கடந்த வருடம் 19/04/2014 அன்று கோவை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே காவலர் மூலமாக பிரதீப் 23 மனநிலை சரி இல்லாத நிலையில் மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர்.
பிரதீப் கூறும் பொழுது " நான் எந்த நிலையில் இங்கு வந்தேன் என்று எனக்கு இதுவரை தெரியாது . ஆனால் இங்கு எனக்கு அன்பும் அனுசரணையும் அதிகம் கிடைத்தது . இங்கு உள்ள முதியோர்களை பார்த்துக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது இங்கு உள்ள சேவையைக் கண்டு மெய் சிலிர்த்து போனேன். அதனாலேயே இவர்களை விட்டுப் பிரிய மனம் இல்லை. என்னை முழுமனிதனாக மாற்றி உறவினர்களுடன் இணைத்து வைக்க ஈரநெஞ்சம் அறக்கட்டளை மற்றும் மாநகராட்சி காப்பக நிர்வாகிகள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு நான் பெரிதும் கடமைப்பட்டு இருக்கிறேன் . இங்கு இருந்ததில் நான் தமிழும் நன்கு கற்றுக் கொண்டேன். இப்போது நான் மகிழ்ச்சியாக அண்ணனுடன் ஊர் செல்கிறேன் " என்று சொல்லிக் கிளம்பினார்.
பிரதீப் அவர்களை அவரது உறவினருடன் சேர்த்துவைக்க உதவிய அணைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் . ~ஈரநெஞ்சம்
மனநிலை பாதித்த நிலையில் பிரதீப்
அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை பிரதீப் பிடம் விசாரித்து பல தகவல்கள் சேகரித்து அவருடைய உறவினர்களை தேடும் முயற்சியுடன் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் முயற்சியையும் மேற்கொண்டது.
https://www.facebook.com/photo.php?fbid=345269842264644&set=pb.100003448945950.-2207520000.1428237057.&type=3&theater
சுமார் ஒருவருடமாக ஈரநெஞ்சம் அறக்கட்டளை மேற்கொண்ட பெரும் முயற்சியின் பயனாக பிரதீப்பிற்கு உடல் நலனும் தேறியது . அதோடு அவரது உறவினர் முகவரியும் கண்டுபிடிக்கப்பட்டது
மேற்கு வங்காளம் பீர்பாரா ( Birpara ) பக்கத்தில் ராம்தாலா (ராம்ராஜ்தாலா) என்னும் பகுதியில் உள்ள டீ எஸ்டேட் கம்பெனிகளுக்கு பிரதீப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து மெயில் மூலம் அனுப்பப்பட்டு வந்தது . இதனைக் கவனித்த சில கம்பெனிகள் பிரதீப்பின் புகைப்படத்துடன் அந்த ஊர் பகுதியில் உள்ள சுவர்களில் நோட்டிசாக ஒட்டி பிரதீப்பின் உறவை தேடும் முயற்சியில் அவர்களும் ஈரநெஞ்சம் அறக்கட்டளையோடு கைக் கோர்த்தனர். அதன் மூலம் பிரதீப்பின் உறவினர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டனர் . உறவினர்கள் கிடைத்துவிட்டார்கள் என்ற மகிழ்ச்சி அடைந்தாலும் கூட அவர்கள் அதிக வெளியுலக வாழ்க்கை அறியாதவர்கள் . ஆதலால் அவர்களிடம் பிரதீப் பற்றி கூறியதில் அவர்களுக்கு கோவை பற்றியும், இந்த ஊர் எங்கு உள்ளது என்பது பற்றியும் அவர்களுக்கு விளங்கவில்லை . அவர்கள் படிப்பறிவும் போதிய வெளி உலக வாழ்க்கையும் அறியாதவர்கள் போன்று தெரிந்தது . இதனால் பிரதீப்பின் உறவினர்களை கோவைக்கு வரவழைப்பத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு வந்தது.
