Showing posts with label ஆயிரம் கவிதை. Show all posts
Showing posts with label ஆயிரம் கவிதை. Show all posts

Sunday, January 01, 2012

உன்னோடு பேச,உன்னோடு வாழ..!

வீணையை
கையில் குடுத்துவிட்டு
விரல்களை விறகாக்கி பார்க்கிறது
"காதல்"



வைத்தியம்
செய்யப்போவது
நீ
என்றால்...
உன்
மடியிலேயே
மயங்கிகிடக்க
நான் தயார்..!


நீ
மனம் வீசும்
மலரல்ல...
மலர்
வீசும் மனம்...



நீ
நிறைகுடம் தூக்கி
செல்கிறாய்..!
நான்
ததும்பிக்கொண்டு
இருக்கிறேன்..♥



காதல் தரும்
இன்பம்
சில வருடம் தொடரும்..!
காதல் தரும்
துன்பம்
சில ஜென்மங்கள்
தொடரும்..!



எல்லோருக்கும்

சூரியன் உதிக்கும் விடியல் ஆகும்...!


எனக்கு

உன் கனவு களையும் வேளைதான் விடியல்..!


உன் நினைவுகள் என்னிடம்
இருக்கும் வரை ..
நீ என்னிடம் இல்லை என்றாலும்
பறவை இல்லை ..



என்
கவிதைக்கு
எழுத்துப்பிழை நீ ...
நீ
இல்லாமல்
நான் கவிஞன் இல்லை ...♥

நல்லவேளை
நீ
நீயாகவே இருக்கிறாய்
கனியாக
இருந்துதால்
வேரோடு விழுங்கி
இருப்பேன் ..!


உன்
நினைவு மட்டும்
இருந்தால்
போதும்...
என்
நிழலுக்கு
கூட மரணம் கிடையாது..!



என்
ஆயுள் ரேகை
உன்னால் தான் வளர்கிறது .
அதை
எந்த இடத்தில் வேண்டுமானாலும்
துண்டிக்க
உனக்கு மட்டுமே
உரிமை உண்டு..♥


உன்
நினைவு மட்டும்
இருந்தால்
போதும்...
என்
நிழலுக்கு
கூட மரணம் கிடையாது..!


ஏ...
அழகிய கப்பலே...
உன்னால்
கவிழ்ந்த கடல்களில்
நானும் ஒன்று..!



உன்னோடு பேச கவிதை இருக்கிறது...
உன்னோடு வாழ கனவு இருக்கிறது...



ஒரு
புத்தகத்தில்
முதல் பக்கத்தில்
உன் பெயரை
வாசித்துவிட்டேன்...
அடுத்த பக்கம்
புரட்டவே மனம்
இல்லை..♥

Wednesday, November 02, 2011

உருக எனக்குள் இதயம்...

ஒளிக்காக
உருக
மெழுகை இருப்பது போல ..!
உனக்காக
உருக
எனக்குள் இதயம் இருக்கிறது ...♥


Friday, October 21, 2011

சக்கரம் நான்..!

என்
வாகனம் நீ..!
உன்
சக்கரம் நான்..!
உனக்காக
சுழல்வது தான்
என்
பிறப்பு..!

Sunday, October 16, 2011

கன்னக்குழி...

எங்கள்
ஊரு வழக்கம்
புதைப்பதுதான்...
அதனால்  தான்
என்
முத்தங்களுக்கு
உன்
கன்னக்குழியில்
இடம்
கேட்கிறேன்...♥

Wednesday, October 05, 2011

பொம்மையாகிறேன்...

நீ
விளையாடும்
பொம்மையாகிறேன்...
அப்போதாவது
தினம்
தினம்
என்னை கவனிப்பாயா..?

Sunday, October 02, 2011

போற்றி போற்றி...♥

நீ வரசொல்லிதான் வந்தேன் ...
நான் வந்த பிறகுதான் தெரிந்தது
வர சொன்னது நீ இல்லை
உன் ஏமாற்றம் என்று...
உன் ஏமாற்றம் செய்த்த குற்றம்
சமாதானத்திர்க்காக நீ தந்த முத்தம்...
உன்
ஏமாற்றத்திற்கு
என்னுடைய
போற்றி போற்றி...♥

செவிகள் செவிக்கும் காதல்..!

