Wednesday, September 14, 2011

கலைவாணியை வீதியில் விட்டுவிடக்கூடாது -மகேந்திரன்

இவர் பெயர் சிவகுமார் நல்ல கலைஞர்
ஊர் கும்பகோணம் பிழைப்பைத்தேடி கோவையில் சாலையோரம் காணப்பட்டார்,
அவரிடம்...

 
விதி இப்படி சாலைக்கி தள்ளிவிட்டது, ஒருவர் தான் முன் நிற்கவைத்துவிட்டு அவரை பார்த்தபடியே களிமண்ணை கொண்டு ஒருசில நிமிடங்களில் தான் முன்னர் நிற்பவரின் உருவத்தை செய்து  முடிப்பார் ,
 
சிவகுமாரை போன்ற கலைஞர்கள் தற்போது வயிற்று பிழைப்பிற்காக கலையை சாலையில் தவம் கிடக்கின்றன...
சிலசமயம் இவர்களை பார்க்கும் போது சாலையில் கலைவாணி கையில் திருவோடு இருப்பது போல மனதில் இடி விழுகிறது...
சிவகுமார் இவர் செய்யும் குருவி, யானை, குதிரை ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் விற்று வயிற்றை கழுவிக்கொண்டு இருக்கிறார்,இவரை பற்றி நண்பர் V. பழனியப்பன் இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதுய கட்டுரை பிரசுரமானது, அதை படித்த  SRI KRISNA WOODEN ART நிறுவனர் N. விகயகுமார் இந்தியன் எக்ஸ்பிரஸ்  தொடர்புகொண்டு சிவகுமார் அவருக்கு தகுந்த வேலை தான் ஏற்படுத்தி தருவதாக சொல்லி உறுதி அளித்து சிவகுமார் வாழ்வில் வசந்தத்தை காட்டியுள்ளார்,

N. விகயகுமார் அவருக்கு சிவக்குமாரை அடையாளம் காட்டிய இந்தியன் எக்ஸ்பிரஸ் V.பழனியப்பன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
இன்னும் இது போன்ற நல்ல கலைஞர்கள் முகவரி இல்லாமல் இருக்கிறார்கள் அவரளுக்கு 

N. விகயகுமார், V. பழனியப்பன் போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் கிடைக்க ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்...
~மகேந்திரன் 
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment