புள்ள உன்ன பாத்த பின்னதான் எனக்கு புத்தி மாறிடுச்சே
உந்தன் ஒத்த பார்வையில்தான் நானும் செத்து பொழைக்கிறேனே...
உச்சி மண்டை மசுரு நின்னு தவிக்கிறதே
நெஞ்சுக்குழி கனவு சுமந்து உன்னை சுத்தி வருதே.
பால்கடலில் திரட்டி வந்த பதார்த்தமடி
உன்னை பெத்தவளை போல தாலாட்டிதான் என் கண்ணும் உறங்குமடி
கன்னுக்குட்டி துள்ளி வரும் குழந்தை மனசடி உனக்கு
நான் குத்தமேதும் பண்ணிபுட்டா அம்மாபோல தண்டிக்கணுமடி நீ ...
எத்தனையோ ராகங்களில் பாட்டும் பொறந்திருக்கு
அட உன்னைப்போல பாட்டுப்பாட இளையராஜாவுக்கும் தெரியல
அம்மா அவ தந்த பால் வாசம் உந்தன் அன்பு வாசமடி
அவளுக்கு ஈடு சொல்ல யாருமில்ல நீயொருத்தியடி
பெத்தவளும் நீ வந்துட்டா என்னை விட்டு போயிடுவா
நான் கட்டையில போறவரை பெத்தவளாய் நீதானடி
எத்தனையோ ராஜாக்களை கண்ட தேசமடி
உன்னைப்போல ராசாங்கம் யாரும் பண்ணலையடி
ஏ புள்ள உன் நெனப்பு உச்சிக் குளிருதடி
உன் நினைப்பில் நானில்லைனா வெந்து மடிவேனடி
வார்த்தையிலே வல்லவராம் வைரமுத்து
உன் வார்த்தையிலே வாயடைத்து நின்னு திகைப்பாரு
சொக்கநாதன சொக்கவைக்கும் சொக்க தங்கமடி
உன் உள்ளத்துக்கு சொக்கநாதனும் பொருத்தமில்லையடி
என்னை தேடி இங்க வந்த சொர்க்க ரதமடி நீ
உனக்கு ஈடு நானா என்னும் நெனப்பு என்ன உசத்துதடி
பூட்டிவைத்த மல்லி வாசம் உந்தன் நேசமடி
எனக்கு உன்னை விட்டா வேற சொந்தம் ஏதும் இல்லையடி..!
~மகி
Tweet | ||||
No comments:
Post a Comment