Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, February 17, 2025

இமைகளின் காதல்

*இமைகளின் காதல்* 

என் காதலியின் புகைப்படத்தை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருக்கும் வேளையில், 'நீ உன் காதலியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக எங்களைக் கட்டித் தழுவ விடாமல் தடுப்பது நியாயமா' என்று என்னைப் பார்த்துக் கேட்டன என் இமைகள்.

இது என்னடா புதுத் தடங்கல் என்று பதைத்தபடி, என் இமைகளிடம் கேட்டேன்  ‘ஏன்... நீங்களும் காதலிக்கிறீர்களா' என.

'ஆம்... பிறந்ததில் இருந்தே நாங்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம். அதனாலேயே நீ விழித்திருக்கும்போது நொடிக்கு ஒரு முறையும், நீ தூங்க ஆரம்பித்தால், கண் விழிக்கும் வரையும் கட்டித் தழுவி முத்தமிட்டபடியே இருப்போம்' என்றன இமைகள்.

ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால், தன் காதல் தானே வளரும் என்கிற ஆசையில் என் கண்களை கொஞ்சம் மூடி, இமைகள் இரண்டையும் கட்டித் தழுவ விட்டேன்.

மூடிய கண்களுக்குள் 
உள்ளே ஓங்கி வளர்ந்து காட்சி தந்தாள் என் காதலி.

அதற்குள் அறைக்குள் வந்த என் காதலி நான் வரும்வரை காத்திருக்காமல் எப்படி நீ உறங்கலாம் என்று என்னிடம் சண்டை போடுகிறாள் 😒

~மகி ~

Sunday, October 18, 2015

மரணவாசல்


வாழ்வெனும் புத்தகத்தில் 
கடைசி பக்கத்தில் கொட்டை எழுத்தில் 
மிகப்பெரியதாக முற்றுப்புள்ளி  
வைத்து அதற்கு  
" மரணம் " 
என்று அர்த்தம் கொடுத்திருக்கிறது.

ஏனோ அத்தருணம் வரும் வரை 
பலருக்கு அது தெரிவதில்லை 

சிலர் படிக்கும் பொழுதே  
அர்த்தங்கள் புரியாமல் 
கடைசிப் பக்கம் புரட்டி  
முற்றுப்புள்ளியை 
தொட்டு விடுகிறார்கள்.

சிலருக்கு புத்தகம் 
80 பக்கம் கொண்ட சிறு புத்தகம் போல 
இருக்கிறது .

சிலருக்கு 
வெற்றுத்தாளில் முற்றுப்புள்ளி மட்டும் 
இருக்கிறது.

சிலருக்கு பள்ளி குழந்தைகள் சுமக்கும் 
பொதி மூட்டை போல 
புத்தகம் இருக்கிறது.

சிலருக்கு யாரோ படிக்கும் புத்தகம் 
கை மாறி யாரோ படித்துக் கொண்டு 
இருக்கிறார்கள் .

சரி அதென்ன முற்றுப்புள்ளி?

முற்றுப் புள்ளி என்பதுதான் 
மரணம் என்று சொன்னேனே.

அது கண்ணில் 
படும் பொழுது உணர்த்தப்படுகிறோம் 
புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த வரிகளை  
எழுத்துப் பிழையாய் படித்த 
தவறுகளை.

வாழ்க்கை பக்கங்களை 
பிழை இல்லாமல் படித்தவர் 
என்றும் முற்றுப்புள்ளி 
அடித்து திருத்தப்பட்டது என்றும் 
யாருக்கும் இல்லை 

வாழ்க்கை பக்கங்களை 
கிழித்து விட்டான் என்று 
எவனுக்கும் 
உடனடியாக முற்றுப்புள்ளியை 
கொடுத்ததும்  இல்லை .

புரியவில்லையா..?

வாழ்க்கையை வென்றவன் என்று சொன்னவரையும்  மரணம் விட்டு வைத்தது இல்லை 

பிறர் வாழ்கையை கொன்றவரையும்  மரணம் விட்டு வைத்தது இல்லை .

