சில நாட்களுக்கு முன்பாக உக்கடம் பகுதியில் சாலையில் ஆதரவற்று ஒரு மூதாட்டி வலது கை இழந்த நிலையில் பரிதாபமாக இருந்தார், அவருக்கு பாதுகாப்புக் கொடுக்க அந்த மூதாட்டியை அழைத்துவந்து மாநகராட்சி காப்பகத்தில் அனுமதி கேட்டு அங்கு சேர்க்கப்பட்டது. அதன் பிறகு அந்த அம்மாவின் தலையில் எதோ காயம் இருக்கும் போல தலை வலியால் துடித்துக்கொண்டு இருந்தார். முடி நிறைய இருந்ததால் காயம் தெரியவில்லை தலையில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தது அதிக துர்நாற்றம் வீச, தலையில் முடி வெட்டி விடலாம் என்று முடியை வெட்டும் போதுதான் தெரிந்தது அத்தலையில் இருந்த காயத்தில் புழுக்கள் இருந்தது, பாவம் அந்த அம்மா வலியை எப்படி பொறுத்துக்கொண்டு இருந்தார் என்று தெரியவில்லை , முடிதிருத்தம் செய்து காயத்தில் இருந்த புழுக்களை எல்லாம் எடுத்துவிட்டு காயத்திற்கு மருந்து போடப்பட்டு உள்ளது, இப்படி ஒரு வேதனை யாரும் அனுபவிக்க கூடாது. அந்த வயதான அம்மா விரைவில் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
நன்றி...

![Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(159/2013)
செல்வி சுதா கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவை செல்வபுரம் அருகில் LIC காலனி என்ற பஸ் ஸ்டாப்பில் ஒரு வயதானவர் உடுத்த உடை கூட இல்லாமல், காலில் காயங்களுடன் எழுந்து நடக்க முடியாமல், படுத்த படுக்கையாய் தெருவில் ஒரு முதியவர் கிடந்ததாக அறிந்தோம். கடந்த 17/04/2013 அன்று ஈரநெஞ்சம் அமைப்பின் மூலம் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 27/04/2013 அன்று சிகிச்சை பலனின்றி இறைவனடி சேர்ந்தார். தெருவில் இருந்த போதும் இறுதி காரியங்களுக்காவது அவர் நல்ல இடம் வந்து சேர்ந்தது இறைவன் செயல்.
சம்பிரதாயங்கள் முடிந்து 12/05/2013 அவரது உடல் ஈரநெஞ்சம் அமைப்பைச் சேர்ந்த வைரமணி என்ற பெண் மயான தொழிலாளியின் உதவியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கோவை B10 காவல் நிலையத்தினரும் ஈரநெஞ்சம் அமைப்பும் இணைந்து இறுதி காரியங்கள் செய்தனர். அவரது ஆத்மா சாந்தி அடைய ஈரநெஞ்சம் அமைப்பின் சார்பாக பிரார்த்திக்கிறோம்.
~நன்றி
ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam
Based on the information provided by Selvi Sudha about an old man, almost naked without enough clothes and injured on his legs and laid on the street near LIC Colony Bus Stop in Selvapuram, Coimbatore, he was admitted in the Government Hospital, Coimbatore, by Eera Nenjam on 17/04/2013. Unfortunately he died on 27/04/2013. Even though he lived on streets, at least he was at a better place at his last moment.
His body was cremated after the rituals with the help of Ms. Vairamani, a volunteer in Eera Nenjam and working in the Cremation center. B10 police station and Eera Nenjam joined hands with her. Let us all pray for his soul rest in peace.
~Thank You
Eeranenjam](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash4/p480x480/400771_244379552353674_790385937_n.jpg)

![Photo: "ஈர நெஞ்சம் சேவைகள்" / EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
கோவை கிராஸ் கட் ரோடு பகுதியில் நடக்க முடியாமல், வாத நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் பெற்ற பின்னர், போவதற்கு உற்றார் உறவினர் இல்லாத நிலையில், கடந்த 10 நாட்களாக ஆதரவற்று இருந்த திரு.ஹுசைன் என்னும் 65 வயது முதியவரைக் கண்ட மனித நேயம் மிக்க, கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், திருநெல்வேலியைச் சேர்ந்த திரு.கே.கோவிந்தராஜ் என்னும் இளைஞர் B3 காட்டூர் காவல் நிலையத்திற்கு விபரத்தைத் தெரிவித்தார்.
