படங்கள் மனதை லேசாக்கும், (இயற்கைக் காட்சிகள்) சில படங்கள் நகைச்சுவையாக இருக்கும், சில படங்கள் முக சுளிப்பைத் தரும், சில கோவத்தைத் தூண்டும். இப்படி நம் உணர்வுகள், நாம் காணும் கட்சியைப் பொறுத்து இருக்கிறது. காண்பதை எல்லாம் அழகாகக் காட்டும் அதிசய கண்ணாடியை கைக்குள் வைத்திருக்கும் நாம், பார்க்கும் காட்சியை நல்ல ரசனையோடும் இருக்கும் நவீன நுட்பத்தைப் பயன் படுத்தி வித்தியாசமாகக் காட்ட முயற்சி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
குழுவில் பதியயப்பட்ட படங்களைப் பார்க்கும் போது, ஆகா! சிறப்பு! அருமை! என்று இருந்தது, சிலவற்றைப் பார்க்கும் போது இன்னும் சிறப்பாக எடுத்து இருக்கலாமோ எனத் தோன்றியது. ஒரே மாதிரி படங்கள், பழைய படங்களைத் தவிர்த்தால் மேன்மேலும் போட்டியை மெருகேற்றியிருக்கும்.
போட்டிக்கான படங்களில் என் பார்வை கோணத்தில் மதிப்பிட்டுத் தேர்வு செய்திருக்கிறேன். சிறந்தவைகளில் சிறந்ததைத் தேர்வு செய்வது கடினம்தான் என்றாலும் சில விஷயங்களைக் கருத்தில் கொண்டு தேர்வு செய்து உள்ளேன்.
ரசிகனே சிறந்த கலைஞன்.
ஒரு எதார்த்தமான நிகழ்வை மாற்றுக்கோணத்தில் மிக துள்ளியமாக படம் பிடித்து காட்டுவது என்பது ஒரு கலைஞனின் திறமை. அவ்வாறு நான் ரசித்த புகைப்படங்களை உங்கள் முன் வைக்கிறேன்.
....
இதிலிருந்து பரிசுகளுக்கான படங்கள் தேர்வு செய்து உள்ளேன் .
முதல் பரிசு:
திருமதி ரஞ்சிதப்ரியா
இரண்டாம் பரிசு (இருவருக்கு)
1. திருமதி. கல்யாணி நாகேஷ்வரன்,
2. திருமதி.ஜெஸிந்தா
மூன்றாம் பரிசு:
திருமதி மரு. தமயந்தி முரளி
.....
சில புகைப்படங்கள் வரலாற்றையே மாற்றி உள்ளது . கோபம் , க்ரோதம் , வன்மம் போன்ற குணங்களை மாற்றக்கூடிய சக்தி புகைப்படங்களுக்கு உள்ளது. ஆகையால் நாம் எடுக்கும் புகைப்படம் மற்றவர்களை மகிழ்விப்பதோடும், மலர்ச்சிப்பதோடும், மனதோடு பேசும்படியும் இருக்க வேண்டும். மனதை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.
இங்கு உள்ள அனைவருமே ஆர்வமிக்கவர்கள் தான் , ஆனால் நீங்கள் உங்கள் எழுத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றிர்களோ அவ்வளவு முக்கியத்துவம் புகைப்படம் எடுப்பதிலும் காட்டினால் கவிஞர்களாகிய நீங்கள் கலைஞர்களாகவும் காட்சியளிப்பீர்கள்.
அதேபோல் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுவது என்பது எந்த பொருளை எங்கிருந்து எடுக்கிறோமோ அதை அங்கேயே வைத்தாலே போதுமானது. கொஞ்சம் ரசனையும் நேரமுமிருந்தால் வீட்டை மிக அழகாக காட்டலாம்.
வீட்டு பராமரிப்பு நேர்த்தியில்...
முதலிடம்:
திருமதி. மரு. சரயு
இரண்டாமிடம்:
திருமதி மரு. புனிதவதி
(விரைவில் சிலிண்டர் டியூபை குழாய் போட்டு மாற்றி அமையுங்கள்)
மூன்றாமிடம்:
திருமதி. உமா திரு
(அடுப்பாங்கரையை மட்டுமே பதிவிட்டிருந்தாலும் பழமை மாறாமல் அங்கிருக்கும் அம்மியும் ஆடுகல்லும் அருமை!)
தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நன்றி!
~ஈரநெஞ்சம் மகேந்திரன்
Tweet | ||||
No comments:
Post a Comment