Showing posts with label நீ. Show all posts
Showing posts with label நீ. Show all posts

Wednesday, March 07, 2012

கண்களில் அல்ல..♥

உன்னை
என் கண்களில்
வைக்க வில்லை..!
கண்களாக
வைத்திருக்கிறேன்..♥

Tuesday, November 29, 2011

நீ வருவதாக சொல்லிப்பார்...

புத்தகம் இருந்தால்தான்
நூலகமா..?
நீ
நூலிடை கொண்ட
நூலகம்..♥

 
நீ
நிலாவிடம்
வருவதாக சொல்லிப்பார்...
உன்னை
சந்திக்கும் சந்தோசத்தில்
பூமியை போல
நிலாவும்
தனக்கு தானே
சுற்ற ஆரம்பித்துவிடும்..♥


 
நார்வே நாட்டில்
இரவு இல்லையாம்...
இதை
கேட்டதும்
சலிப்பே இல்லாத
உன்
அன்பு முகம் தான்
நியாபகத்திற்கு
வந்தது..♥


 
உனக்கு
இவ்வளவு தற்பெருமை
ஆகாது...
எல்லோரிடமும்
என் கவிதை அழகு என்கிறாய்
நீ
அழகி
என்று யாருக்கும்
தெரியாதா..?


 
இரவினிலும்
வானவில் தெரியுமா
என வியக்க வேண்டாம் ...
அவள்,
அவளுடைய
காய்ந்த துணிகளை
எடுக்க
மாடி உலா
வந்திருக்கிறாள்..♥


 
 
பசி
வந்தால்
பத்தும் மறந்து போகும்..!
காதல்
வந்தால்
அந்த
பசியும் மறந்து போகும்..♥


 
 
உன்
குடைக்குள்
புகமுடியாமல்
தவிக்கும் மழைத்துளி போல..!

உன்
இதயத்திற்குள்
புகமுடியாமல்
தவிக்கும் என்னை போல..!

உன்
நிழலுக்குள்
புகமுடியாமல்
என்
நிழலும் தவிக்கிறது..♥


 
கனகாம்பரம் பூவில்
வாசம்
இல்லை...
கனகாம்பரம்
பூ போட்ட
என்
சட்டையில்
உன் வாசம்..♥

 
அது
புள்ளியல்ல
என் கண்கள்..!
நீ
போடும் கோலத்தில்
என்
கண்கள் சிக்கி கொண்டது..♥


 
நீ வந்து போகும்
கனவில்
உன்னை படம் எடுத்து
உன்
அருகினில் வைத்து
நீ
அழகா இல்லை
கனவினில் வரும்
நீ
அழகா என்று பார்க்க வேண்டும்..♥

 

Tuesday, November 01, 2011

எனக்கு நீ...

கவிதைக்கு
பொய் அழகு..!
எனக்கு
நீ
அழகு..♥

Saturday, October 29, 2011

கவிதை தான் நீ..♥

நான்
வெறும் எழுத்துதான் ..!
அதில்
வரும்
கவிதை

நீ..♥

Thursday, October 13, 2011

நீ வேண்டும்...

அடிக்கடி "போ"
என்கிறாய் போய்விடுகிறேன்..!
அனால் ஒரு நிபந்தனை...
நான்
போகும் இடத்தில்
நீ
வேண்டும்...
இருப்பாயா..?

Wednesday, October 12, 2011

கனவு,,,

கண்கள் இல்லாதவனுக்கு
வரும்
கனவு போலத்தான்
நீ எனக்கு...!



Tuesday, October 11, 2011

நீ எங்கே..?

உனக்காக
திறக்கும் கதவிலும், ஜன்னலிலும்
காற்றிதான்
வருகிறது...
நீ
எங்கே..?

Sunday, October 09, 2011

இதயத்தில் நீ...

இதயத்தில்
நீ
இருக்க...
இன்னொரு சாமி எதற்கு..?
கோவிலுக்கே
போவதில்லை..!

Friday, September 30, 2011

கப்பலாக நீ...

படைப்பின் விந்தையை 
பார்...
கடலையே மூழ்கடிக்கும்
கப்பலாக 

நீ
இருக்கிறாய்...♥

Sunday, September 25, 2011

கனிமரம்...

மரத்தில்
வேர், கிளை, இல்லை, காய், கனி, பூ,
இவைகள் இருக்கும்...
உன் மரத்தில்
வேர், கிளை, இல்லை, காய், பூ
இவையெல்லாம்
கனியாகவே இருக்கும் 

கனிமரம்...♥

Saturday, September 10, 2011

கவிஞனா? காதலனா?


நான்
கவிதை எழுதுவதால்
என்னை
கவிஞன்
என்கிறாய்...
உண்மையை
சொல்லடி...
உன்னை பற்றி குறிப்பு
எழுதினால்
காதலன் என்று
தானடி சொல்லணும்
எதற்கு
கவிஞன்

என்று சொல்லணும்..♥

Friday, September 09, 2011

கவிதை...♥

இலவம் என்பது
 காயும் இல்லை,
கனியும் இல்லை
பஞ்சு...
இவள் என்பவள்
கனியும் இல்லை,
கண்ணியம் இல்லை
கவிதை...♥

நீ வராமல் போனால்..♥

கார்த்திகை
போனால் மண்ணில்
மழை இல்லை...
நீ
வராமல்
போனால் என்னில்
வசந்தம் இல்லை..♥

Saturday, September 03, 2011

வசந்தம் நீ...!

வசந்தம் வணங்கும்
வசந்தம்
நீ...!
வசந்தங்கள் வாழும்
சொர்கமும்
நீ...!