Showing posts with label ஆதரவு. Show all posts
Showing posts with label ஆதரவு. Show all posts

Tuesday, November 03, 2015

மனைவியால் கைவிடப்பட்ட மாற்றுதிரனாளி குடும்பத்திற்கு ஈரநெஞ்சம் உதவி

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
(559 / 28-10-2015)


திருப்பத்தூரை சேர்ந்த 39 வயதான கலைசெழியன் என்ற ஆட்டோ ஓட்டுனர் சர்க்கரை நோயின் காரணமாக கடந்த ஜனவரி 2015 ல் தனது இரு கால்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரது மனைவி பிரிந்து விடவே தனது இரண்டு குழந்தைகளுடன் தன பெற்றோருடன் வசித்து வந்தார். வறுமை மற்றும் வயது காரணமாக அவரது பெற்றோராலும் கவனித்து கொள்ள முடியா சூழ்நிலை ஏற்பட்டது. எனவே அவர் தனக்கு உதவுமாறு ஈரநெஞ்சம் அறக்கட்டளையை தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டார்.
அவருக்கு செயற்கை கால்கள் பொருத்தியும் நடக்க இயலாது என்ற காரணத்தால் அவருக்கு வேறுவகையில் உதவி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படது. அதன்படி அவருக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரும் வகையில் ஈரநெஞ்சம் அறக்கட்டளை மூலம் மளிகைக்கடை வைத்து தர முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று 28-10-2015 திருப்பத்தூரில் அவருடைய இருப்பிடத்திற்கு அருகிலேயே கடை மற்றும் மூலதனம் உதவி வழங்கப்பட்டது. மற்றும் அவரது குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகளும் வழங்கப்பட்டது.
ஒருவருக்கு தாமாக முன்வந்து செய்யும் உதவி என்பது தவமின்றி கிடைக்கும் வரம் போன்றது. அந்த வகையில் கலைசெழியனின் நிலை பற்றி அறிந்ததும் இவருக்கு உதவிட ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு உறுதுணையாக நிதி உதவி செய்ய முன்வந்த திரு. வெங்கடேஷ், திரு. சிவா மற்றும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் உரித்தாக்குகிறோம். இவர்களில் உதவிக்கு வெறும் நன்றி மட்டும் ஈடாகாது. கலைசெழியன் அவர்களின் மகிழ்வில் ஈரநெஞ்சம் அறக்கட்டளை பங்கு கொள்கிறது இதற்கு முழு காரணமும் உதவி செய்த இந்த நண்பர்களையே சேரும்.
~ஈரநெஞ்சம்
www.facebook.com/eeranenjam

Mr. Kalaichezhiyan, age 39 was an Auto driver. Due to Dialysis he was lost his both legs in last January, 2015. So his wife left him. He was living with his parents with two children. Due to poor and old age, they unable to taking care of them. He has no source or survive. So, he requested Eeranenjam trust to help for his life.
As per the requisition, Eeranenjam trust decided to help him. But helping artificial legs was failure to him. So Eeranenjam decided to arrange a provisional shop to economy source. As per the same today 28-10-2015 a provision near by his home was arranged and investment of provisional things also sponsored. And new dresses were sponsored to his children for Diwali.
We have express our express our heartiest thanks to Mr. Venkatesh & Mr. Siva and friends who were helped Eeranenjam trust to arrange this shop for Mr. Kalaichezhiyan. When they know about him, they voluntarily sponsor fund to help him. Its really appreciable and we wish them once again.
Eeranenjam trust.

 நன்றி தினமலர்.காம் 
~~~~~~~~~~~~~~~~~~~

கலைச்செல்வன் வீட்டில் தீபாவளி...

http://www.dinamalar.com/news_detail.asp?id=1375425

Sunday, March 22, 2015

கால் இழந்த 5 வயது சிறுமிக்கு உதவி ~ஈரநெஞ்சம்

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services
*********************************************************************
(434/ 21-03-2015)
தஞ்சாவூரைச் சேர்ந்த மெஷராஜ் கனி என்ற பெண்ணின் மகள் ஆப்ரின் 5 வயது சிறுமி இரண்டு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் தன்னுடைய வலது கால் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டு கால் அகற்றப்பட்டது.
கால் இழந்த துக்கம் முடிவதற்குள் அவளின் தந்தை அப்துல் ஹக்கீம் அவர்களை நிராதரவாய் விட்டுவிட்டு எங்கோ தலைமறைவாகி விட . யாரும் ஆதரவற்ற நிலையில் இருந்த அவர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளை தொடர்பு கொண்டனர். அவர்களின் நிலைமையை கண்ட ஈரநெஞ்சம் அறக்கட்டளை அச்சிறுமிக்கு இலவசமாக செயற்கை கால் பொருத்த முன்வந்து.இன்று 21/032015 அச்சிறுமிக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாது சிறுமி வளர வளர செய்கை காலின் அளவு மாறும். அப்படி புதிதாக பொருத்தப்படும் அத்தனை செயற்கை கால்களின் செலவும் ஈரநெஞ்சம் அறக்கட்டளையே பொறுப்பு ஏற்றுக் கொண்டது எனபதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
~ஈரநெஞ்சம்

Monday, December 08, 2014

ஈரநெஞ்சம் சேவை ஆதரவற்ற பாட்டியின் தலையில் புழுக்களின் கூடு

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services .
****************************************************************
( 389 / 7-12-2014 )

இன்று 7-12-2014 கோவை, கணபதி, சத்தி சாலையில் ஆதரவற்ற நிலையில் செல்லம்மா 80 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக கோவை மாநகராட்சி காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது தலையில் பல காயங்கள் ஏற்பட்டு இருந்ததோடு அவற்றில் புழுக்கள் பிடித்து துர்நாற்றம் வீசிய நிலையிலும் இருந்தது. அதை சுத்தம் செய்து அவருக்கு மேலும் சிகிச்சை அளிக்க ஈரநெஞ்சம் அறக்கட்டளை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த பாட்டி யார் எப்படி அங்கு வந்தார் என்ற தெரியாத நிலையில் தலையில் இப்படி காயத்துடனும் புழுக்களுடனும் இருப்பதைப் பார்க்கும் பொழுது பரிதாபமாக இருந்தது.

தன் உடல், பொருள், ஆவியை தியாகம் செய்து நம்மை கவனித்துக் கொள்ளும். பெற்றோர் இயலாமை நிலைக்குத் தள்ளப்படும் போது அவர்களை கவனித்துக் கொள்ளாமல் இப்படி தெருவில் ஆதரவற்ற நிலையில் விடுவதை பார்க்கும் பொழுது கல்லும் கூட கசிந்துருகி கண்ணீர் சிந்தும்.

~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today 7-12-2014, an old lady chellamma, age 80 years was there in Coimbatore, Sathy road and no one care for her. Eeranenjam found and admitted her in Coimbatore corporation home. In her head there are some wounds and lot of worms in there with bad smell. Eeranenjam trust people cleaned all that and admitted her in Coimbatore GH for further treatment.

Parents sacrifice all their life things for taking care of their children. But in their old age no one taking care for her. This is really sorrowful and making tears in some body's eyes.

~thank you
Eera Nenjam






https://www.youtube.com/watch?v=4eQrJ8TKD-0&list=UUlItkV-aZwettjImLxCk7qw



 

https://www.youtube.com/watch?v=aez2Mj5alZE&index=4&list=UUlItkV-aZwettjImLxCk7qw










Sunday, November 10, 2013

காப்பகத்தில் இருந்த முத்துராஜ் உறவினர்களை கண்டுபிடிக்கப்பட்டது~ ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(230/10/11/13)

முத்துராஜ் வயது 32 கோவை குனியமுத்தூர் காவல் துறையினரால் கடந்த 3/11/13 அன்று கோவை மாநகராட்சி காப்பகத்தில் மனநிலை சரி இல்லாத நிலையில் சேர்க்கப்பட்டார் . காப்பகத்திற்கு வந்த முத்துராஜ் மனநிலை சரி நிலையால் அங்கு இருப்போர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தார் , இதனால் அவர் யார் என்ன விபரம் எதனால் இப்படி வந்தார் என்ற நிலை அறியாததால் , ஈரநெஞ்சம் அமைப்பினரை கோவை மாநகராட்சி காப்பகத்தினர் தொடர்பு கொண்டு முத்துராஜ் பற்றி தெரிவித்தனர். மேலும் அவரது குடும்பத்தினரை தேடி கண்டுபிடிக்குமாறு கேட்டு கொண்டனர். ஈரநெஞ்சம் அமைப்பினர் முத்துராஜ் நேரில் கண்டு நீண்ட நேரம் அவரிடம் பேசி விசாரித்த போது அவரிடம் இருந்து இவர் பெயர் முத்துராஜ், தந்தை பெயர் ஐயப்பன், மனைவி பெயர் சிந்து மோல், மகன் சிவா மாமா சந்தோஷ், முகவரி என. நடுதுருத்தி பள்ளம், கல்லார் போஸ்ட், வட்டையார் பகுதி, மூணார் , தேவிகுளம், இடுக்கி மாவட்டம், என்ற விபரம் திரட்டப்பட்டது, அதை வைத்துக்கொண்டு கடந்த 7 தேதி ஈரநெஞ்சம் முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் தகவலை வெளியிட்டு முத்துராஜின் உறவினரை தேடும் முயற்சியில் இறங்கியது. https://www.facebook.com/photo.php?fbid=486144431482978&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater

அதனை தொடர்ந்து நேற்று 9/11/13 அன்று கேரளா மாவட்டம் வட்டையார் பகுதி காவல்துறையினர் மூலம் முத்துராஜ் அவரின் சகேதரர் சசுதர்சனன் தொடர்பு கிடைக்கப்பட்டு அவரிடம் முத்துராஜ் பற்றி விபரம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் வரவழைக்கப்பட்டார். தனது அண்ணன் இருப்பதை அறிந்த மகிழ்ச்சியில் விரைந்த சுதர்சனனிடம் மனநிலை பாதித்த முத்துராஜ் ஈரநெஞ்சம் அமைப்பால் ஒப்படைக்கப்பட்டார்.