விழிகள்
பார்த்தது இல்லை...
செவிகளுக்கு
உன்னை
நன்றாக
தெரியும்..!
இது கண்கள் கண்ட காதல் அல்ல..!
செவிகள் செவிக்கும் காதல்..!

Tuesday, September 27, 2011

மனங்களும் உருமாறும்...

சிர்ப்பியின்
கையில் போகும் கல்
என்னவாகுமோ...
அது
போலதான்
காதலை தேடும்
மனங்களும்
உருமாறும்..♥

Monday, September 26, 2011

பெண் என்பவள் சூரியனா , நிலாவா...!

பெண் என்பவள் சூரியனா , நிலாவா...!
சூரியன் என்ற பெயரை பார்த்தால் ஒரு ஆண் போலதானே தெரிகிறது...
சூரியனின் குணத்தை வைத்து பார்க்கும் பொது ஒரு பெண் என்று சொல்லலாமா ...?
பெண்ணிற்கு அமைதி, தெளிவு, கோபம், வெட்கம் இவ்வகை குணம் இருக்கிறது ,
சூரியனை போலவே...!
விடியும் பொழுது சூரியன் எவ்வளவு அமைதியாக மலர்கிறது..!
விடிந்தபிறகு பாருங்க சூரியன் எவ்வளவு தெளிவா இருக்கும் என்று..!
மதிய நேரம் சூரியனின் கோபம் யாரால் தாங்க முடிகிறது..!
மாலை நேரம் சூரியனின் வெட்கப்படுவதை பார்க்க எவ்வளவு அழகாக இருக்கு இல்லையா..!
இவையெல்லாம் பார்க்கும் பொது சூரியன் ஆண் பெயர் கொண்ட பெண் போலதானே தெரிகிறது...!


Sunday, September 25, 2011

அதற்க்கு பெயர் காதல்...♥

என்னை பற்றி நான்
அறிந்ததைவிட நீயும் ...
உன்னை பற்றி நீ
அறிந்ததைவிட நானும் ...
அறிந்து கொள்ள
ஆசை பட்டால்
அதற்க்கு பெயர்
காதல்...♥

கனிமரம்...

மரத்தில்
வேர், கிளை, இல்லை, காய், கனி, பூ,
இவைகள் இருக்கும்...
உன் மரத்தில்
வேர், கிளை, இல்லை, காய், பூ
இவையெல்லாம்
கனியாகவே இருக்கும் 

கனிமரம்...♥

நீ காத்திருந்தால்...

உன்
காதலிக்காக
நீ
காத்திருந்தால்
என்ன
செய்திருப்பாய்,
தரையை
உதைத்திருப்பாய்...
கடிகாரத்தை பார்வையாலேயே
கடிதிருப்பாய்...
நான்
என்னவளுக்காக
ஒரு ஆயுள்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..♥

Friday, September 23, 2011

ஸ்பரிசம்...

இருந்த ஒரு
நம்பிக்கையும்
உன்
ஆறுதலை தேடி
நடுத்தெருவில்
நிற்கிறது..!
உன்
பார்வையில் ஸ்பரிசத்தை
காட்டி போவாயா...?

பொக்கிஷம்...

நீ
எப்போதும்
எனக்குள்...
தொலைந்து போன
பொக்கிஷமாகவே இருக்கிறாய்..♥

Thursday, September 22, 2011

கை அசைத்து...

நீ
எனக்கு கை அசைத்து
திரும்பும் நொடி...
என்
வாழ்வில் கடைசி
நொடியாகாதா...♥

Wednesday, September 07, 2011

ஆயிரம் கவிதை...♥

உன்
புன்னகையை பார்த்தாலே
ஆயிரம்
கவிதை வரும்...
ஆனால்
அதை இரசிப்பதால்
கவிதை
எழுதும் யுத்தி
மறந்து போகிறது..♥