Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Friday, March 01, 2013

கடவுளை காணவில்லை

****கடந்த சில நூற்றாண்டுகளாக கடவுளை காணவில்லை****


ஆகையால் கடவுள் காணாமல் போனதனால் மனிதன் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளான்.
கடவுள் காணாமல் போனதனால் மனிதன் பல பாவங்களுக்கு உள்ளாகி இருக்கிறான். கடவள் காணாமல் போனதனால் மனிதன் பல பாவ செயலுக்கு துணை போகிறான்,
கடவுள் காணமல் போனதனால் மனிதன், நானே கடவுள் என்று தலை கனத்துடன் இருக்கிறான் ,
கடவுள் காணாமல் போனதனால் மனிதன் மனிதனாக காட்சி அளிக்காமல் ஒரு ஜந்துவை விட கேவலமாக காட்சியளிக்கிறான் ,
கடவுள் காணாமல் போனதனால் சட்டங்களையே சாட்சியாக கொண்டு கொலைகளை கூட புனிதமாக்குகிறான்,
கடவுள் காணாமல் போனதனால் மனிதனுக்கு கல்லுக்கும் கடவுளுக்கும் வித்யாசம் தெரியாமல் இருக்கிறான்,
கடவுள் காணாமல் போனதனால் மனிதன் மலர்களை கூட நிம்மிதியாக மரணிக்க விடாமல் மலர்களை தூக்கில் இடுகிறான்,
கடவுள் இருக்கும் இடம் தெரியாமல் கடல், மலை, காடு ,கடுகு, தூண், துரும்பு , கண்டம், அண்டம் என தேடாத இடம் இல்லை கடவுள் கண்டு பிடிக்க முடியவில்லை.

கடவுளின் உட்பொருள் தெரியாமல் தேடுகிறான் மனிதன் .
கடவுள் இதன் உட் பொருள் கட+உள் அதாவது உன்னுள் ஊடுருவி பார் கடவுளை காணலாம் .

நீயே கடவுள் நீ உன்னை கண்டால், ஒவ்வொருவரிடமும் கடவுள் உட்கொண்டு இருக்கிறான் ,  கடவுளை காணும் அவசியம் அது  உன்னைத்தேட வேண்டி இருக்கட்டும் .

~மகேந்திரன்

Friday, October 26, 2012

மரங்களை எல்லாம் இப்படி கடவுள்ளாக ஆக்கிட்டா


மரங்களை எல்லாம் இப்படி கடவுள்ளாக ஆக்கிட்டா யாரும் வெட்ட மாட்டார்களோ...
"மே பிளவர்" மரம் இல்லைங்க இது விநாயகர் மரம்
கோவை ராம் நகர் பகுதியில்...
~மகி

Monday, February 27, 2012

உயிரை வதைக்க வேண்டாம் ~மகேந்திரன்



இந்த காட்சியை காணும் இதயங்கள் இனியாவது மாமிசம் உண்ணாமல் இருக்குமா..?
மாமிசம் உண்பதே தவறு ,
அதிலும் ஒரு நல்ல விஷேச தினங்களில் , அதுவும் கோவிலில் உயிர் பலி இட்டு தன் சுயனலதிர்க்காக வாழ்வது கடவுள் ஏற்குமா ?
எந்த கடவுள் உயிர்பலி கேட்கிறது ?
எந்த கடவுள் உயிர் பலிக்கேட்கிறதோ அதை கடவுளாக எண்ணுவதும் வணங்குவதும் நியாயமா ?
~மகேந்திரன்

Monday, October 31, 2011

இறக்கம் காட்டு..♥

வேண்டாத 
தெய்வம் இல்லை
நீ
என்னை காதலிக்க..♥
எந்த
கடவுளுக்கும்
இறக்கம் இல்லை
நீயே
இறக்கம் காட்டு..♥

Sunday, October 16, 2011

ஏற்றுக்கொள்ளாதோ..!

கிள்ளி போட்ட
பூக்களையெல்லாம்
ஏற்றுக்கொள்ளும்
கடவுள்...
ஆடு, சேவல், பலியிடுவதை
ஏற்றுக்கொள்ளாதோ..!

Wednesday, October 12, 2011

"கடவுளாலும் இயற்கையை ரசிக்க முடியவில்லை"

"கடவுளாலும் இயற்கையை ரசிக்க முடியவில்லை"

இயற்கையை ரசி இயற்கையை ரசி என்று ஒரு உழைப்பாளியை பார்த்து காட்டுக்கத்து கத்தினார் இறைவன் ...

உழைப்பாளிக்கு கோபம் வந்தது....

கடவுளின் சட்டையை பிடித்தான் உழைப்பாளி, சட்டை கிளியா கத்தினான் ...

அடக்க முடியாத சிறுநீரை அடிக்கி கொண்டு தலையாட்டிக்கொண்டு முதலாளிமுன் நின்று இருக்கியா...என்றான் கடவுளிடம் உழைப்பாளி..,

கையில் குமட்டும் டீசல் நாத்ததுடன் ஒரு நாலாவது சாப்புட்டு  இருக்கியா ?,

பிஞ்சு போன செருப்புக்காக வச்சுருந்த காசில் குழந்தைக்கி மிட்டாய் வாங்கி தந்து இருக்கியா ?
அடுத்தசம்பலம் வரும் வரைக்கும் அறுந்து போன செருப்பையே இழுத்து இழுத்து நடந்து இருக்கியா ?,

ஸ்கூல் போற என் பையன் டாட்டா சொல்லி போகும் பொது கிழிஞ்ச டிரௌசரை பார்த்து இதயம் என்னைக்காவது அழுது இருக்கா ?

ஒரு கரும்பு   சக்கை போல பிழிந்து கொண்டு இருக்கும் அலுவலக நேரத்தில் கழிவறையில் களைப்பு தீர்க்க ஒதுங்கி இருக்கியா ?

தான் மகன்  வயதுள்ள முதலாளிக்கு  சோத்து மூட்டை தூக்கி கொண்டும், டம்ளர் களிவிக்கொண்டு  என்றாவது நீ இருந்து இருக்கியா ?

கொதிக்கும் தார் சாலையில் தன மகன் நடந்துவர , எஜமானின் மகனை சைக்கிளில் உட்காரவைத்துக்கொண்டு, அந்த பிஞ்ச செருப்பையும் , இழுத்துக்கொண்டு நடந்து இருக்கியா..?

முதலாளி வீட்டுக்காக கறிக்கடையில் கறிவாங்கும் பொது , தன் வீட்டுக்கு சமைக்க அரிசி கடன் வாங்க வந்த மனைவியின் முகம் காணாமல் ஒளிந்து கொண்டு இருந்து இருக்கியா ?

இறைவன் படைத்த மழையின் வானவில் வந்தது,
இறைவை பார்த்தான்
அவமானத்தில் ரசிக்க முடியாமல் தலை கவிழ்ந்து போனான் ...!