இதை பற்றி முத்துராஜ் அவர்களின் சகோதரர் சுதர்சனன் கூறும் போது.http://youtu.be/BtykhsfHQZM இவர் தனது அண்ணன் என்றும் கடந்த ஒருமாதகாலமாக அவருக்கு மனநிலை சரி இல்லாமல் போனதாகவும் அதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் , கடந்த 1 /11/13 அன்று திடீர் என்று வட்டையார் பகுதியில் அவரது மாமனார் வீட்டில் இருந்தபடி காணாமல் போனதாகவும் கூறினார் , இவரை காணாமல் வீட்டார் அனைவரும் பல இடங்களில் தேடி வந்ததாகவும், ஈரநெஞ்சம் அமைப்பினர் மூலம் தற்போது கிடைக்கப்பட்டார். , இவரை அழைத்து சென்று தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்போவதாகவும் கூறினார். மேலும் தனது சகோதரரை மீட்டு கொடுத்ததற்கு ஈரநெஞ்சம் அமைப்பிற்கு , கோவை மாநகராட்சி காப்பகத்திற்கும் பெரும் நன்றி தெரிவித்து கொண்டார் .

மீண்டும் ஒரு உறவை தேடி தந்த மகிழ்ச்சியோடு விடை பெற்று கொண்டது ஈரநெஞ்சம்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Mr. Muthuraj, Age 32, was admitted in Coimbatore corporation home with mentally disordered condition by Kuniyamuthur police on 3-11-2013, Due to mentally disordered stage he torturing the all the people in home. Home management didnt know about him and so they informed to Eeranenjam trust to find the details about him. Also they requested hm to find his family. After a long time inquiry of Eeraenjam with him, they knew the details that his father's name is Mr. Iyyappan, wife Mrs. Sinthu mol, Son Siva and his uncle Mr. Santhosh and his address is Naduthuruthi pallam, Kallar post, Vattaiyaar, Moonaar, Devi kulam, Idukki districrt. With these details Eeranenjam tried to find his family using internet webpages such as facebook.

Further to their effort, Eeranenjam found his brother Mr. Sutharsanan with the help of Vattaiyaar police and Eeranenjam informed the details about Muthuraj with his brother Sutharsanan. Immediately he came and felt very happy when he saw his brother. Eeranenjam handed over Mr. Muthuraj to his brother.

When Mr. sutharsanan told about his brother, He was mentally disordered for a month and he was taking treatment for the same. Unexpectedly he was missed from his Uncle's home on 1-11-2013 from Vattaiyaru. They searched him in so many places and they got him by Eeranenjam trust. He assured that he will give the treatment to his brother. He told thanks to Eeranenjam to found his brother. Eeranenjam also felt very happy to joined one more person with his family.

Thanks,
Eeranenjam.




Wednesday, October 02, 2013

தளர்ந்த வயதிலும் தளராத நம்பிக்கை ~ மகேந்திரன்





*நம்பிக்கைதான் வாழ்க்கை. 
இன்றைய கால கட்டத்தில் காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, தொழிலில் நஷ்டம், என கொஞ்சமும் அர்த்தமற்ற காரணம் கொண்டு தம் உயிரை மாய்த்துக்கொள்ளும் மூத்த தலை முறை முதல் இளம் தலைமுறை


யினர் வரை நாம் அன்றாடம் பார்த்திருப்போம். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாத நிலையில் வீட்டை விட்டு சென்றவர்களோ ஏராளம். இப்படி பட்டவர்களுக்கு எல்லாம் ஏதோ ஒருவிதத்தில் விடுதலை என்று வைத்துக்கொள்வோம், ஆனால் இவர்களை நம்பி இருப்பவர்களின் நிலை. (?).... போராடி வெற்றி பெறுவதுதான் வாழ்க்கை.

துன்பங்கள் இருந்தாலும் அதையும் தாண்டி பரந்து விரிந்த ஒரு உலகம் எப்போதும் காத்திருக்கும் எனும் தன்னம்பிக்கை நிறைந்தவர்களுக்கு, அப்படி ஒரு நம்பிக்கையை, உண்மையான பாசத்தை, தாய்மையை, விட்டுக்கொடுத்து வாழும் பண்பை தனது தள்ளாத 90 வயதில் நமக்குகற்று தருகிறார் இந்த தெய்வத்தாய் ரங்கம்மாள் பாட்டி.

