இறைவனது படைப்பில் சிறு துரும்பும் கூட அர்த்தமற்றதாக இருப்பது இல்லை , ஆனால் அதை உணர்ந்து கொள்ளத்தான் பலருக்கு ஞானம் இல்லை.
~~~~~~~~~~~~~~~~~~~
அமுதா வயது 52 . இரண்டு சகோதரர் சகோதரிகள் இருவர் இவருக்கு. குடும்பத்தில் இரண்டாமவர் இவர். ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கூட இவர் பிறந்த நாள் முதல் இறந்த நாள் வரையில் வாழ்வில் அனுபவிக்காத துன்பமே இல்லை.
பிறந்து சிறிது காலத்திலேயே ஒரு விபத்தில் தலை நரம்பில் அடிபட்டதால் வாழ் நாள் முழுவதும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். அந்த காலத்தில் போதிய மருத்துவ வசதி இல்லாததால் இந்த வியாதிக்கு முழு மருத்துவம் கிடைக்கவில்லை. இந்த வலிப்பு நோயின் காரணமாக பள்ளி படிப்பும் துவக்கத்திலேயே நிறுத்த வேண்டியதாயிற்று.
பள்ளி படிப்பு இல்லை என்றாலும் வீட்டில் இருந்து தனது உடன் பிறந்தவர்களுக்கு தேவையான அனைத்து பணிவிடைகளும் செய்து கொடுப்பார். சொந்த தாய்மாமனுக்கு மணம் முடித்து அவர்கள் வாழ்விற்காக பெரும் பொருளுதவியும் அமுதாவின் பெற்றோர்கள் செய்து கொடுத்தனர்..
ஆனால் மூன்று வருடத்திலேயே அவர் திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. அதற்குள் ஒரு அழகான பெண் குழந்தையும் பெற்றெடுத்து , அதை எமனுக்கு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார். தன் கணவர் வேறு ஒரு பெண்ணை மணமுடித்துக் கொண்டதால் மன அழுத்தம் காரணமாக மனநோய் ஏற்பட்டு தன்னை யார் என்றே தெரியாத நிலைக்கு ஆளானார். .
அதன் பின் அமுதாவின் பெற்றோர்கள் தொடர்ந்து செல்லாத மருத்துவமனை இல்லை , வேண்டாத தெய்வங்கள் இல்லை. அமுதாவின் நலனில் எந்த முன்னேற்றமும் இல்லை.
வாழ்ந்த நாளில் எந்த ஒரு நல்லது கெட்டதிற்கும் சென்றது இல்லை. அக்கம் பக்கம் கூட சென்றது இல்லை. சென்றது எல்லாம் மருத்துவமனை மருத்துவமனை மட்டுமே. 2015 இல் மனநலம் பெரிதும் பாதிக்கப்பட்டது அதுவரை இவரது நிலையை ஓரளவிற்கு கட்டுப்பாட்டில் வைத்திருந்த மருத்துவர்களும் முற்றிலும் கைவிட்டு விட்டனர்.
எத்தனையோ விஞ்ஞானம் வளர்ந்த இந்த உலகில் இவருக்கு வைத்தியம் பார்க்க தமிழ் நாட்டில் எந்த மருத்துவமும் கிடைக்க வில்லை. வீதியில் விட வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டார். அதன் பிறகு தனது குடும்பத்தை பிரிந்து பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் காப்பகத்திலும் மூன்று வருடம் இருந்தார்.
அமுதாவை சந்திப்பவர்கள் எல்லோரும் பாவப்பட்ட பிறவி , வாழ்வில் எந்த ஒரு சுகத்தையும் அனுபவிப்பதற்கு இல்லை. எப்போது இறைவன் அழைத்து செல்ல போகிறான் , யார் யாருக்கோ முடிவு வருகிறது ஒரு புரயோஜனமும் இல்லாத இந்த அமுதாவிற்கு எப்போது முடிவு வரும் என்றே புலம்பிக் கொண்டு இருந்தனர்.
இவர்களது பார்வைக்கு அமுதா ஒரு வேண்டாத பொருளாகத்தான் இருந்தார்.
ஆனால் அமுதாவின் மற்றொரு பக்கம் அவர்களுக்கு தெரியாது .
