Showing posts with label அரசு மருத்துவமனை. Show all posts
Showing posts with label அரசு மருத்துவமனை. Show all posts

Monday, November 04, 2013

கோவை அரசு மருத்துவமனையில் ஒரு பரிதாபம் ~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(227/03/11/13)

கோவை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஒரு வார காலமாக உடலில் ஆடை இல்லமால் எறும்பு மொய்த்த நிலையில் முதியவர் ஒருவர் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு அளித்தத் தகவலின் பேரில் 03/11/13 அன்று அந்த முதியவரை மீட்டு தேவையான முதலுதவிகளை அளித்து மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.
அவரை பற்றிய தகவல்கள் ஏதும் தெரியாத நிலையில் அந்த முதியவரின் உடல் நலம் விரைவில் குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் .
ஓராயிரம் பேர் வந்து போகும் அரசு மருத்துவமனையில் ஒரு வார காலமாக இவர் இந்த நிலையில் இருப்பதை ஒருவரும் பொருட்படுத்தாதது சற்று வருத்த படவே வைக்கிறது.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Eera Nenjam was informed by the public about an elderly man who was lying at Coimbatore General hospital property without any clothes on him and ants crawling all over his body. Following the information that was given on the 03.11.2013, Eera Nenjam rescued the elderly man and gave him first aid, later admitted him at the general hospital for treatment. There is no information about this elderly man. Let us pray to god for him to recover soon. There were thousands of people visit this hospital and it is so disturbing and hurt to know that no one cared and ignored this elderly man who was in such terrible condition.

Thank you.
~Eera Nenjam


Thursday, February 14, 2013

ஆதரவு இல்லாமல் இறந்த ஒருவருக்கு ஈரநெஞ்சம் நல்லடக்கம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
13/2/13
[For English version, please scroll down]

கடந்த 5/2/12 ஆண்டு கோவை அரசு மருத்துவ மனை அருகில் அடையாளம் தெரியாத ஒருவர் சுமார் 50 வயது இருக்கும் வலது காலில் காயம் பட்டு அழுகி போன நிலையில் உடலில் உடை கூட இல்லாமல் 10 நாட்களாக இருப்பதை அங்குள்ள பொதுமக்கள் ஈரநெஞ்சம் அமைபிற்கு தகவல் குடுக்க , ஈரநெஞ்சம் அமைப்பினர் உடனடியாக அங்கு சென்று அந்த பாதிக்கப்பட்ட நபரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்கள் , அதன் பின்னர் அங்கு அவருக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 5/2/13 அன்று மாலையே உயிர் பிரிந்தது, அதனை அடுத்து கோவை B4 காவல் நிலைய போலீசார் அவர் யார் எங்கிருந்து வந்தார் என்பதை விசாரித்து வந்தார்கள், விசாரணையில் எந்த தகவலும் கிடக்கபடவில்லை,
அதனை தொடர்ந்து இன்று 13/2/13 காலை B4 போலீசார் அனுமதியுடன் ஈரநெஞ்சம் அமைப்பினர் அந்த பிரேத உடலை கோவை புலியகுளம் மயானத்தில் இந்துக்கள் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது , ஆதரவு இல்லாமல் அவர் இருந்தாலும் அவர் இறந்த பிறகு ஈரநெஞ்சம் ஆதரித்தது .

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (141/2013)
ஈரநெஞ்சம்

Public informed Eeraneajam about an unidentified man about 50 years old who has been injured in his right leg lying for past 10 days near Coimbatore government hospital without cloths and care. Immediately Eeraneanjam admitted that person at hospital and started giving treatment. But unfortunately he passed away that evening 5/2/13. Eeraneanjam informed B4 police station regarding his death, with the help of police we tried to identify the person, but we didn’t get any information about that person. So with the permission of B4 police station, today 13/2/13 morning his last retuals done by Eearaneanjam volunteers at kovai puliyakullam. Though he doesn’t have any one to support him, Eeraneajam adopted him and did last rituals. Let his soul rest in peace.

~THANK YOU
EERANENJAM

Friday, November 04, 2011

அரசு மருத்துவமனை...

அரசு மருத்துவமனை...
சில்லறை இருந்தால்
கல்லறை
செல்லும் அவசியம்
இல்லை..!