Showing posts with label எப்படி இருதவள் எப்படி ஆயிட்டா. Show all posts
Showing posts with label எப்படி இருதவள் எப்படி ஆயிட்டா. Show all posts

Saturday, September 24, 2011

எப்படி இருதவள் எப்படி ஆகிவிட்டால் -மகேந்திரன்

நான் மகேந்திரன் வழக்கம் போல பேட்மிண்டன் விளையாடிவிட்டு வீடு திரும்பும் பொது  ஒரு பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சந்தித்தேன்...  ,
தலை முடி முழுவதும் ஒட்டிபோய் ஆளுக்கு அண்டி அரைகுறை உடையுடன் காணப்பட்டால்,
பார்பதற்கு பரிதாபமாக இருந்தது,
பார்பதற்கு இந்த நிலையில் இருந்தால்

எனது நண்பர் சியாம் அவருடன் இணைந்து ,  அருகில் இருந்த கடையில் ப்ளேடு, சோப்பு, மற்றும் ஒரு வீட்டில் அவளைகுளிக்க வைக்க தண்ணீரும் வாங்கி வந்து அந்த பெண்ணிற்கு முடி வெட்டி விட்டு குளிக்கவைத்து வேறு உடையை அணிவித்து வந்தோம் ,
இப்போது அந்த மனநலம் சரியில்லாத பெண்

அதனை தொடர்ந்து
நாங்கள் இத பணியை செய்வதை ஒருவர் கவனித்துக்கொண்டு இருந்தார் , அவர் என்னிடம் வந்து என்னை மன்னித்து விடுங்கள் என்றார் ,
எதற்கு என்றேன் ,
நேற்றைய தினம், தன் கடைக்கு முன் நின்றதால் அந்த மனநலம் பாதித்த பெண்ணை கல்லைக்கொண்டு அடித்து விரட்டிவிட்டாராம் , இப்போது நீங்கள் இந்தப்பெண்னின் மீது காட்டிய அக்கறையை பார்க்கும் பொது எனக்கு நானே வெட்கப்படுகிறேன் என்றார். இதற்க்கு நான் "பரவாலை விடுங்க இனி இப்படி யாரையும் துன்புறுத்த வேண்டாம் " என்று சொல்லி விட்டு வந்துவிட்டேன்...
அந்த  மனிதர் மனம் திருந்தியது நம் மனம் மகிழ்ந்தது ...
~மகேந்திரன்