“மரத்தை வைத்தவன்தான் தண்ணீரை ஊற்றவேண்டும்” என்பார்கள் இந்த சொல்லிற்கு ஏற்ப மரம்போல இருக்கு 60 வயது குழந்தைக்கு இன்னும் தாயாக அரவணைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் இந்த தாய்.

கோவையில் உள்ள ஒரு சிறிய கிராமம் சோமனூர், அங்கு இவருக்கு ஐந்து மகன்களும் ஒரு மகளும். கணவர் இறந்து நாற்ப்பது வருடம் .தற்போது 90 வயதைத் தாண்டி இன்னும் தாயாக இருக்கும் ரங்கமாள் பாட்டி . இவரை பற்றிதான் சொல்லப்போகிறேன்.

ஒரு குழந்தையை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வளர்ப்பதற்கே படாத பாடு படும் நிலையில் ஆறு குழந்தைகளையும் தனக்குத் தெரிந்த வெள்ளை அடிக்கும் வேலையில் வரும் சொற்ப வருமானத்தில் அனைவரையும் ஓரளவிற்குப் படிக்கவைத்து நல்ல இடத்தில திருமணங்களையும் முடித்து வைத்து ஒய்வு எடுக்கப்போகும் காலத்தில், தனது கடைசி மகன் சுப்ரமணி இவருக்கு தற்போது 60 வயது. சுப்ரமணி தாத்தாக்கு 50 வயது இருக்கும்போது அவருக்கு ஏற்ப்பட்ட பக்கவாதத்தினால் நடக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் தான் பார்த்துவந்த கட்டிட வேலையும் பார்க்க முடியாமல் போனது. வேலை இல்லை என்றால் வருமானம் எப்படி வரும்? வறுமை கஷ்டம் எல்லாம் தலை தூக்க துவங்கின . இனி இவரோடு இருந்தால் தன் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும் என்று தன் இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விட்டார் சுப்பரமணி தாத்தாவின் மனைவி பாக்கியம்.

அதன் பிறகு பத்துமாதம் வயிற்றில் சுமந்தவள் காடுபோகும்வரை சுமந்துதான் ஆகவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டது ரங்கம்மாள் பாட்டிக்கு. தாய்க்கு பின் தாரம் என்பார்கள். அந்த தாரமும் விட்டு போன பிறகு தாரத்துக்கு பின் மீண்டும் தாயாகி இருக்கிறார் ரங்கம்மாள் பாட்டி. பத்து மாதம் வயிற்றில் சுமந்தாள். பத்து வயதுவரை இடுப்பில் சுமந்தாள். அதுமட்டும் போதாது என மகனை இப்போது காலம் முழுதும் தோளில் சுமந்து, தன் கரங்களில் அவரது வாழ்க்கையை ஏந்தி காத்து வருகிறார். மிக கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு மனைவி மற்றும் குழந்தைகளையும் பிரிந்து வாழும் இவருக்கும் இவரை அரவணைத்து வரும் இந்த தாய்க்கும் இவர்களது உறவினர்களும் உதவ முன்வரவில்லை. இதுதான் உலகம். நன்றாக வாழும் வரை சுற்றி நிற்கும் சுற்றம், கஷ்டம் என வரும்போது விட்டு செல்லும் சுற்றம், சுற்றம் மட்டுமின்றி சொந்தமாக வந்த மனைவியும் விட்டு போன பின் ஒரு கட்டத்தில் எந்த வருமானமும் இல்லாமல் பிச்சை எடுக்கும் சூழ்நிலைக்கு இவர்கள் தள்ளப்பட, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மூலமாக இவர்கள் கோவையில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கும் இவர் தனது மகனை தானே கவனித்து பாராமரித்து வருகிறார்.

90 வயதான தாய் 60 வயதான குழந்தை பாசத்தின் உச்சம் இவர்களிடம் நேரில் காணும்போது வாழ்க்கை எவ்வளவு அர்த்தமுடையது என்பது புரியவருகிறது. ஆனாலும் யாருக்காக யார் இவர்கள் உயிர் சுமந்து இருக்கின்றார்கள் என விடையை தேடும் போது . மனிதர்களுக்கு மனித வாழ்வின் அர்த்தத்தை உணரவைக்கும் அவதாரம் என்பது விளங்கவைக்கிறது.