நல்லவன் கெட்டவன் 
என எவனையும் 
மன்னித்து விட்டு வைப்பது  இல்லை 
மரணம்.

என்ன ..?
நல்லது செய்தும் பயன் இல்லை 
என்றால் 
மரணம் என்பது என்னவாக இருக்கும்?

ஞானிகளும் மேதைகளும் 
மரணத்தை பற்றி விளக்கினாலும் 
" மரணத்திற்கு  பின்? " 
என்ற கேள்வி கேட்டுக் கொண்டே  
தான் இருக்கிறது மனம் .

மரணம் எவனையும் விட்டு வைக்காது என்றால் 
வாழ்க்கை படித்ததற்கு என்னதான் அர்த்தம் இருக்கும்?

படித்தவனும் தேறவில்லை 
படிக்காதவனும் தேறவில்லை 
தேர்வு மட்டும் உறுதி அதில் தோல்வி மட்டும் முடிவாக..
என்ன இது தேர்ச்சி இல்லாத 
பரீட்சை எழுதியே ஆகவேண்டுமா ?

இல்லை... 
இந்த தேர்வில் 
தேரியவரையும் மரணம் அழைத்து செல்கிறது 
தேராதவரையும் மரணம் அழைத்து செல்கிறது 

அப்படி எங்கே அழைத்து செல்கிறது 
சென்றவனை பார்த்தால் கேட்டுவிடலாம்..
எங்கிருந்து வந்தோம் என்ற கேள்விக்கே இன்னும் பதில் 
தெரியவில்லையே ...

ஒன்று மட்டும் புரிகிறது 
மரணம் என்பது 
ஒரு இடத்திற்கு செல்லும் வாசலாகத்தான் இருக்கும். 
அதற்காகத்தான் இந்த தேர்வு போல...

அந்த வாசலை அனைவரும் கடந்துதான் 
போகவேண்டும் என்பது கட்டளையாக இருக்கிறது... 

இன்னொன்று விளங்குகிறது  

வாழும் நாளில் அர்த்தங்களோடு 
வாழ்ந்தவனுக்கு 
மரணவாசல் தலை வணங்கி வரவேற்று அழைத்து செல்கிறது  .

அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்தவருக்கு 
மரணம் ஒரு தலை குனிவாக இருக்கிறது.

~மகி

Wednesday, August 12, 2015

நேற்றைய சவங்களுடன் நாளைய சவம்



ஒருவன் பிறந்தநாளில் கூடும் கூட்டம்
அவனை பெற்றவரின் அங்கீகாரத்தை சொல்லும்

ஒருவன் இறந்தநாளில் கூடும் கூட்டம்
அவன் வாழ்ந்த வாழ்க்கையை  சொல்லும்

வாழ்க்கை தத்துவம் எல்லோருக்கும் தெரியும்
இருக்கும் பொழுது இல்லாத மரியாதை
இல்லாத பொழுது இருக்கும்

பெற்றது பதினாறாக இருந்தாலும்
அனாதையாக இறந்தவர்க்கு
அடுத்த ஜென்மத்திலாவது
அம்மரியாதை கிடைக்கட்டும்.

வருவதற்கு நாலு கால்
போவதற்கு  எட்டு கால்
இவர்களுக்கு மட்டும் இரண்டு கால்

வாழ்க்கையில் வென்ற சவத்திற்கு
நாளைய சவங்கள்  கூட்டம் வேறு
அதன் அர்த்தம் வேறு

வாழ்க்கையே இல்லாமல் போன சவத்திற்கு
நாளைய சவம் ஒன்னு மட்டுமே வரும்
அதன் அர்த்தம் வேறு

நான் நாளைய சவம் ,
இன்றைய சவத்தை சுமந்து
மயான வீட்டில்
நிரந்தரமாக உறங்க வைத்தாயிற்று,

ஆடிய மனிதன்
ஆடாத தொட்டிலில்
உறங்குகிறான்
ஆறறிவு ஓய்ந்தது
ஆட்டம் அடங்கியது.

