Showing posts with label புன்னகை. Show all posts
Showing posts with label புன்னகை. Show all posts

Tuesday, November 08, 2011

கற்றுக் கொடுக்க வேண்டும்

மலரத்தெரியாத 
மொட்டுகளுக்கெல்லாம் 
உன் 
புன்னகையைக் காட்டித்தான் 
கற்றுக்கொடுக்க 
வேண்டும்..!

Tuesday, October 11, 2011

என்ன வித்யாசம்..?

உன்
புன்னகைக்கும்,
பூவுக்கும்
என்ன வித்யாசம் இருக்கிறது...
என்
தோட்டத்தில் 
உன்
புன்னகைதான் பூத்திருப்பதை
கண்டு இருக்கிறேன்...
சுதாகரித்த பிறகுதான்
தெரியும்
அவையெல்லாம் பூக்கள் என்று..♥

Saturday, October 08, 2011

விளக்குகள் இல்லை...♥

புன்னகையோடு
செல் பெண்ணே...
என்
சாலைகளில்
விளக்குகள் இல்லை...♥

Wednesday, September 07, 2011

ஆயிரம் கவிதை...♥

உன்
புன்னகையை பார்த்தாலே
ஆயிரம்
கவிதை வரும்...
ஆனால்
அதை இரசிப்பதால்
கவிதை
எழுதும் யுத்தி
மறந்து போகிறது..♥