~மகேந்திரன்

Monday, August 12, 2013

உறவாக ஈரநேஞ்சமும் உண்டு , நல்லடக்கம்

"ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(192/10.08.2013)
நேற்று 09-08-2013 இரவு கோவை, பூசாரி பாளையத்தில் லட்சுமி அம்மாள் மூதாட்டி ஒருவர் தெருவில் இறந்து கிடந்ததாக B10 காவல் நிலையத்தினரிடம் இருந்து நமது ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் வந்தது. ஈரநெஞ்சம் அமைப்பும் B10 காவல் துறையினரும் இணைந்து அவரை பற்றிய தகவல்களை விசாரித்த போது லட்சுமி அம்மாள் திருப்பூர், புதிய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர் என்றும் பிழைப்பு தேடி கோவை வந்தவர் என்றும் தெரிய வந்தது. கோவையில் அவர் தனியே வசித்து வந்தார். பின்னர் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார். அவரது மறைவு குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவரது பேத்தி திருமதி. மாரியம்மாள் தனது குழந்தைகளுடன் உடனே கோவை வந்தார். ஆனால் அவரது குடும்ப சூழ்நிலையும் வறுமையின் காரணமாகவும் அவரது உடலை திரும்ப ஊருக்கு எடுத்து செல்ல இயலாததாலும் அவர் நமது ஈரநெஞ்சம் அமைப்பையே நல்லடக்கம் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி இன்று 10-08-2013 அன்று அவரது உடல் ஈரநெஞ்சம் அமைப்பால் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது ஆத்மா சாந்தி அடைய ஈரநெஞ்சம் சார்பில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறோம்.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam
On 09-08-2013 night, B10 Police Station called Eeranenjam and informed that a old lady, named Lakshmi ammal, was died on a Poosaaripalayam street. Then eeranenjam searched her relation along the police and found that she was from Tirupur, New bus stand area and she came coimbatore for a job. And then she fall in sick and died. Eeranenjam informed her family about her death. Her grand daughter Ms. Mariyammal came with her family. But as she is not wealth in economy and she unable to take her body for her final rituals. So as per the requisition of Ms. Mariammal, Eeranenjam taken care and done her final rituals on 10-08-2013. We pray god for her soul rest in peace.
Eera Nenjam
~ Thanks

Sunday, May 12, 2013

ஈரநெஞ்சம் பயனுள்ள நாள் ~மகேந்திரன்


"வாழும் நாட்களில்  எல்லா நாட்களிலும் உண்மையான மகிழ்ச்சியை தரும் நாட்கள் நாம் பயனுள்ள வகையில் கழிக்கின்ற நாட்கள் தான்"
அப்படி நான் கழித்த நாட்களில் ஒன்றுதான் நமது ஈரநெஞ்சம் அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள மாநகராட்சி முதியோர் காப்பகத்தில்  கழித்த அந்த ஒரு நாள்.

கடந்த 23-4-2014 உடன் ஈரநெஞ்சம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்தது. அதை தொடர்ந்து அதை பயனுள்ள வகையில் கொண்டாட ஈரநெஞ்சம் உறுப்பினர்கள் முடிவு செய்தோம். கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் துப்புரவு பணி  மேற்கொள்ள முடிவு  செய்து , அதன்படி அந்த கட்டிடத்துக்கு வெள்ளை அடித்தல், கழிப்பறை சுத்தம் செய்தல், மற்றும் அங்கே  உள்ள முதியவர்களுக்கும் மாநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும்  முடி திருத்துதல், நகம் வெட்டுதல் குளிக்கவைதல்  போன்ற செயல்களை செய்தோம். மேலும் மரங்கள் நட்டோம், அவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல் போன்றவையும் நடந்தது.

இதில் நானும் எனது நண்பர்களும் ஈரநெஞ்சம் உறுப்பினர்களுமான எண்ணற்றோர் கலந்துக்கொண்டோம் .

அவர்களுக்கு கோவை வலைப்பதிவாளர்கள் சார்பாக அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. அது மட்டும்  இன்றி கோவை வலைப்பதிவாளர்கள் சார்பாக எழுத்தாளர்கள்  அகிலா ,  கோவை சரளா, திரு. கலாகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கே இருந்த முதியவர்களுடன் கழித்த அந்த ஒருநாள் உண்மையாகவே மனம் நிம்மதியாக இருந்த ஒரு நாள். ஆம்.. ஆதரவற்றோருக்கு அரவணைப்பு  தரும்போது அவர்கள் அடையும் மகிழ்ச்சி, நிம்மதி  இருக்கிறதே அதை விட பெரியதுங்க,அதை நாம் காண்பது. அந்த மகிழ்ச்சியை நாங்கள் அனைவருமே உணர்ந்தோம். இது போல் முதியோர் காப்பகல் இல்லமால் இருக்க வேண்டும். நம்மை பெற்று போற்றி பாதுகாத்து வளர்த்த அவங்களை மிக கஷ்டமான ஒரு சூழ்நிலையில் வாழ விடக்கூடாது என ஒவ்வொருவரும் நினைத்தால் இது போல் முதியோர் இல்லங்கள் இருக்கவே இருக்காது.