முடிந்தது வேலை
திரும்பும் வேளை
சற்று திரும்பிப் பார்க்கிறேன்

அரைஞாண்கயிற்றை கூட விட்டு வைக்காத இடம்
இது

ஆனாலும்
சாதிக்கொரு மேடை
அனாதைக்கு ஒரு மேடை

அம்மணமாய்
இருந்தாலும் இறந்தாலும்
அவனவனுக்கு மதம் தான் முக்கியம்.

வாழும் போதும் பிரிவு
மயானத்திலும் மதங்கள் ரீதியாக  பிரிவு...

சிரித்துக் கொண்டேன்...

சில ஆவிகள் என் நக்கல் சிரிப்பை
அடையாளம் கண்டு கொண்டது...

ஒரு ஆவி
"ஏய் நாளைய பிணமே" என்றது

நான்
"என்ன" என்றேன்
"யார் நீ" என்றேன்

"நேற்றைய முதலாளி " என்றது

"இன்று" என்றேன்

"விற்பனைக்கு  எதுவுமே இல்லை" என்றது.

தொழில் பித்து தலைக்கு ஏறி
மண்டையை போட்டு இருக்கும் போல என நினைத்துக் கொண்டேன்.

இன்னொரு ஆவி
"என்னை ஏன் இறைவன் படைத்தானோ
வாழ்க்கை  சிறையில் அடைந்து வழிதெரியாமல்
பல முறை தோற்று போய் இங்கே வந்தேன்" என்று புலம்பியது.

"வாழத் தெரிந்தவனுக்கு
புள்ளியில் கூட வானம் பார்ப்பான்.
உனக்கு வானமே புள்ளிப் போலத்தான்
அதனால் தான் இந்த புலம்பல்"
என்றேன்.

ஏதோ அரசியல்வாதி ஆவி போல
"இங்கு வந்து இடைதேர்தல் வைத்தால் என்ன ?"
என்றது.

" செத்தாலும் உன் ஆசை அடங்கலையா ? "

ஒரு பெண் ஆவி
" நான் பட்ட பாடு
யாரும் படக்கூடாது சாமி " என்றது.

"இங்கு ஆண்கள் படும் பாடு
நீ ஆணாய் பிறந்து பார்" என்றேன்.

ஒரு அறிவாளி ஆவி
" மரணம் இது என்ன தண்டனையா ? " என்றது.

" இல்லை இது தான் நியாயம் " என்றேன்.

அன்று நான் சுமந்த வந்த குழந்தை சவம்
கண் விழித்துக் கேட்டது

" நான் செய்த பாவமென்ன ?" என்று.

கண் கலங்கிவிட்டது...
யோசிக்க வைத்தது...

" நடமாடும் பிணங்களும்  இங்கு உண்டு
அவைகள் மத்தியில் பிறந்தது தான் " என்றேன்.

" 100 தொடுவதற்கு முன் 90 ல்
இங்கு வந்து விட்டேனே இது தகுமா ? "
என்றது ஒரு கிழம் சவத்தில் இருந்து வெளிவந்த ஆவி.

" உனக்கு பகத் சிங் தெரியுமா " என்றேன் ?

" தெரியும் " என்றது.

" அவர் சவம் ஆகும் போது வயது 21
எவ்வளவு வாழ்ந்தோம் என்பதல்ல
எப்படி வாழ்ந்தோம் என்பதே
வாழ்க்கை "  என்றேன் .

ஒரு ஆவி வந்து " நல்லவர்களெல்லாம் சீக்கிரம்
வந்து விடுகிறார்களே " என்று கேட்டது .

" இருந்திருந்தால் அவர்களும்
கெட்டவர்களாகி இருப்பார்கள் " என்றேன்.

