கடந்த வருடம் 19/04/2014 அன்று கோவை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே காவலர் மூலமாக பிரதீப் 23 மனநிலை சரி இல்லாத நிலையில் மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர்.
பிரதீப் கூறும் பொழுது " நான் எந்த நிலையில் இங்கு வந்தேன் என்று எனக்கு இதுவரை தெரியாது . ஆனால் இங்கு எனக்கு அன்பும் அனுசரணையும் அதிகம் கிடைத்தது . இங்கு உள்ள முதியோர்களை பார்த்துக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது இங்கு உள்ள சேவையைக் கண்டு மெய் சிலிர்த்து போனேன். அதனாலேயே இவர்களை விட்டுப் பிரிய மனம் இல்லை. என்னை முழுமனிதனாக மாற்றி உறவினர்களுடன் இணைத்து வைக்க ஈரநெஞ்சம் அறக்கட்டளை மற்றும் மாநகராட்சி காப்பக நிர்வாகிகள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு நான் பெரிதும் கடமைப்பட்டு இருக்கிறேன் . இங்கு இருந்ததில் நான் தமிழும் நன்கு கற்றுக் கொண்டேன். இப்போது நான் மகிழ்ச்சியாக அண்ணனுடன் ஊர் செல்கிறேன் " என்று சொல்லிக் கிளம்பினார்.
பிரதீப் அவர்களை அவரது உறவினருடன் சேர்த்துவைக்க உதவிய அணைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் . ~ஈரநெஞ்சம்
மனநிலை பாதித்த நிலையில் பிரதீப்
அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை பிரதீப் பிடம் விசாரித்து பல தகவல்கள் சேகரித்து அவருடைய உறவினர்களை தேடும் முயற்சியுடன் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் முயற்சியையும் மேற்கொண்டது.
https://www.facebook.com/photo.php?fbid=345269842264644&set=pb.100003448945950.-2207520000.1428237057.&type=3&theater
சுமார் ஒருவருடமாக ஈரநெஞ்சம் அறக்கட்டளை மேற்கொண்ட பெரும் முயற்சியின் பயனாக பிரதீப்பிற்கு உடல் நலனும் தேறியது . அதோடு அவரது உறவினர் முகவரியும் கண்டுபிடிக்கப்பட்டது
மேற்கு வங்காளம் பீர்பாரா ( Birpara ) பக்கத்தில் ராம்தாலா (ராம்ராஜ்தாலா) என்னும் பகுதியில் உள்ள டீ எஸ்டேட் கம்பெனிகளுக்கு பிரதீப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து மெயில் மூலம் அனுப்பப்பட்டு வந்தது . இதனைக் கவனித்த சில கம்பெனிகள் பிரதீப்பின் புகைப்படத்துடன் அந்த ஊர் பகுதியில் உள்ள சுவர்களில் நோட்டிசாக ஒட்டி பிரதீப்பின் உறவை தேடும் முயற்சியில் அவர்களும் ஈரநெஞ்சம் அறக்கட்டளையோடு கைக் கோர்த்தனர். அதன் மூலம் பிரதீப்பின் உறவினர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டனர் . உறவினர்கள் கிடைத்துவிட்டார்கள் என்ற மகிழ்ச்சி அடைந்தாலும் கூட அவர்கள் அதிக வெளியுலக வாழ்க்கை அறியாதவர்கள் . ஆதலால் அவர்களிடம் பிரதீப் பற்றி கூறியதில் அவர்களுக்கு கோவை பற்றியும், இந்த ஊர் எங்கு உள்ளது என்பது பற்றியும் அவர்களுக்கு விளங்கவில்லை . அவர்கள் படிப்பறிவும் போதிய வெளி உலக வாழ்க்கையும் அறியாதவர்கள் போன்று தெரிந்தது . இதனால் பிரதீப்பின் உறவினர்களை கோவைக்கு வரவழைப்பத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு வந்தது.
ஈரநெஞ்சம் அறக்கட்டளை தொடர்ந்து பிரதீப்பை அவர்களது உறவினர்களுடன் ஒப்படைக்கும் முயற்சியை மேற்கொண்டு வந்தது . இதன் பலனாக கடந்த வாரத்தில் பிரதீப்பின் சகோதரர் மார்டின் என்பவர் தொடர்பில் கிடைத்தார் . அவரிடம் விபரத்தை சொன்னதும் தம்பியை அழைத்து செல்ல உடனடியாக இன்று கோவைக்கு வந்தார் . பிரதீப் அவரை சந்தித்ததும் ஆனந்த கண்ணீர் மல்க தொலைத்த உறவை கண்முன் கண்டதும் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது நம்மையும் கலங்கவைத்துவிட்டது.
பிரதீப்பின் சகோதரர் மார்டின் கூறும்போது " கேரளாவில் என்னோடு தான் பிரதீப் வேலைப் பார்த்து வந்தான். கடந்த வருடம் விடுமுறைக்கு ஊருக்கு செல்வதாக சொல்லிக் கொண்டு சென்றவன் வீடு போய் சேரவில்லை. அலைபேசி வசதி எங்கள் ஊரில் சரிவர இல்லாததால் இவன் காணாமல் போனதும் எனக்கு தெரியாது கடந்த மாதம் நான் விடுமுறைக்கு ஊருக்கு போனபோதுதான் பிரதீப் அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது. எனது பெற்றோர்களிடம் ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் பிரதீப் பற்றி அவ்வப்போது பக்கத்து வீட்டினரின் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவார்கள். ஆனால் எங்கிருந்து பேசுகிறார்கள் என்பது தெளிவாக என் பெற்றோருக்கு புரியவில்லை . என்னிடத்திலும் தகவல் தெரிவிக்க முடியாத நிலை அதனால் தான் தகவல் தெரிவிக்க வில்லை என்றும் கூறினார்கள் . பிரதீப்பை எப்படி கண்டுபிடிப்பது என்ற கவலையில் இருந்த போதுதான், கடந்தவாரம் மீண்டும் பக்கத்து வீட்டிற்கு அலைபேசியில் ஈரநெஞ்சம் என்று சொல்லி பிரதீப் பற்றி கூறினார்கள் . அதனாலேயே பிரதீப் இருக்கும் இடம் தெரிந்து உடனடியாக தம்பியை அழைத்து செல்ல வந்தேன் " என்றார்.
குணமடைந்த பிரதீப்
பிரதீப் அவர்களை அவரது உறவினருடன் சேர்த்துவைக்க உதவிய அணைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் . ~ஈரநெஞ்சம்
Tweet | ||||
No comments:
Post a Comment