எங்களது இந்த செயலுக்கு அனுமதி தந்த கோவை மாநகராட்சி ஆணையாளருக்கும், காப்பக பொறுப்பாளர் , உதவி புரிந்த பத்திர்க்கை துறை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Friday, January 11, 2013

திருநங்கைகள் ஆனாலும் எங்களாலும் நல்லது செய்ய முடியும் ~ஈரநெஞ்சம்


கோவை காந்திமாநகர் பகுதியில் வயதான ஒரு பெரியவர் (கந்தசாமி) தெருவில் ஆதரவற்று இருந்ததைக் கண்ட திருநங்கைகள் ப்ரியா மற்றும் வைஷ்ணவி 09.01.2013 அன்ற...ு எங்கள் அமைப்பிற்குத் தகவல் கொடுத்தனர். எங்கள் அமைப்பு அவரை, கோவை B6 காவல் துறையின் அனுமதி பெற்று, கோவை சாய் ஆதரவற்றோர் காப்பகத்தில் அந்த திருநங்கைகள் மூலமாகவே சேர்த்துள்ளது.
மேலும் ஒதுக்கப்பட்ட இனம் என்று யாரும் இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் ஈரநெஞ்சம் செயல்பாடுகளைக் கண்டு தாங்களாலும் சமூக பணியில் ஈடுபட முடியும், என்று தங்களை ஈடுபடுத்திக்கொண்ட திருநங்கைகள் ப்ரியா மற்றும் வைஷ்ணவி இருவரையும் ஈரநெஞ்சம் மனதார பாராட்டுகிறது.
~ நன்றி 129/2013
(ஈர நெஞ்சம்)
https://www.facebook.com/eeranenjam


Both Priya and Vaishnavi, thirunangais, informed Eera Nenjam on 09.01.2013 about an old orphaned (Mr. Kanthasamy) man on the street of Gandhimanagar, Coimbatore. We, after getting the proper permission from B6 Police Station, helped him admitted in Sai Home, Coimbatore, through Priya and Vaishnavi. After seeing the secular activities of Eera Nenjam, both of them have involved in such public help and we appreciate their timely help.
Thanks 129/2013

Thursday, September 01, 2011

மண்ணைவிட்டு மறைந்த மணியம்மா



 ஒருநாள் காலை பொழுது   108 ஆம்புலன்ஸ் நண்பர்கள் என்னை அழைத்து ஒரு பெண் கோவை பேருந்து நிலையத்தில் இரவெல்லாம் படுத்து இருக்கிறார் அவர் பெயர் மணியம்மா என்றும், அவரால் நடக்க முடியாத நிலை மற்றபடி உடலுக்கு வேறொன்று இல்லை கொஞ்சம் நேரில் வந்து பாருங்க மகேந்திரன் என்று...
அதனை தொடர்ந்து நான் பேருந்து நிலையம் சென்று அந்த 50 வயது மதிக்கத்தக்க மணியம்மாவை சந்திக்க சென்றேன்,
108 ஆம்புலன்ஸ் நண்பர்கள் சொன்னாற்போல் அந்த பெண்ணால் நடக்க முடியாதநிலையில் தான் இருந்தால் , பிறகு அந்த மணியம்மாவை தூக்கி மடியில் சாய்த்துக்கொண்டு அவரை பற்றி விசாரித்தேன் , அபோது அவர்...
"குன்னூரில் ஒரு முதியோர் காப்பகத்தில் நல்லபடியாக  இருந்ததாகவும் , ஒரு வருடத்திற்கு முன் உடல்நலம் சரியில்லாமல் போனதில் தன்னால் நடக்க முடியாமல் போனது ,
தன்னை வைத்து பராமரிக்க முடியாததால் குன்னூரில் இருந்து காரில் இங்குகொண்டுவந்து விட்டுவ்ட்டார்கள் , அனால் மருத்துவரிடம் அலைத்துபோவதாக சொல்லி அழைத்து வைத்து இவ்விடத்தில் விட்டுவிட்டார்கள், என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்"
 என்று அழுதார்.
