Showing posts with label ஆதரவற்றவர்களின். Show all posts
Showing posts with label ஆதரவற்றவர்களின். Show all posts

Sunday, July 24, 2011

ஆதரவற்றவர்களின் ஆதரவு -மகேந்திரன்


ஆதரவற்றவர்கள்  நாங்க,  எங்களை வைத்துதான் எல்லோரும் பயனடைவாங்க,
எங்களாலும் பல பயனுள்ள செயல்கள் செய்ய முடியும் என்பது என்னும் போது சந்தோசமா இருக்கு,
elsie matriculation school sanganoor இந்த பள்ளியில் மரம் நடுவதற்காக மகேந்திரன்
elsie matriculation school அங்கு 24/07/11 sunday morning அழைத்துக்கொண்டு சென்றார்...
பள்ளி சென்று படிப்பதற்கே வழியில்லாத நாங்கள் ஒரு பள்ளிகூடத்தில் மரங்கள்  நடப்போகிரோமா..
என்று என்னும் போது பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்ப்பதுபோல இருந்தது,
ஒரு இனம் புரியாத சந்தோசம் மனதில் ,சினிமாவிற்கு சென்று இருக்கிறோம், பூங்காவிற்கு சென்று இருக்கிறோம், கோவிலிக்கு சென்று இருக்கிறோம்,  ஏதாவது அமைப்புகள் நடத்தும் கூட்டம் விளையாட்டுப்போட்டி யில் கலந்து கொண்டு இருக்கிறோம், மகேந்திரன் அண்ணா மற்றும் அவருடைய விஸ்வகர்மா நண்பர்கள் பரிந்துரையின் பேரில் முதன் முதலில் ஆதரவற்ற நாங்கள் மரங்கள் நடுவது மிக சந்தோசமாக இருக்கிறது,
elsie matriculation school முழுவதும் நாங்கள் 25 குழந்தைகள் 30  மண்ணில் குழிகள் வெட்டி விஸ்வகர்மா நண்பர்கள் கொண்டுவந்த 30 மரங்களை அதில் நடவைதோம்,
பிறகு மரங்களுக்கு மூங்கில் கூடைகளை பாதுகாபிர்க்காக வைத்தோம்,
அந்த பள்ளி விளையாட்டு மைதானத்தில் 40,50 வயதுடையவர்கள் இறகு பந்து விளையாடி கொண்டு இருந்தனர்,அவர்கள் 5,10 வயதுடைய எங்களின் இந்த மரம் நாடும் செயலை பார்த்து அவர்களுடைய விளையாட்டை போலவே சிறப்பாக பாராட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்,
பிறகு அந்த பள்ளியின்  கரஸ்பாண்டன் திரு.ராஜேந்திரன் அவருடைய சார்பாக காலை உணவுக்கும் ஏற்பாடு செய்து குடுத்தார்.பிறகு திரு.ராஜேந்திரன் அவர் எங்களிடம் எங்களால்   நடப்பட்ட மரங்களை நாங்கள் நல்ல படியாக பார்த்து பராமரித்து கொள்கிறோ என்று வாக்கு கொடுக்கும் சமயம் எங்களை மிகவும் உயர்ந்தநிலைக்கு கொண்டு சென்றது போன்று இருந்தது.
பிறகு அவர்களுடைய உற்ச்சாகமான பாராட்டுகளுடன் எங்களது கார்னர் ஸ்டோன் இல்லத்திற்கு சென்றோம்,
ஒரு விஷயம் இந்த நாளை போல வேறு எந்த நாளும் இல்லைங்க .!
நன்றி.
மகேந்திரன் 

Sunday, July 03, 2011

வீடு திரும்பிய சண்முகம் தாத்தா - மகேந்திரன்

இந்த தாத்தா பெயர் சண்முகம், இவரை இந்த நிலையில் தாங்க கோவை கணபதி வேலன் தியேட்டர் வளாகம் அருகில் உள்ள கழிவு நீர் கால்வாய் அருகில் கண்டேன்...

மிக  பரிதாபமான நிலை இவருக்கு வயசு 90 இருக்குமா ?

எத்தனை நாள் பட்டினியோ...

ஒரு சிலவேளைகளில் ஈரம் நிறைந்த அப்பகுதி மக்கள் அவருக்கு உணவு வழங்கி உள்ளனர்,

நான் அவரை கண்டதும் அவரால் பேசமுடியாத நிலையில் தண்ணீர் தண்ணீர் என்று பாவனை காண்பிக்க என்னிடம் இருந்த தண்ணீரை அவருக்கு குடுத்து , அருகில் இருந்தவர்களிடம் "யார் இவர்" என்று கேட்டேன்...

சண்முகம் தாத்தா இப்பகுதிக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வந்ததாக சொன்னார்கள் ,
அதும் அவரால் நடக்க முடியாமல் தவழ்ந்து தவழ்ந்து வந்ததாக சொன்னார்கள் , அவர் தவழ்ந்து வந்ததில் அவருடைய கை கால்களில் எல்லாம் காயத்துடன் இருந்தார்...
பிறகு அப்பகுதி மக்கள் என்னிடம் அவரை அழைத்து செல்கிரிர்களா , ஏதேனும் ஒரு ஆசரமத்தில் இவரை சேர்த்து விட்டு விடுங்கள் என்று கேட்க நான் சம்மதித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பாக ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்தேன்.
அங்கு அவரை நல்லபடியாக பராமரித்து வந்தார்கள்...
பிறகு அவர் அடிக்கடி கல்லறை வீதி என்று உளறிக்கொண்டு இறக்கிறார் என்று என்னிடம் அந்த இல்லத்தில் இருந்து தகவல் குடுத்தனர் . ஒரு வேலை சண்முகம் தாத்தா கல்லறை வீதியில் வசித்தவராக இருக்கலாம் என்டற எண்ணத்தில் கோவையில் அதன் சுற்றுப்புறத்தில் கல்லறை வீதி என்ற பகுதி எங்கு உள்ளது என்று இரண்டு , மூன்று நாட்களாக தேடி , கோவையில் சௌரிபாளையத்தில் உள்ளதை தெரிந்துக்கொண்டேன்.
கல்லறை வீதியில் அவருடைய புகை படத்தை வைத்துக்கொண்டு
ஒவ்வொரு வீடாக தேட ஒரு வீட்டில் இருந்து வெளியே வந்த பெண் இவர் என் மாமனார் எங்கே இருக்கிறார் அவருக்கு மனநலம் சரியில்லாமல் இருந்தார் 60 நாட்களாக காணவில்லை என்று கண்ணீருடன் கதறியபடி கேட்டார்.
அதற்குள் அப்பகுதி மக்கள் எல்லோரும் கூடிவிட்டனர் ,
அவர்களிடம்  நான் நடந்ததை சொல்லி  ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் நல்லபடியாக இருக்கிறார் என்றேன்,
உடனே சண்முகம் தாத்தா வீட்டாரை அழைத்துக்கொண்டு
ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் உள்ள சண்முகம் தாத்தாவிடம் அழைத்துப்போனேன் ...
சண்முகம் தாத்தாவின் உறவினர்கள் சண்முகம் தாத்தாவை  கண்டு பெரும் பூரிப்படைந்தனர் .
அதன் பிறகு
ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தின் நிர்வாகி ஸ்ரீ கலா அவர்களின்  அனுமதியோடு சண்மிகம் தாத்தாவின் உறவினர்கள் அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்றனர் ,
சண்முகம் தாத்தாவை அவரது உறவினருடன் சேர்த்து வைத்த மனநிறைவில் வீடு திரும்பினேன் நான் மகேந்திரன் .