உன்
இதழுக்கு உடையை
உடுத்திய பிறகு...
பூக்கள் எல்லாம் தாம்
பிறந்த மேனியாய்
இருப்பதை
கண்டு
வெட்கப்படுகிறது..♥
வார்த்தைகளால் மட்டும்
சொல்லாதே..!
அலைபேசியிலும்
குடுத்துவிடாதே,
காற்றலைகள் தான்
அள்ளிக்கொள்ளும்..!
நீ
புரியும் வரை
ஊறி கிடக்கட்டும் இதழ்கள்
காத்திருக்கட்டும்
உன்
வரவுக்காக..!
இன்னும்
ஆயிரம் பூவில்
இருந்து
தேனை திரட்டினாலும்...
உன்
இதழ் தீண்டிய
சுவை
கிடைக்காது..♥
உன்
இதழ்களுக்கு சாயம்
பூசிவை...
பூ என நினைத்து
வண்ணத்துப்பூச்சிகள்
உன்
இதழ்களின் சுவைக்க
வந்துவிட
போகிறது..♥