அவரை பார்ப்பதார்க்கு பாவமாக இருந்தது சாப்பிட்டு இரண்டு நாள் ஆனதால் பசியோடு இருந்தார் அவருக்கு அருகில் இருந்த உணவு கடையில் இரண்டு இட்லி வாங்கி குடுக்க மனியம்மாவால் கையால் சாப்பிட முடியவில்லை ஆகையால் நானே ஊதிவிட்டு அவரை வேறு ஒரு
ஆம்புலன்சில்  அழைத்துக்கொண்டு ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் அனுமதி கேட்டு மணியம்மாவை அங்கு தங்கவைத்து பராமரித்து வந்தோம்,
பிறகு ஒரு சில நாளில் மணியம்மா குன்னூரில் இருந்த அவர் சொன்ன ஆசரமத்தை தேடி சென்றேன், அந்த இடத்தை கண்டுபிடித்து சென்றபோது அங்கு மணியம்மாவை ஏற்றுக்கொள்வதாக இல்லை , அது மட்டுமல்லாமல் மணியம்மாவின் தங்கை வீட்டை சேர்ந்தவர்கள் மணியம்மாவின் கணவர் இறந்த பிறகு மணியம்மாவை பாத்துக்கொள்ள முடியாததால் இங்கு செத்து விட்டார்கள் , பிறகு யாரோ வந்து மணியம்மாவை மருத்துவரிடம் அலைத்துபோகிறோம் என்ர்று சொல்லி அழைத்து கொண்டு போய்விட்டார்கள் இனி எங்களுக்கும் மனியம்மாவிர்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்லி என்னை அனுப்பிவிட்டார் , மேலும் அவர்கள் மணியம்மாவின் தங்கை முகவரி குடுத்ததினால் அவர்கள் வீட்டையும் தேடினேன் குன்னூரில் நல்ல மழை நேரம் போய்கொண்டே இருந்தது கோவையில் என் வீட்டிலும் சொல்லாமல் வந்து விட்டேன் , அதிர்ஷ்டவசமாக 
மணியம்மாவின் தங்கை முகவரியை கண்டு பிடித்துவிட்டேன் கொட்டும்மழையில்,
விபரத்தை சொன்னேன் அவர்கள் வீட்டிலும் மணியம்மாவை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள்,
எவ்வளவோ சொல்லியும் அவர்கள் விட்டார்கள் மணியம்மாவை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் ஏமாற்றத்துடன் கோவை திரும்பினேன்...
 அன்பாலயத்தில் நல்லபடியாக சந்தோசமாக இருந்தார் நான் அன்பாளையம் செல்லும் போதெல்லாம் மணியம்மாவிற்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தேன்...

காலம் கடந்தது, கடந்த மாதம் மணியம்மா இந்த மண்ணை விட்டு சாம்பலாக காற்றில் கலந்து விட்டார். அவருடைய இறுதி சடங்கிற்கு கூட என்னோடு வந்த அன்பாலயம்  நண்பர்கள் மட்டுமே வேறு யாரு இருக்காங்க மணியம்மாவிற்கு  ,
பாவம் மணியம்ம அவருடைய ஆத்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக்கோங்க.
~மகேந்திரன்

Sunday, July 24, 2011

ஆதரவற்றவர்களின் ஆதரவு -மகேந்திரன்


ஆதரவற்றவர்கள்  நாங்க,  எங்களை வைத்துதான் எல்லோரும் பயனடைவாங்க,
எங்களாலும் பல பயனுள்ள செயல்கள் செய்ய முடியும் என்பது என்னும் போது சந்தோசமா இருக்கு,
elsie matriculation school sanganoor இந்த பள்ளியில் மரம் நடுவதற்காக மகேந்திரன்
elsie matriculation school அங்கு 24/07/11 sunday morning அழைத்துக்கொண்டு சென்றார்...
பள்ளி சென்று படிப்பதற்கே வழியில்லாத நாங்கள் ஒரு பள்ளிகூடத்தில் மரங்கள்  நடப்போகிரோமா..
என்று என்னும் போது பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்ப்பதுபோல இருந்தது,
ஒரு இனம் புரியாத சந்தோசம் மனதில் ,சினிமாவிற்கு சென்று இருக்கிறோம், பூங்காவிற்கு சென்று இருக்கிறோம், கோவிலிக்கு சென்று இருக்கிறோம்,  ஏதாவது அமைப்புகள் நடத்தும் கூட்டம் விளையாட்டுப்போட்டி யில் கலந்து கொண்டு இருக்கிறோம், மகேந்திரன் அண்ணா மற்றும் அவருடைய விஸ்வகர்மா நண்பர்கள் பரிந்துரையின் பேரில் முதன் முதலில் ஆதரவற்ற நாங்கள் மரங்கள் நடுவது மிக சந்தோசமாக இருக்கிறது,
elsie matriculation school முழுவதும் நாங்கள் 25 குழந்தைகள் 30  மண்ணில் குழிகள் வெட்டி விஸ்வகர்மா நண்பர்கள் கொண்டுவந்த 30 மரங்களை அதில் நடவைதோம்,
பிறகு மரங்களுக்கு மூங்கில் கூடைகளை பாதுகாபிர்க்காக வைத்தோம்,
அந்த பள்ளி விளையாட்டு மைதானத்தில் 40,50 வயதுடையவர்கள் இறகு பந்து விளையாடி கொண்டு இருந்தனர்,அவர்கள் 5,10 வயதுடைய எங்களின் இந்த மரம் நாடும் செயலை பார்த்து அவர்களுடைய விளையாட்டை போலவே சிறப்பாக பாராட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்,
பிறகு அந்த பள்ளியின்  கரஸ்பாண்டன் திரு.ராஜேந்திரன் அவருடைய சார்பாக காலை உணவுக்கும் ஏற்பாடு செய்து குடுத்தார்.பிறகு திரு.ராஜேந்திரன் அவர் எங்களிடம் எங்களால்   நடப்பட்ட மரங்களை நாங்கள் நல்ல படியாக பார்த்து பராமரித்து கொள்கிறோ என்று வாக்கு கொடுக்கும் சமயம் எங்களை மிகவும் உயர்ந்தநிலைக்கு கொண்டு சென்றது போன்று இருந்தது.