ஏதோ தற்கொலை செய்து  கொண்ட ஆவி போல
நக்கலாக சிரித்துக் கொண்டே என்னை அழைத்து,
"நல்லவேளை நான் தற்கொலை செய்துக் கொண்டேன் "
என்றது

கோழை கூட பேச்சு என்ன
வேண்டி இருக்கிறது  என்று  திரும்பி விட்டேன்...

கோபத்தோடு
ஒரு ஆவி...

"படைத்தவனுக்கு இறப்பு  இல்லையா ?
நமக்கு மட்டும் எதற்கு இறப்பு ?"
என்றது .

சொன்னேன்...

" நமக்கு மட்டும் சாவு இல்லாமல் இருந்திருந்தால் இறைவனையும் இரையாக்கி இருப்போம் "

~மகேந்திரன் 

Sunday, November 23, 2014

உலகம் அழியப்போகும் இன்னும் சில தினங்களில்



வானம் உடையுமா ?
நிலா மண்ணில் விழுமா ?
கடல் கரைத்தாண்டுமா ?
எரிமலை வீட்டின் அடுப்புக்குள் புகுமா ?
இமயம் இல்லாமல் போகுமா ?
இந்த பூமி உருண்டு ஓடுமா ?

இந்த பூமிக்கு முடிவு எப்படி இருக்கும்
என மனிதர்களுக்கு பெரும் பயம் கலந்த ஆவல் !

அடுத்தநாள் நாளிதழில்
இன்னும் இரண்டு நாளில்
நிலா உடையும்
உடைந்து
நிலா துகள்கள் பாறைகள் பூமியை தாக்கும்
என அறிவிப்பு...

மண்ணை பார்த்து நடந்த பெண்களும்
பெண்ணை பார்த்து நடந்த ஆண்களும்
இரண்டு நாளாக நிலாவை பார்த்தபடியே நடக்கிறார்கள்...

நிலாவைப் பற்றி வர்ணித்த பேனாக்கள் எல்லாம்
இப்போது நிலாவை பற்றி வரலாறு எழுத ஆரம்பித்தது....

நிலா கவிஞர்கள் கண்ணில்
நிலா பெரும் பாரத்தை தூக்கி வைத்தது...

பெண்ணை நிலா என கூறியவர்கள்
நிலா தான் பெண் என மாற்றி பேச ஆரம்பித்தனர்...

இரண்டு நாள் கழிய சில மணிநேரம்
பாக்கியாக வந்தது

கிட்டத்தட்ட பூமியின் முடிவு
உறுதியானது.

நிலா உடையும் சத்தம்
நீலாம்பூர் வரை செவி அடைத்தது...

அனைத்து தொழிற்சாலையும்
விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது...

வெளியூர் வேலை வாசிகள்
முண்டியடித்து குடும்பத்துடன் சேர்ந்து போக
பேருந்தைத் தேடி...

பங்களாவாசிகள் பதுக்காத மீதிப் பணத்தை
பதுக்க பாதாளம் தேடி...

சில காதல் வாசிகள்
இறுதி முத்தத்தைத் தேடி...

போதை வாசிகள்
மரண வலி தெரியக் கூடாது என
டாஸ்மாக் தேடி...

பாச வாசிகள்
இறுதி கட்ட பாசம் காட்ட
தொலை பேசி தேடி...

ஆன்மீக வாசிகள்
சிறப்புப் பிரார்த்தனை என
தேவாலயம் , கோவில், மசூதி தேடி...

சாலை எங்கிலும்
மக்கள் நெரிசல் சாலை விதிகளை மீறி
மாரத்தான் ஓட்டம்...

டாஸ்மாக்கில் குடிக்கும் கணவனை
வீட்டிற்கு வரச்சொல்லி அழுகை...

துடிக்கும் இதயம் எல்லாம் துடி துடிக்க
ஆரம்பித்துவிட்டது...

முன் பதிவு செய்து கட்டிக்கொண்ட
கல்லறையில் அடுத்தவன் புகுந்துவிட கூடாது
என தன் கல்லறையை தேடி...