அமுதாவின் நிலையைத் தான் மேம்படுத்த முடியவில்லை ஆனால் அமுதாவை பின்னணியாக கொண்டு அவரை போல மற்றொருவர் இந்த உலகில் பாதிக்க கூடாது என்று அமுதாவின் உடன் பிறந்தவர்களும் அவர்களது நண்பர்களும் சேர்ந்து ஈரநெஞ்சம் என்ற அறக்கட்டளை உருவாக்கினர்.
அமுதாவின் வாழ்வு சுகமாக இல்லை என்றாலும் . அவரது பின்னணியில் உருவான இந்த ஈரநெஞ்சம் அறக்கட்டளை மூலமாக அமுதாவை போன்றவர்கள் ஆயிரக்கணக்கில் மறுவாழ்வு பெற்று வாழ்கின்றனர்.
மனநிலை பாதிக்கப்பட்ட எத்தனையோ பேர் , தன்னிலை மறந்து குடும்பத்தை இழந்தவர்கள் குணமாகி குடும்பத்துடன் இணைந்து உள்ளார்கள். சாலையில் ஆதரவற்று உயிர் நீத்தவர்களை அவர்களுக்கு உறவாக நின்று நல்லடக்கம் செய்வதும். ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாப்பு, கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கை கால் வழங்குவது , மற்றும் ஈரநெஞ்சம் காப்பகத்தில் ஆதரவற்றவர்கள் 150 பேருக்கும் மேல் ஆதரிக்கப்பட்டு வருகிறார்கள் . இந்த செயல்கள் அனைத்திற்கும் பின்னணி இந்த அமுதா என்ற தேவதை தான்.
இவ்வளவு பெருமைக்கும் உரிய இந்த தேவதை, கடந்த 3/1/18 அன்று தான் மண்ணுக்கு வந்த இறை பணியை முடித்துக் கொண்டு மீண்டும் இறைவடிவம் பெற்றுக் கொண்டது.
கடவுள் சில நேரம் தேவதைகளை மண்ணிற்கு ஏதோ சில காரணத்திற்காக அனுப்பி வைப்பார் . அவர்கள் மண்ணுலகில் பொழுது போக்கிற்காக வந்து மனிதகுல நன்மைக்காக வாழ்ந்து போவார்கள். அவர்கள் இருக்கும் காலத்தில் பெரும் கூட்டத்திற்கு தலைவராகவோ, அல்லது தான் சொல்லும் அனைத்தையும் மக்கள் வேதவாக்காக எடுத்துக் கொள்ளும் போலி சாமியார்களாகவோ இருக்க மாட்டார்கள் . நாம் அடிக்கடி கேட்டு இருக்கின்றோம் சித்தர்கள் வாழ்வு பற்றி . பெரும் துன்பம் அனுபவிப்பார்கள் ஆனால் அது எல்லாம் அவர்களது பொழுது போக்காகவே இருக்கும் என்று .
இறைவன் படைப்பில் சிறு துரும்பும் கூட பயனற்றதாக இருப்பது இல்லை..!!!
~மகேந்திரன்







.jpg)

.jpg)




![Photo: Eera Nenjam Charity
''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
****** [For English version, please scroll down]
(237/27-11-2013)
26.11.13 அன்று முகநூலில் ஈரநெஞ்சம் அமைப்பு கொடுத்த தகவலை தொடர்ந்து லட்சுமி அம்மாள் பாட்டியின் பேரன் சிவகுமார் அவர்களின் தொடர்பு கிடைத்தது.
https://www.facebook.com/photo.php?fbid=494572107306877&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater
அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தவுடன் சிவக்குமார் 27-11-2013 இன்று கோவை வந்தார். அவரிடம் லட்சுமி அம்மாள் ஒப்படைக்கப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம். சிவகுமார் கூறுகையில் தனது பாட்டி தூத்துக்குடியில் 30.09.13 அன்று காணமல் போனதாகவும். அவரை பற்றி காவல் துறையில் தகவல் கொடுத்து கடந்த ஒரு மாதமாக தேடி வருவதாகவும் தெரிவித்தார். பிரிந்த தனது பாட்டியை மீட்டு தந்த ஈரநெஞ்சம் அமைப்பிற்கு அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். அவரை அவரது குடும்பத்தினருடன் சேர்க்கவும் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் ஈரநெஞ்சம் சார்பில் நன்றிகள்.
