Showing posts with label தாத்தா. Show all posts
Showing posts with label தாத்தா. Show all posts

Saturday, January 21, 2012

சுப்பிரமணி தாத்தாவிற்கு ஒரு பாதுகாப்பான இடம்...~மகேந்திரன்

கோவை ஹலோ பண்பலையில் வர்ணனையாளராக பணிபுரியும் கௌசிகா என்பவர் அவர் பணிபுரியும் அலுவலகம் அருகில் சாலையோரமாக  ஒரு வயதான பெரியவரை கடந்த ஒருவாரமாக சந்தித்து வந்தார் , அந்த பெரியவர் பெயர் சுப்பிரமணி, அவருக்கு வயது 90 , கண்பார்வை இல்லை, இவருக்கு ஆதரவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை, சாலையில் குப்பைகளை பொறுக்கிக்கொண்டு வயிற்று பிழைப்பு நடத்திவந்துள்ளார் , கண் பார்வை போனதனால் சாலையிலேயே நான்கு வருடமாக  இருக்கிறார் ,  இதனால் கௌசிகா அந்த பெரியவருக்கு தினம் உணவு வழங்கி கவனித்துக்கொண்டார், கௌசிகா அவருக்கு இந்த பெரியவரை ஏதாவது ஒரு பாதுகாப்பான இடம் கிடைக்க என்னிடம் (மகேந்திரன்) தொடர்புகொண்டு சுப்பிரமணி தாத்தா வை பற்றி விபரத்தை சொல்ல ,  நான் எனது நண்பர்கள் தபசு ராஜ் , மோகன சுந்தரம் அந்த பெரியவர் இருக்கும் இடமான கோவை VOC பூங்கா பின் புறம் ஒரு சாலை ஓரமாக அமர்ந்து 



இருந்தார் , அவரை நாங்கள் சந்தித்து அவருக்கு தலை சவரம் செய்து குளிக்கவைத்து , கோவை RS புரத்தில் உள்ள மாநகராட்சி காப்பகத்தில் அவருக்கு இடம் கேட்டு அங்கு எனது வாகனத்திலேயே அழைத்து கொண்டுபோய் சேர்த்து விட்டு வந்தோம் ,
வாழ்த்துக்கள் கௌசிகா...

சுப்பிரமணி தாத்தா தற்போது நல்லபடியாக இருக்கிறார்
ஏதாவது நல்லது செஞ்சுகிட்டே இருக்கனும்க...
~மகேந்திரன்

Friday, December 16, 2011

வேணு தாத்தா அரசு மருத்துவமனையில் இருந்து காப்பகத்தில்~மகேந்திரன்





 
இந்த பெரியவர் பெயர் வேணு, கடந்த இரண்டு வாரத்திற்கு முன்  அடையாளம் தெரியாத ஒருவரால் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு இதுவரை வந்து பார்க்க வில்லை, தற்போது இவருக்கு சிகிச்சை முடிவடைந்து அழைத்து செல்ல யாரும் இல்லாதநிலை, மேலும் இவரால் முதுகு தண்டு அடிபட்ட காரணத்தால் நடக்க முடியவில்லை, சிகிச்சை முடிவடைந்ததால் இவருக்கு கவனிப்பு குறைந்து விட்டது , இவருக்கு யாரும் துணையில்லை , இவரிடம் இவரை பற்றி கேட்க்கும்போது தனது பெயர் வேணு என்றும் ,திருவண்ணாமலை சேர்ந்தவர் ,தனக்கு யாரும் துணை  இல்லை வீடு , உறவினர் ஏதும் இல்லை  என்றும் கூறியுள்ளார் ,
 இன்று காலை ஒருவர் எனக்கு இந்த விபரத்தை சொல்லி இவருக்கு ஆதரவு கேட்க , நான்  மகேந்திரன்  எனது நண்பர் தபசுராஜ் உடனடியாக  அவரை கோவை அரசு மருத்துவமனையில் இருந்து RMO அனுமதியோடு டிஸ்சார்ஜ் செய்து , கோவை அன்னை தெரேசா காப்பகத்தில் சேர்த்து அவருக்கு மீண்டும்  அங்கு முதலுதவி செய்யப்பட்டது அதனைதொடர்ந்து ,நானும் எனது நண்பர் தபசுராஜும் அங்கிருந்து விடை பெற்றோம் .
மருத்துவமனையே ஆனாலும்  அங்கு மருத்துவரே  இருந்தாலும்

உறவினர் என்று ஒருத்தர் வேண்டுமே ,
எதோ மருத்துவமனை வரை இந்த பெரியவரை வந்து சிகிச்சைக்காக  செர்த்தவரை  வாழ்த்தவேண்டும் .
~மகேந்திரன்

Thursday, November 17, 2011

இன்று தான் இந்த தாத்தாவிற்கு நல்லகாலம் பிறந்தது ~மகேந்திரன்








கோவில் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் கடந்த நாற்ப்பது வருடமாக சாலையே கதி என்று இருந்தவர் இவர், இவரால் பேசமுடியாது ,அதனால் இவருடைய பெயர் தெரியலைங்க , இவரால் நடக்கவும் முடியாதுங்க எங்கு போனாலும் நகர்ந்துதான் போகிறார் , அந்தபகுதியில் இருப்பவர்கள் எல்லோரும் இவரை கோவையன் என்றுதான் கூறிவருகிறார்கள்.
நண்பர்களே உங்களுக்கு தெரியும் நான் சாலையோரமாக ஆதரவற்ற முடியாத நிலையில் இருப்பவர்களை ஏனைய பேர்களை ஏதேனும் காப்பகங்களில் இடம் கேட்டு அதில் அவர்களை சேர்த்து வருகிறேன் என்று.
அதேபோல இந்த பெரியவரையும் காப்பகத்தில் இடம் கேட்டு அனுமதி கிடைத்தும் இவரை அழைத்து செல்ல ஆமுலன்ஸ் வரவழைத்தாலும் இவரை பார்த்துவிட்டு ,இவர்மேல் வீசும் துர்நாற்றம் பொறுக்கமுடியாமல் யாரும் முன் வருவது இல்லை, எத்ததையோ பேருக்கு என்னால் அடிக்கலாம் கிடைத்து இருக்கிறது ஆனால் இவருக்கு எந்த ஒரு நல்வழி கிடைக்க வில்லை என்று எனக்கு பலநாள் தூக்கம் கேட்டு உள்ளது.
ஆனால் இன்று இவருக்கு நல்ல காலம் பிறந்தது , எனது நண்பன் அருள் அவரது வாகனம் கிடைத்தது அதில் இந்த பெரியவரை அழைத்து பொய் கோவை அன்னை தெரேசா காப்பகத்தில் சேர்த்துவிட்டு
அவருக்கு தேவையான முதல் உதவிகளை செய்து குடுத்து விட்டு நிம்மதியுடன் வீடு திரும்பினேன் .
"போகும் பொது என்னங்க கொண்டு போகபோறோம் ?"
~மகேந்திரன்