இன்னும் சில நிமிடம் தான்
என அறிவிப்பு வந்தது...

தொலைகாட்சி சிறப்பு செய்தி

அழிவைப் பற்றி அறிவிப்பு வாசிப்பாளர்
கடைசி நிமிடம் என தெரிந்தும் முகத்தில் மேக்கப்பும்
புது சேலையும் செயற்கையாய் ஒட்டி வைத்த சிரிப்புடன்...

போக்குவரத்து நெரிசலில் சிக்கி நடந்தே வீட்டிற்கு
ஓடும் ஒபாமாவையும்...

தூய்மை இந்தியாவிற்காக
விளம்பரத்திற்கு நடிக்க
வந்த நடிகைகளையும் நடிகர்களையும்
மரணபயம் முகத்தில் விளையாட
விளக்குமாறை கீழே போட்டுவிட்டு ஓடுவதை
காட்டிக்கொண்டு இருந்தது...

நிலா பாறைகள் பூமியை நோக்கி
கண்ணில் தெரியும் தூரம்...

சில நொடிகள்

உலகமே மரண பயம் வாயை அடைத்துகொண்டது
பூமியெங்கும் சப்தம் நின்று நிசப்தம் பரவியது...

வீட்டை தேடும் பதட்டத்தில்
ஒரு தாய் தன் கைக் குழந்தையை மறந்தாள்...

குழந்தை பசிக்கு அழுதது
பூமியின் நிசப்தத்தால் அழுகை
சிங்காநல்லூரில் இருந்து சிங்கப்பூர்வரை
எதிரொலித்தது...

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த
பசு ஒன்று குழந்தை அருகில் வந்தது
குழந்தை பசுமாட்டின் காலைபிடித்து
மடிதேடி வாய் வைத்தது...!

~மகி

Wednesday, May 07, 2014

உன் உள்ளத்துக்கு சொக்கநாதனும் பொருத்தமில்லையடி



புள்ள உன்ன பாத்த பின்னதான் எனக்கு புத்தி மாறிடுச்சே
உந்தன் ஒத்த பார்வையில்தான் நானும் செத்து பொழைக்கிறேனே...

உச்சி மண்டை மசுரு நின்னு தவிக்கிறதே 
நெஞ்சுக்குழி கனவு சுமந்து உன்னை சுத்தி வருதே.

பால்கடலில் திரட்டி வந்த பதார்த்தமடி
உன்னை பெத்தவளை போல தாலாட்டிதான் என் கண்ணும் உறங்குமடி

கன்னுக்குட்டி துள்ளி வரும் குழந்தை மனசடி உனக்கு
நான் குத்தமேதும் பண்ணிபுட்டா அம்மாபோல தண்டிக்கணுமடி நீ ...

எத்தனையோ ராகங்களில் பாட்டும் பொறந்திருக்கு
அட உன்னைப்போல பாட்டுப்பாட இளையராஜாவுக்கும் தெரியல

அம்மா அவ தந்த பால் வாசம் உந்தன் அன்பு வாசமடி
அவளுக்கு ஈடு சொல்ல யாருமில்ல நீயொருத்தியடி

பெத்தவளும் நீ வந்துட்டா என்னை விட்டு போயிடுவா
நான் கட்டையில போறவரை பெத்தவளாய் நீதானடி

எத்தனையோ ராஜாக்களை கண்ட தேசமடி
உன்னைப்போல ராசாங்கம் யாரும் பண்ணலையடி

ஏ புள்ள உன் நெனப்பு உச்சிக் குளிருதடி
உன் நினைப்பில் நானில்லைனா வெந்து மடிவேனடி

வார்த்தையிலே வல்லவராம் வைரமுத்து
உன் வார்த்தையிலே வாயடைத்து நின்னு திகைப்பாரு

சொக்கநாதன சொக்கவைக்கும் சொக்க தங்கமடி
உன் உள்ளத்துக்கு சொக்கநாதனும் பொருத்தமில்லையடி

என்னை தேடி இங்க வந்த சொர்க்க ரதமடி நீ
உனக்கு ஈடு நானா என்னும் நெனப்பு என்ன உசத்துதடி

பூட்டிவைத்த மல்லி வாசம் உந்தன் நேசமடி
எனக்கு உன்னை விட்டா வேற சொந்தம் ஏதும் இல்லையடி..!

~மகி

Sunday, May 05, 2013

இப்போ உனக்கு நிம்மதியா...

உனக்கு என்ன
உன்
நினைவுகளை
எனக்கு அனுப்பிவிட்டு
நீ
நிம்மதியாக உறங்க
போய்விட்டாய்...

இங்கு
உன் நியாபகங்கள்
என்னை
படுத்தும்பாடு
உனக்கு
எங்க தெரியபோகிறது..!

-மகி

Sunday, March 24, 2013

கொள்ள வந்தாயா..? கொல்ல வந்தாயா..? ~மகியின் கவிதைகள்

நீ
காதல் கொள்வதற்கு வந்தாயா
காதலால் கொல்வதற்கு வந்தாயா

என புரியவில்லை...

அருகில் இருப்பாய்
பார்வைகளால் கொல்வாய்...

தூரத்தில் இருப்பாய்
ஞாபகத்தால் கொல்வாய்...

யாரடி நீ மோகினி..?

 

 

நட்பின்
இலக்கணம் அனைத்தும்
நிறைந்த காதலியடி
நீ...

உனக்கும் எனக்கும் போட்டி வரும்...
சண்டை வரும்...

எல்லாவற்றிக்கும்
உன்னை விட்டுக்கொடுத்து
என்னையே
ஜெய்க்க வைக்கிறாயடி
நீ..!

 

உன்னைவிட
நான்
ஒன்றும்
அவளவு அழகு இல்லை...

ஆனாலும்

உன்னோடு
நான்
இருக்கும்
ஒவ்வொரு கணமும்
இந்த
உலகிலேயே
நான் தான் பேரழகனாய்
தெரிகிறேன்..! 

 

உன்
துன்பங்களுக்கு
என்
தோள்களுக்கு மட்டுமே
பாரமாக இருக்க வேண்டும்
என்று
நீ
விண்ணப்பிக்கும் போது

இருந்த
துன்பங்கள் எல்லாம்
எங்குப்போய் தொலைந்ததோ..!?

 

 

 

உன்னுடைய
கோவங்கள் எல்லாவற்றையும்
எவனோ
ஒருவனுக்காக
சமாதானம் ஆகிறது...

அந்த
எவனோ ஒருவன்
நான் என இருக்கும் போது
உன்னை
நேசிக்காமல்
எப்படி அடி இருக்க
முடியும்..! 

 

உனக்கு
எதெல்லாம் பிடிக்காது
என்று
எனக்கு கற்றுத்தரும்
உன்
கோவம்
எனக்கு ரொம்ப பிடிக்கும்..!

 

சிலநேரம்
உன்னை நினைப்பதை கூட
நிறுத்திவிட்டு
துடிக்க பார்க்கிறது
என் இதயம்...

வெட்டியாக
எதற்கு துடிக்கனும்
என்று தெரியவில்லை...

உன்னை நினைத்தாலே
நூறுவருடம் வாழ்வேனே..! 

Friday, December 07, 2012

காதல் வானிலே

கன்னாபின்னான்னு கிறுக்கும்
இந்த
கவிதையெல்லாம் என்னுடையது...
அதன்
காப்பி ரைட்
உன்னுடையது..!

கன்னாபின்னான்னு கிறுக்கும்
இந்த 
கவிதையெல்லாம் என்னுடையது...
அதன்
காப்பி ரைட்
உன்னுடையது..!
~மகி 
 
ஆயிரம்
பொய் சொல்லி
கவிதை எழுதினாலும்
நீ
என் காதலி என்ற
உண்மையில் தான்
முற்று பெரும்.!