மீண்டும் ஒரு உறவை சேர்த்து வைத்ததில் ஈரநெஞ்சம் மகிழ்ச்சியடைகிறது.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam
On 26-11-13, Eeranenjam's post in Facebook as Mrs. Lakshmiammal's detail, we came to know about his grand son Mr. Sivakuamr. As soon as Eeranenjam contacted and let him know about Mrs. Lakshmiammal. He came to Coimbatore and taken care of her. He told that she was missed in Thoothukudi on 30-10-2013 and they registered a complaint in police and searched her for a month. He told thanks to Eeranenjam to rescue his Grandmother. We thank you all who are helped to collect the details and rescue her. Eeraemjam feels happy to join one more person with family.
~thank you.
Eera Nenjam Charity](https://m.ak.fbcdn.net/sphotos-h.ak/hphotos-ak-prn2/p480x480/1441297_534091913352866_119186947_n.jpg)

![Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(233/21/11/2013)
கோவை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ஒரு வார காலமாக உடலில் ஆடை இல்லமால் எறும்பு மொய்த்த நிலையில் முதியவர் ஒருவர் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு அளித்தத் தகவலின் பேரில் 03/11/13 அன்று அந்த முதியவரை மீட்டு தேவையான முதலுதவிகளை அளித்து மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
https://www.facebook.com/photo.php?fbid=484791868284901&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater
அந்த முதியவர் சிகிச்சை பலன் இல்லாமல் 6.11.13 அன்று காலமானார். B4 காவல் நிலையம் அந்த முதியவரை பற்றி விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பிறகு இன்று 21.11.13 அவரின் பிரேத உடல் ஈர நெஞ்சம் அமைப்பிடம் கொடுக்கப்பட்டது.
ஈர நெஞ்சம் அமைப்பினர் அவரின் உடலை சொக்கம்புதூர் மயானத்தில் நல்ல முறையில் அடக்கம் செய்தனர். அந்த பெரியவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam
Eera Nenjam was informed by the public about an elderly man who was lying at Coimbatore General hospital premises without any clothes on him and ants crawling all over his body. Following the information that was given on 03.11.2013, Eera Nenjam rescued the elderly man and gave him first aid, later admitted him at the general hospital for treatment. Unfortunately the elderly man passed away on 6.11.13. Since there was no information about this elderly man, B4 police station was trying to get some information about him. Later today 21.11.13, the elderly man’s body was given to Eera nenjam trust. Eera Nenjam trust did the final funeral services to his body with due respect.
Let us pray for his soul to rest in peace.
Thank you.
~Eera Nenjam](https://m.ak.fbcdn.net/sphotos-d.ak/hphotos-ak-ash3/p480x480/942221_492363340861087_1479328850_n.jpg)

![Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(207/28-09-2013)
கடந்த 16/09/2013 அன்று கோவை நஞ்சப்பா ரோடு பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க லக்ஷ்மி அம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் மனநில பாதிக்க பட்ட நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் மற்றும் B3 காவல் துறையினரால் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுக்கப்பட்டு , கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
https://www.facebook.com/eeranenjam.organization#!/photo.php?fbid=271635149628114&set=a.143756775749286.13398.100003448945950&type=1&theater
அதனை தொடர்ந்து லக்ஷ்மி அம்மாவின் உறவினரை தேடும் முயற்சியில் , லக்ஷ்மி அம்மாளின் புகை படத்துடன் காணவில்லை என்ற அறிவிப்பு காலை 28/09/2013 கோவை நகர பேருந்தில் கண்ட ஈரநெஞ்சம் அமைப்பினர் , அதில் இருந்த அலைபேசி என்னுடன் தொடர்புகொண்டு லக்ஷ்மி அம்மாளை பற்றி விளக்கம் கேட்டு , அந்த எண் லக்ஷ்மி அம்மாளின் மகளான தமிழ் செல்வி என்பதை உறுதி படுத்திக்கொண்டு
ஈரநெஞ்சம் லக்ஷ்மி அம்மாளை அவரது மகள் தமிழ் செல்வியுடன் இணைத்து வைத்தது.