அதன் பின்னர் நமது ஈர நெஞ்சம் அமைப்பின் மூலம் காட்டூர் காவல் நிலையத்தின் அனுமதியோடு திரு கே. கோவிந்தராஜ் அவர்களின் உதவியோடும் திரு ஹுசைன் அவர்கள், கோவை மாநகராட்சி காப்பகத்தில், 28.10.2012 அன்று சேர்க்கப்பட்டு உள்ளார்.
ஆதரவற்ற ஒரு முதியவருக்கு, தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளைஞர் திரு கே. கோவிந்தராஜ் அவர்களை ஈர நெஞ்சம் மனதாரப் பாராட்டுவதோடு இதுபோல் இன்னும் பல நல்ல செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என வாழ்த்துகிறது.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(97/2012)
ஈர நெஞ்சம்
......
Mr. Hussain, (Age: 65), who was discharged from a hospital after getting the treatment for the paralysis attack, was found unattended near Cross-cut road, Coimbatore for the past ten days. A kind hearted person Mr K. Govindaraj, hailed from Tirunelveli reported this matter to B3 police station.
He came to know about our organization and informed us. Mr. Hussain was then admitted to "Coimbatore Corporation Home" after getting proper permission from the Kattur Police station on 28.10.2012.
We appreciate Mr. K. Govindaraj for his service and wish him.
We continue to seek your help and the almighty to perform such kind of good activities through our "EERA NENJAM" organization.
~Thanks /(97/2012)
EERA NENJAM](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-snc6/c57.0.403.403/p403x403/223603_192885494169747_1116482418_n.jpg)
![Photo: காலத்தினால் செய்த " ஈர நெஞ்சத்தின் உதவி" / Timely help from "EERA NENJAM"
******
[For English version, please scroll down]
ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் கோவை அரசு மருத்துவமனையை ஒட்டிய சாலையை கடந்து செல்கிறார்கள். அந்த வழியில் கிடந்த ஒரு புண்பட்ட மனிதரை, யாரும் கவனிக்கவே இல்லை.ஆனால், சூலூரைச் சேர்ந்த "ஈர நெஞ்சம்" கொண்ட சம்பத் குமார் மற்றும் ரஞ்சித் இருவரும் அதனைக் கண்டவுடன், எங்கள் அமைப்பிற்குத் தகவல் கொடுத்தனர். இடது கால் தீக் காயம், அதில் ஈக்கள் மற்றும் புழுக்கள் மற்றும் நினைவின்றி சரியான உணவோ தண்ணீரோ கிடைக்காமல் கிடந்த அவரை, "ஈர நெஞ்சம்" அமைப்பு உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தது. அவருக்கு தக்க மருத்துவ சிகிச்சை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
சூலூரைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் சம்பத்குமார் இருவருக்கும் ஈர நெஞ்சம் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது. சரியான நேரத்தில் செய்த உதவியினால் ஒரு உயிர் இப்போது பாதுகாக்கப்பட்டமன நிறைவோடு எங்கள் அமைப்பு, இதுபோல் இன்னும் நிறைய நற்செயல்கள் நடைபெறுவதற்கு உங்களின் ஆதரவையும் இறைவனின் அருளையும் வேண்டுகிறது . பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடைய நாம் அனைவரும் சேர்ந்து பிரார்த்தனை செய்வோம்.
http://www.youtube.com/watch?v=u2JFad0uJ5U&feature=youtu.be
http://www.youtube.com/watch?v=oOqMG7AOGZQ&feature=youtu.be
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(77/2012)
ஈர நெஞ்சம்.
......
Thousands of people have been using roads leading to Coimbatore Government Hospital. No one noticed a unhealthy person who was lying down on the street except two kind hearted fellows, Sampath kumar and Ranjith, who hailed from Sulur. His left leg had fire-injury surrounded by flies and maggots with light-headedness and improper foods. We acted immediately after their information by calling 108 ambulance service and made arrangements to admit him to Government Hospital, Coimbatore. As of now he is under medication. We salute the noble service of Sampathkumar and Ranjith. We ourselves are satisfied that he is safe and given proper medication and care in the hospital.
We continue to seek your help and the almighty to perform such kinds of good activities through our "EERA NENJAM" organization.
~Thanks
EERA NENJAM (77/2012)](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/c0.0.640.305.95492289442/p843x403/530359_312097565554333_1856708822_n.jpg)