ஆயிரம்
பொய் சொல்லி
கவிதை எழுதினாலும்
நீ
என் காதலி என்ற
உண்மையில் தான்
முற்று பெரும்.!
~மகி 
 
 
உன்
வருகைக்கு பிறகு ,
கோடைகாலம்
இலை உதிர்காலம் என்றெல்லாம்
எதும் எனக்கு இல்லை .,
எல்லா காலமும்
வசந்த காலம் தான் ..!

உன் 
வருகைக்கு பிறகு ,
கோடைகாலம் 
இலை உதிர்காலம் என்றெல்லாம் 
எதும் எனக்கு இல்லை .,
எல்லா காலமும் 
வசந்த காலம் தான் ..!
~மகி 
 
வரம்
தருவதால் மட்டும்
தெய்வமாகி விட முடியாது.
உன்னை
போல பாசமும் காட்ட
தெரிந்திருக்க வேண்டும்..!

வரம் 
தருவதால் மட்டும் 
தெய்வமாகி விட முடியாது.
உன்னை 
போல பாசமும் காட்ட 
தெரிந்திருக்க வேண்டும்..!
~மகி
 
 

Sunday, September 16, 2012

இறப்பதற்காகவே வாழ்கிறேன்~கவிதை

அடம் பிடித்து அழுத
குழந்தைக்கு
மிட்டாய் கிடைத்த சந்தோசம்
எனக்கு இப்போது
உன் அழைப்பை கண்டு..!
 
 
அற்புதமான காதலை
மட்டும் அல்ல
அதி அற்புதமான
வேதனைகளும்
உன்
மௌனம்தான் தருகிறது..!
 
 
உன் கோவம் ஒவ்வொன்றிலும்
நான்
இறப்பதற்காகவே வாழ்கிறேன்
என்பதை
உணர்கிறேன்..!
 
 
உன்
செவ்விதழ் முத்ததிற்காக
பித்து பிடித்தவன் போல
ஆகி விட்டேன்..!
இதுதான் செவ்வாய் தோசமா..!
 
 
திட்டும் அம்மா ,
முறைக்கும் அப்பா ,
உன் பார்வை
நியாபகம் படுத்துகிறது...
வீட்டை மறந்து
உன்னோடு பேச நினைக்கிறன்
அது பிடிக்கலையா
உன்
பார்வையை மாற்று..!
 
 
உன்னையே
சுற்றிவந்த நான்
அவளை சுற்றவைததும்
நீ தான் இறைவா
கோவத்தில்
என்னை கைவிட்டுவிடாதே..♥

 
 
என்
புன்னகை பூவே...
உன்
புன்னகையில்
தெய்வீக அன்பு தவழ்கிறது...
பூவே
நீ
புன்னகைத்துக்கொண்டே
இரு...
நான்
வழிபடும் தெய்வம் நீ..!
 
 
 
 
 
 
 
 

Sunday, September 02, 2012

கதறிக்கொண்டே இருக்கும் ...

தென்றல்
அலங்காரம் செய்து
உனக்காக காத்திருக்கிறது
உன் பூங்கன்னதை வருடி முத்தமிட
நீ வராவிட்டால் தென்றல்
புயலாக மாறப்போகிறது
வந்திவிடு பூ பெண்ணே
தென்றலோடு நானும்
காத்திருக்கிறேன்..!
 
என்னுடைய
சிந்தனையில்
வரும் வரிகள் எல்லாம்
முந்தியடித்துக்கொண்டு புறப்பட்டு
வருகின்றன...
உன்னை வர்ணிக்க முதலில் யார்
கவிதையாக பிரப்பதேன்று..!
 
நாளை உலகின் கடைசி நாள்
என்றாலும்
என்
காதல் உன்னை காக்க
கதறிக்கொண்டே இருக்கும் ...

Friday, August 24, 2012

பூங்காவில்...