மேலும் தமிழ் செல்வி அவர்கள் கூறு பொழுது என்னுடைய அம்மா லக்ஷ்மிஅம்மாள் தான் என்றும், சற்று மனநலம் சரியில்லாதவர் மற்றும் காதும் சரியாக கேட்காது என்றும் கூறினார். மேலும் தாங்கள் உறவினர் ஒருவரின் இறப்பிற்க்கு சென்று இருந்த பொழுது காணாமல் போய் விட்டர் . கடந்த பத்து நாட்களாக காணவில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை அம்மாவை பத்திரமாக பார்த்துக்கொண்ட மாநகராட்சி காப்பகதிர்க்கும் ஈரநெஞ்சம் அமைபிர்க்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.
இதன் மூலமாக மேலும் ஒரு உறவை சேர்த்து வைத்த மகிழ்ச்சியை ஈர நெஞ்சம் தாங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறது.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam
B3 police station and public informed Eeraneanjam about 80 years old lady who is mentally ill & roaming in Koavai Nanjappa road alone and no one knows about her.
Meanwhile members of Eeraneanjam saw the posters about that lady that she is Lakshmi Ammal, with her photo and contact number. Eeraneanjam contacted that number, that was her daughter tamil selvi s number, and she was informed about her mother, that she is in the care of Eeraneanjam.
Tamil selvi said her mother is mentally ill and she lost her hearing power also, 10 days back she was gone out when we were went to one funeral, they were searching everwhere and posted the posters with photo and contact number. She extended her heartfelt thanks to Corporation home and Eeraneanjam who taken care of her.
Eeraneanjam is also happy that one more person has been reunion with her family.
Thank you
~Eera Nenjam](https://m.ak.fbcdn.net/sphotos-a.ak/hphotos-ak-frc3/1235289_468015713295850_1162261369_n.jpg)
![Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(204/18-09-2013)
வேலூர் அருகம்பாரை அரசு மருத்துவமனை அருகே ஆதரவற்று இருவர் ரோட்டில் கிடப்பதை அவ்வூரை சார்ந்த ஜெய்சங்கர் என்பவர் பார்த்துள்ளார் மேலும் அவர்களிடம் பேசியதில் அந்த இருண்டு நபரில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டு பேச இயலாத நிலையிலும் மற்றோவர் பெயர் மணி என்றும் அவருக்கு யாரும் இல்லை என்பதையும் அறிந்த அவர் அவர்களை காப்பகத்தில் சேர்க்க கடந்த ஐந்து நாட்களாகமுயற்சித்து வந்து இருக்கிறார் , அவருக்கு போதிய உதவி கிடைக்காத நிலையில் அவர் ஈரநெஞ்சம் அமைப்பை தொடர்பு கொண்டு அவருக்கு உதவி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு மேற்கொண்ட முயற்சியுடன் அந்த இரண்டு நபர்களையும் செங்கல்பட்டு பாலேஸ்வரத்தில் உள்ள புனித ஜோசெப் கருணை இல்லத்தில் நேற்று 17.09.13 சேர்கப்படர்கள் என்பதை ஈரநெஞ்சம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறது. மேலும் அவர்களுக்கு உதவ நினைத்த ஜெய்சங்கர் அவர்களின் நல்ல உள்ளதை ஈரநெஞ்சம் பாராட்டுகிறது.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam
Near Vellore Arumbaarai government hospital two unknown people were identified by Mr Jaishankar. He came to know that one is mentally ill and can’t speak as well, another one Mr. Mani is aged and no one to take care of him, so Mr.Jaishankar wants to admit both of them in a home, he searching the home for past 5 days. At last he approached Eeraneanjam to help to admit both in a home. Eearaneanjam helped him to admit both in St Josephs home at Paaleshvaram, Sengalpattu, on 17/09/13. Eeraneanjam appreciate the initiative taken by Mr Jaishankar to help them.
Thank you
~Eera Nenjam](https://m.ak.fbcdn.net/sphotos-g.ak/hphotos-ak-prn2/p480x480/1237958_464040560360032_1301671714_n.jpg)