Showing posts with label கனவு. Show all posts
Showing posts with label கனவு. Show all posts

Monday, February 17, 2025

இமைகளின் காதல்

*இமைகளின் காதல்* 

என் காதலியின் புகைப்படத்தை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருக்கும் வேளையில், 'நீ உன் காதலியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக எங்களைக் கட்டித் தழுவ விடாமல் தடுப்பது நியாயமா' என்று என்னைப் பார்த்துக் கேட்டன என் இமைகள்.

இது என்னடா புதுத் தடங்கல் என்று பதைத்தபடி, என் இமைகளிடம் கேட்டேன்  ‘ஏன்... நீங்களும் காதலிக்கிறீர்களா' என.

'ஆம்... பிறந்ததில் இருந்தே நாங்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம். அதனாலேயே நீ விழித்திருக்கும்போது நொடிக்கு ஒரு முறையும், நீ தூங்க ஆரம்பித்தால், கண் விழிக்கும் வரையும் கட்டித் தழுவி முத்தமிட்டபடியே இருப்போம்' என்றன இமைகள்.

ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால், தன் காதல் தானே வளரும் என்கிற ஆசையில் என் கண்களை கொஞ்சம் மூடி, இமைகள் இரண்டையும் கட்டித் தழுவ விட்டேன்.

மூடிய கண்களுக்குள் 
உள்ளே ஓங்கி வளர்ந்து காட்சி தந்தாள் என் காதலி.

அதற்குள் அறைக்குள் வந்த என் காதலி நான் வரும்வரை காத்திருக்காமல் எப்படி நீ உறங்கலாம் என்று என்னிடம் சண்டை போடுகிறாள் 😒

~மகி ~

Friday, May 18, 2012

நீ வரும் அழகை பார்த்து...

உனக்குத்தான்
வெட்கப்பட  தெரியும்
என
நினைக்காதே..!
கனவில்
நீ வரும் அழகை
பார்த்து
பலமுறை
கூச்சப்பட்டு
நானும் கண்விழித்து
இருக்கிறேன்..♥

Wednesday, December 21, 2011

கனவு கூட காண்பது இல்லை ..!

கழிவு நீர் ஓரமாக ஒரு ராஜாங்கம்..!
இரவு விளக்கு நிலா தரும்..!
கொசுக்களின் தாலாட்டு தரும்..!
கல்லும் கிழிந்த துணியுமே தலையணை..!
போர்வைக்கி ஆயிரம் ஜன்னல் கொண்ட சேலையும் வெட்டியும்..!

இதிலும்
இவர்களுக்கு
தேச வளர்ச்சிக்கான
கனவு வரும்...
தேசத்துக்குதான்
இவர்களின் வளச்சிக்காக
கனவு கூட
காண்பது இல்லை ..!


Friday, November 18, 2011

பழகி போய்விட்டது...

உன்னை
கனவில் கண்டே
பழகி போய்விட்டது...
கனவு என்றே
நினைக்கிறேன்
நீ
எதிரில்
நின்ற போதும்..♥

Monday, November 14, 2011

பழகி போய்விட்டது...

உன்னை
கனவில் கண்டே
பழகி போய்விட்டது...
கனவு என்றே
நினைக்கிறேன்
நீ
எதிரில்
நின்ற போதும்..♥

Thursday, November 10, 2011

நேற்று இரவு
கனவில் தேவதைகள்
வந்தன...

உன்
அழகின் ரகசியத்தை
கேட்க...

நான் தூங்குவது
போல காட்டிக்கொண்டேன்..♥

Friday, November 04, 2011

நிஜத்தில் கொண்டுவந்தால் என்ன..?

பசியோடு
உறங்குகிறேன்
என்று உனக்கு எப்படி தெரிந்தது..?
கனவில்
நீ கொண்டுவந்த
உணவை நிஜத்தில்
கொண்டுவந்தால்
என்ன..?

Monday, October 31, 2011

நிம்மதியை கெடுக்க...

நீ
நிம்மதியாக உறங்குகிறாய்...
என்
நிம்மதியை கெடுக்க
கனவில்
உன்னை
அனுப்பிவிட்டு..♥

Friday, October 28, 2011

அக்கறையை

காய்ச்சலோடு
இருந்தேன்
வந்தாய் உறங்கவைத்தாய்...
உறங்குகிறேனா
என்று
கவனிக்க
கனவில் வந்த
உன்
அக்கறையை
நான் 
என்ன என்று சொல்ல..♥

Tuesday, October 25, 2011

விழாகோலம்..♥

வாய்க்கும்
போதெல்லாம்
வந்து போ...
கனவில்
நீ
வந்தநாளில் எல்லாம்
விடியல்
விழாகோலம்..♥

Saturday, October 22, 2011

கண்ணீருக்கும் இடம் உண்டு ...

உன்னால்
கண்ணில் வருவது
கனவு
மட்டும் அல்ல...
உன்
புறக்கணிப்புக்கு பிறகு
கண்ணீருக்கும்
இடம் உண்டு
என்பது 
தெரிந்துகொண்டேன்..!

Friday, October 21, 2011

உனக்கு பயந்து...

உனக்கு பயந்து
என்
கனவுகள்
என்
உறக்கத்துக்குள்
புகுந்துக்கொண்டது ..♥


Wednesday, October 12, 2011

கனவு,,,

கண்கள் இல்லாதவனுக்கு
வரும்
கனவு போலத்தான்
நீ எனக்கு...!



Tuesday, October 04, 2011

கனவு...

நீ 
இல்லாமல்
பல பகல்கள் முடிந்தது 

உண்டு...
ஆனால்
உன் கனவில்லாமல்
ஒரு
இரவு கூட 

விடிந்தது இல்லை...♥

Friday, September 30, 2011

கனவு காணமுடியுமா ?

உறங்கினால் தான்
கனவு
காணமுடியுமா ?
என்
கனவே நீதானடி
நான்
உறங்கினால்
உன்னை
எப்படி
காணமுடியும்..♥

கனவு பயிற்சி ...

என்
இரவுகளில்
நடக்கும்
உன் கனவு
பயிற்சி தான்
என்னை உறங்க வைக்கிறது...!

Friday, September 23, 2011

ஏமாற்றம்

என்
கனவு
ஒவ்வொரு முறையும்
உன்னை தேடி
வருகிறது...
ஏமாற்றத்தோடு
திரும்பி வருகிறது ...♥

Thursday, September 01, 2011

பிச்சை பாத்திரம்...♥

என்
உறக்கங்கள்
உன்
கனவுக்காக
தயவு கேட்க்கும்
பிச்சை பாத்திரம்...♥