பூங்காவில்
ஒரு பூ என்னிடம்
உன்னை காட்டி இந்த
பூவிற்கு மட்டும்
எப்படி கால் முளைத்தது

என்று கேட்டது...
அந்த
பூவிற்கு
நீ கால் முளைத்த
பூ என்று சொல்லி
புரியவைப்பதற்குள்
எனக்கு போதும் என்றாகி விட்டது..♥
மழையில் நனைய கூடாது
என்று
குடைபிடித்து போகிறாய்...
உன்னை நனைக்க
முடியாத வேதனையில்
வானம் அழுது
கொண்டிருக்கிறது..♥

Tuesday, July 24, 2012

மனசு

 எவ்வளவு தான்
எச்சரிக்கையாக இருந்தாலும்
களவு போகும்
மனசை காப்பாற்ற
முடிவதே இல்லையே..!

Sunday, June 10, 2012

நிறை வேறா ஆசை...

என் நிறை வேறா ஆசை பல
அதில் இதுவும் ஒன்று...
ஒரு
மாலை பொழுதில்
உன் மடியில் தலை சாய்ந்து
உறங்க வேண்டும்...
இதை உன்னிடம் கேட்டால்
நீ வெட்கத்துடன் சம்மதித்து விடுவாய்...
ஆனால்
அதில் ஒரு கவலை
விடியல் வந்து
நமக்கு தொல்லை கொடுக்குமே...
அதனால் தான்
இதுவரை உன்னிடம்
அதை கேட்க்காமலேயே இருக்கிறேன்..♥


Tuesday, June 05, 2012

கனவு தேர்...

என்
இரவு வீதியில்
உறக்கம் வருகிறதோ
இல்லையோ..!
தினம்
உன் கனவு தேர்
பவனி தவறுவது இல்லை..♥

Friday, May 18, 2012

நீ வரும் அழகை பார்த்து...

உனக்குத்தான்
வெட்கப்பட  தெரியும்
என
நினைக்காதே..!
கனவில்
நீ வரும் அழகை
பார்த்து
பலமுறை
கூச்சப்பட்டு
நானும் கண்விழித்து
இருக்கிறேன்..♥

Monday, May 07, 2012

கருப்புகொடி காட்டுகிறதோ..♥

முன் அறிவிப்பு இல்லாமலே
என்
மீது யுத்தம் செய்யும்
உன்
விழிகளுக்கு
உன்
இமைகளே
கருப்புகொடி காட்டுகிறதோ..♥


Thursday, April 26, 2012

சில அடி தள்ளி இருந்தும்

பல மைல்களுக்கு அப்பால்

இருந்தாலும் தன் துணையை

அடையாளம் கண்டுக்கொள்ளும்

பெண் பட்டாம் பூச்சி...

சில

அடி தள்ளி இருந்தும்

ஏனடி என்னை கண்டும் காணமல்

...நீ ?



Thursday, April 19, 2012

வெறும் சாதாரணமாக...

நீ
உயிரைவிட
உயர்ந்தவள்....
ஆனாலும்
வெறும் சாதாரணமாக
உன்னை
உயிரே என்றுதான்
அழைக்க முடிகிறது..♥

Thursday, March 22, 2012

இதில் ஒரு கவலை

எத்தனையோ
உன்
நினைவுகளை நான் சுமக்கிறேன்...
அதில்
ஒன்று கூட சுமையாகவே இல்லை...
இதில் ஒரு கவலை
உன்
நினைவுகளில் ஒன்று கூட
எடை மதிப்பிட முடியவில்லையே..!

Friday, March 09, 2012

இதழ் திறப்புவிழா...

நீ
இனிக்கும்
பனி மழை...
நான் குடிப்பேனா .?
குளிப்பேனா.?
தலைகால் புரியாமல்
இருக்கிறேன்..♥

 
உன்னை விட
உன் கோவம் எனக்கு பிடிக்கும்...
அது தான்
மற்றவர்களை அழகாக
காட்டுகிறது..♥
 
உனக்கு
இதழ் திறப்புவிழா
நடத்தினால்தான்
என்னோடு பேசுவாய..!