ஈரநெஞ்சம் அறக்கட்டளை தொடர்ந்து பிரதீப்பை அவர்களது உறவினர்களுடன் ஒப்படைக்கும் முயற்சியை மேற்கொண்டு வந்தது . இதன் பலனாக கடந்த வாரத்தில் பிரதீப்பின் சகோதரர் மார்டின் என்பவர் தொடர்பில் கிடைத்தார் . அவரிடம் விபரத்தை சொன்னதும் தம்பியை அழைத்து செல்ல உடனடியாக இன்று கோவைக்கு வந்தார் . பிரதீப் அவரை சந்தித்ததும் ஆனந்த கண்ணீர் மல்க தொலைத்த உறவை கண்முன் கண்டதும் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது நம்மையும் கலங்கவைத்துவிட்டது.
பிரதீப்பின் சகோதரர் மார்டின் கூறும்போது " கேரளாவில் என்னோடு தான் பிரதீப் வேலைப் பார்த்து வந்தான். கடந்த வருடம் விடுமுறைக்கு ஊருக்கு செல்வதாக சொல்லிக் கொண்டு சென்றவன் வீடு போய் சேரவில்லை. அலைபேசி வசதி எங்கள் ஊரில் சரிவர இல்லாததால் இவன் காணாமல் போனதும் எனக்கு தெரியாது கடந்த மாதம் நான் விடுமுறைக்கு ஊருக்கு போனபோதுதான் பிரதீப் அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது. எனது பெற்றோர்களிடம் ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் பிரதீப் பற்றி அவ்வப்போது பக்கத்து வீட்டினரின் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவார்கள். ஆனால் எங்கிருந்து பேசுகிறார்கள் என்பது தெளிவாக என் பெற்றோருக்கு புரியவில்லை . என்னிடத்திலும் தகவல் தெரிவிக்க முடியாத நிலை அதனால் தான் தகவல் தெரிவிக்க வில்லை என்றும் கூறினார்கள் . பிரதீப்பை எப்படி கண்டுபிடிப்பது என்ற கவலையில் இருந்த போதுதான், கடந்தவாரம் மீண்டும் பக்கத்து வீட்டிற்கு அலைபேசியில் ஈரநெஞ்சம் என்று சொல்லி பிரதீப் பற்றி கூறினார்கள் . அதனாலேயே பிரதீப் இருக்கும் இடம் தெரிந்து உடனடியாக தம்பியை அழைத்து செல்ல வந்தேன் " என்றார்.
குணமடைந்த பிரதீப்
பிரதீப் அவர்களை அவரது உறவினருடன் சேர்த்துவைக்க உதவிய அணைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் . ~ஈரநெஞ்சம்





![Photo: ''ஈர நெஞ்சம் சேவைகள் / EERA NENJAM Services''
******
[For English version, please scroll down]
13.12.2012 அன்று, ஹலோ எஃப்.எம்.ஐச் சேர்ந்த திரு.கண்ணன் அவர்கள் சொன்னதன்
பேரில், எங்கள் அமைப்பால், கோவை அரசு பொது மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் சற்று உடல்நலம் தேறிய
நிலையில், தனது பெயர் கண்ணன் என்றும், லாரி ஓட்டுனராக பணி புரிவதாகவும்,
தனது ஊர் கோவை சரவணம்பட்டி என்றும், தனது தம்பி பெயர் நடராஜ் என்றும்
எங்களிடம் தன்னைப்பற்றிய சில விவரங்களைத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து
அவரது தம்பி நடராஜ் அவர்களை ஈர நெஞ்சம் அமைப்பு தேடிக் கண்டுப்பிடித்து
அவரது அண்ணன் பற்றிய தகவலை சொன்னதன் பேரில் அவர் 17.12.2012 அன்று தனது
அண்ணனை அழைத்துச் சென்று வேறு ஒரு மருத்துவமனையில் சேர்த்து உள்ளார் என்பதை
மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
திரு நடராஜ், எங்கள் அமைப்பிடம் அடிக்கடி, தனது அண்ணன் வெளி ஊர்களில் உள்ள
கோவில்களுக்குச் சென்று வருவார் என்றும், அவர் இந்த முறை அதுபோல சென்ற போது
எதிர்பாராமல் நடந்துள்ள விபத்தின் காரணமாக இப்படி ஆகிவிட்டது என்றும்,
அவரைப் பற்றிய தகவல் தெரியாமல் தான் தேடிக்கொண்டு இருந்தபோது ஈர நெஞ்சம்
அமைப்பு தனது அண்ணனை கண்டு பிடித்து தன்னிடம் சேர்த்து உள்ளது என மனம்
நெகிழ்ந்து நமக்கு நன்றி தெரிவித்தார் .
திரு.கண்ணன் ( ஹலோ எஃப்.எம்) அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்துக் கொண்டார் .இந்த உலகத்தில் ஆதரவற்றோர் என யாருமே இல்லை.
தொலைந்த உறவை மீட்டுக் கொடுத்த மகிழ்வில் ஈர நெஞ்சம் திரு. கண்ணனன்
அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு இது போல இன்னும் பலருக்கு உதவத்
துணை புரிய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறது.
~நன்றி (120/2012)
ஈர நெஞ்சம்
......
You may know that an unidentified person was admitted to Coimbatore
Government Hospital by our organization with the help of Mr. Kannan
(working for Hello FM) on 13.12.2012. As he was getting better, he told
us his personal information. His name is Kannan, working as a lorry
driver and hailing from Saravanampatty, Coimbatore and his brother's
name is Mr. Nataraj. Based on the information provided, we contacted Mr
Nataraj and he got admitted him in some other hospital. Mr. Nataraj told
us that Mr. Kannan used to visit temples often and this time he got
lost due to the accident he had. He also added that though they were
searching for him and found him finally through EERA NENJAM. He thanked
Mr. Kannan (Hello FM).
As we always say, no one is orphan in this world, and we are happy and
proud ourselves that Mr. Kannan got reunited with his family through our
organization. We thank Mr. Kannan (Hello FM) and wish him to help many
other needy people.
~Thanks(120/2012)
EERA NENJAM](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/c58.0.843.403/p843x403/20516_344109205686502_319602057_n.jpg)






![Photo: "ஈர நெஞ்சம் சேவைகள்" / "EERA NENJAM Services"
......
[For English version, please scroll down]
திருச்சியைச் சேர்ந்த திருமதி. ரேகா (வயது: 26), காதலித்து மணந்த கணவனால் கைவிடப்பட்ட நிலையில், தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் ஆதரவின்றி, ஸ்ரீ ரங்கம் கோவிலின் அருகில் மிகவும் கஷ்டப்பட்டு பிறரிடம் கை ஏந்தி வாழும் நிலையில் இருந்தார். அவரது நிலை கண்டு, மனம் இளகிய திருச்சி லால்குடியைச் சேர்ந்த திரு. ஞானசேகர், எங்கள் அமைப்பின் உதவியை நாடினார். அவரைப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்து வாழவைக்க வேண்டுமென்ற நோக்கத்தில், கோவை பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் 03.11.2012, அன்று தாயும் சேயும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
கணவனாலும், பெற்றோராலும், சகோதரனாலும் கைவிடப்பட்டு புகலிடம் இன்றித் தவித்தத் தனக்கு நல் ஆதரவு தந்த "ஈர நெஞ்சம்" அமைப்பிற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் திருமதி.ரேகா தெரிவித்துக் கொண்டார்.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(99/2012)
"ஈர நெஞ்சம்"
......
Mrs. Rekha, (Age:26), abandoned by her husband and family, was found helpless with her one year old son near Srirangam temple. She is from Trichy and had a love marriage. Considering her situation, Mr. Gnanasekar of Lalgudi contacted our organization. We made arrangement to admit her and her son in the Universal Peace Foundation, Coimbatore on 03.11.2012.
Mrs. Rekha thanked us for our timely help.
~Thanks / (99/2012)
"EERA NENJAM"](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/c0.0.843.403/p843x403/18517_328610087236414_1460680226_n.jpg)




