Thursday, June 17, 2021

கை வீசம்மா கை வீசும் குட்டீஸ் பாட்டுக்கு சொந்தக்காரர்.

"கை வீசம்மா கை வீசு...!"

"நிலா நிலா ஓடி வா...!"

"சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு...!"

இவையெல்லாம் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட குழந்தைப் பாடல்கள்.

இவைகளை இயற்றியவர் "மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா" என்கிற எம்.சி.ராஜா!

குழந்தைகளுக்கு அவர் எழுதிய விடுகதைகளும் சிறப்பானவை. உதாரணத்திற்கு சில;

1) காட்டில்  ஒரு துளி ரத்தம்.அது என்ன?
(விடை: குன்றிமணி)

2)போவான் வருவான்.
ஒற்றைக் காலில் நிற்பான்.அவன் யார்?
(விடை:கதவு)

3)கொக்கு நிற்க, குளம் வற்றும்.அது என்ன?
(விடை: அகல்விளக்கு)

காமராஜருக்கு முன்பே  "பெருந்தலைவர்" என்று அழைக்கப்பட்டவர் இவர்!

பெரும் அரசியல் தலைவராகவும் இருந்துக்கொண்டு, சிறார் இலக்கியத்திலும் கவனம் செலுத்தியுள்ளார்!

சிறார் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்று சொல்லலாம்.

வேலூர்,ஊரீஸ் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தவர் என்பது தனிப்பட்ட மகிழ்ச்சி!!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment