Showing posts with label வரம். Show all posts
Showing posts with label வரம். Show all posts

Wednesday, December 21, 2011

மரங்கள் பூமிக்கு வரங்கள்..!

மரங்கள் பூமிக்கு வரங்கள்..!
மரங்கள் நமக்கு  தராதது என்று என்ன இருக்கிறது..?
மரங்களுக்காக நாம் என்ன குடுத்து இருக்கிறோம்..?
கருவறை முதல் கல்லறை வரை மரங்கள் தான் சுனக்கிறது..?
ஆணி அடித்தாலும் சரி 
தொட்டில் கட்டினாலும் சரி
மரங்கள் தொகையை தான் விரிக்கிறது..!
இடியானாலும், மின்னலானாலும், மழையானாலும், வெய்யில்லானாலும், மனிதனுக்கு  பொறுமையை கற்றுத்தருகிறது..!
மனிதன் கல்லை எறிந்தாலும்
மரங்கள் மனிதனுக்கு  மலர்களையே  உதிர்க்கிறது..!
மாநாட்டுக்குள் எந்த மரங்களும்  மார்தட்டிக்கொள்வது இல்லை தான்தான் உயர்ந்த ஜாதி என்று..!
எந்த மரமும் அடுத்த மரத்துக்கு  எதிரியாய்  இருந்தது இல்லை..!
மனிதனிடம்  எத்தனை  மிருகங்கள்..!
மரங்களிடம்  மரங்கள் மட்டுமே இருக்கின்றது..!
மனிதா... 

கொஞ்சம் கவனித்தாயா  
நீ 
மரங்களை 
வெட்டும் போதுகூட  
கிளைகள் 
உனக்கு சாமரம் வீசுவதை..!

Saturday, November 05, 2011

வரம் கேட்க...

சாமியிடம்
வரம் கேட்க
பிரகாரம் சுற்றலாம்...
உன்னிடம்
உன்னை கேட்க
உன்னைத்தானே சுற்றவேண்டும்...♥


Saturday, October 22, 2011

தவம்..! வரம்..!

என்
கவிதை தவம்..!
உன்
புன்னகை வரம்..!