பிறகு அவர்களுடைய உற்ச்சாகமான பாராட்டுகளுடன் எங்களது கார்னர் ஸ்டோன் இல்லத்திற்கு சென்றோம்,
ஒரு விஷயம் இந்த நாளை போல வேறு எந்த நாளும் இல்லைங்க .!
நன்றி.
மகேந்திரன் 

Sunday, July 03, 2011

வீடு திரும்பிய சண்முகம் தாத்தா - மகேந்திரன்

இந்த தாத்தா பெயர் சண்முகம், இவரை இந்த நிலையில் தாங்க கோவை கணபதி வேலன் தியேட்டர் வளாகம் அருகில் உள்ள கழிவு நீர் கால்வாய் அருகில் கண்டேன்...

மிக  பரிதாபமான நிலை இவருக்கு வயசு 90 இருக்குமா ?

எத்தனை நாள் பட்டினியோ...

ஒரு சிலவேளைகளில் ஈரம் நிறைந்த அப்பகுதி மக்கள் அவருக்கு உணவு வழங்கி உள்ளனர்,

நான் அவரை கண்டதும் அவரால் பேசமுடியாத நிலையில் தண்ணீர் தண்ணீர் என்று பாவனை காண்பிக்க என்னிடம் இருந்த தண்ணீரை அவருக்கு குடுத்து , அருகில் இருந்தவர்களிடம் "யார் இவர்" என்று கேட்டேன்...

சண்முகம் தாத்தா இப்பகுதிக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வந்ததாக சொன்னார்கள் ,
அதும் அவரால் நடக்க முடியாமல் தவழ்ந்து தவழ்ந்து வந்ததாக சொன்னார்கள் , அவர் தவழ்ந்து வந்ததில் அவருடைய கை கால்களில் எல்லாம் காயத்துடன் இருந்தார்...
பிறகு அப்பகுதி மக்கள் என்னிடம் அவரை அழைத்து செல்கிரிர்களா , ஏதேனும் ஒரு ஆசரமத்தில் இவரை சேர்த்து விட்டு விடுங்கள் என்று கேட்க நான் சம்மதித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பாக ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்தேன்.
அங்கு அவரை நல்லபடியாக பராமரித்து வந்தார்கள்...
பிறகு அவர் அடிக்கடி கல்லறை வீதி என்று உளறிக்கொண்டு இறக்கிறார் என்று என்னிடம் அந்த இல்லத்தில் இருந்து தகவல் குடுத்தனர் . ஒரு வேலை சண்முகம் தாத்தா கல்லறை வீதியில் வசித்தவராக இருக்கலாம் என்டற எண்ணத்தில் கோவையில் அதன் சுற்றுப்புறத்தில் கல்லறை வீதி என்ற பகுதி எங்கு உள்ளது என்று இரண்டு , மூன்று நாட்களாக தேடி , கோவையில் சௌரிபாளையத்தில் உள்ளதை தெரிந்துக்கொண்டேன்.
கல்லறை வீதியில் அவருடைய புகை படத்தை வைத்துக்கொண்டு
ஒவ்வொரு வீடாக தேட ஒரு வீட்டில் இருந்து வெளியே வந்த பெண் இவர் என் மாமனார் எங்கே இருக்கிறார் அவருக்கு மனநலம் சரியில்லாமல் இருந்தார் 60 நாட்களாக காணவில்லை என்று கண்ணீருடன் கதறியபடி கேட்டார்.
அதற்குள் அப்பகுதி மக்கள் எல்லோரும் கூடிவிட்டனர் ,
அவர்களிடம்  நான் நடந்ததை சொல்லி  ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் நல்லபடியாக இருக்கிறார் என்றேன்,
உடனே சண்முகம் தாத்தா வீட்டாரை அழைத்துக்கொண்டு
ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் உள்ள சண்முகம் தாத்தாவிடம் அழைத்துப்போனேன் ...
சண்முகம் தாத்தாவின் உறவினர்கள் சண்முகம் தாத்தாவை  கண்டு பெரும் பூரிப்படைந்தனர் .
அதன் பிறகு
ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தின் நிர்வாகி ஸ்ரீ கலா அவர்களின்  அனுமதியோடு சண்மிகம் தாத்தாவின் உறவினர்கள் அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்றனர் ,
சண்முகம் தாத்தாவை அவரது உறவினருடன் சேர்த்து வைத்த மனநிறைவில் வீடு திரும்பினேன் நான் மகேந்திரன் .