Showing posts with label சிற்பி. Show all posts
Showing posts with label சிற்பி. Show all posts

Sunday, October 12, 2014

கைப்பொருள் இழந்து கலையை வாழவைக்கும் மாமனிதன்..அண்ணாமலை

நம் எண்ணங்களில் தோன்றும் பல கற்பனைகளை எழுத்து வடிவமாகவோ , அல்லது சித்திர வடிவமாகவோ படைக்கும் பொழுது அதை பார்ப்பவர்கள் மனதை கவர்ந்து அவர்களின் மனதில் எளிதாக பதியும் . அது மட்டுமில்லாமல் காலங்காலமாக அது அழியாமல் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை . இதன் காரணமாகவே கல் தோன்றிய காலமுதலாக சிலைகள், சுவர் ஓவியங்கள் , குகை ஓவியங்கள் , கல் வெட்டுகள் , ஓலை சுவடி ஓவியங்கள் மற்றும் பல படைப்புகள் படைக்கப்பட்டு இன்றளவும் நம் மனதை கவர்ந்துக் கொண்டிருக்கிறது . ஆனால் இக்காலக்கட்டத்தில் அப்படி பல கலைகளை உருவாக்கும் கலைஞர்கள் பலரும் , கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களுக்காக மக்கள் முன் படைக்க முன்வருவது இல்லை . அவர்கள் படிக்கும் கலைகளை , வியாபார நோக்கத்துடன் விற்று பல அரிய கலைஞர்கள் வியாபாரிகளாகவே மாறி விட்டனர் என்றே சொல்லலாம் .
இப்படிப் பட்டவர்களின் மத்தியில் கோவையைச் சேர்ந்த ஜெகநாதன் என்கின்ற  அண்ணாமலை என்பவர் தனது கலைத்திறன் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் , கோவையை சுற்றி பல அரிய சிற்பங்களையும் , சுவர் ஓவியங்களையும் மக்கள் மத்தியில் படைத்து வருகிறார் .

 

கோவையை அழகு படுத்தும் வகையிலும் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் வகையிலும் , இவர் கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் வடிவமைத்துள்ள உலக அதிசயமாக உள்ள ஹவா மஹால். பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் , செங்கோட்டை போன்றவை மிகவும் தத்ரூபமாக காட்சி அளிக்கின்றது . இந்த படைப்புகளுக்கு மக்கள் மத்தியிலும் பலமான வரவேற்பு கிடைத்துள்ளது.

 


முன்னாள் பிரதமர் திறந்துவைத்த கோவை கொடிசியாவில் உள்ள ஸ்க்கான் கோவிலின் முகப்பு அலங்காரம் இவரை ஒரு சிறந்த சிற்ப கலைஞராக காட்டி உள்ளது . இது மட்டும் இல்லாமல் திருப்பூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பொழுது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் திறக்கப்பட்ட திருப்பூர் நினைவுத்தூண் , கிணத்துக் கடவு பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அண்ணா சிலை காந்திப்பூங்காவில் அமைந்துள்ள காந்தி சிலை என கோவையை சுற்றி பல கலை வேலைப்பாடுகள் அண்ணாமலையால் உருவாக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் கட்டிட சிறப்புக் கலைஞராக வலம் வந்தவர் அண்ணாமலை . கோவையில் பல கட்டிடங்களுக்கு முகப்பு அலங்காரம் வடிக்கும் கலைஞராக இவரையே தேர்வு செய்து வருகின்றனர் . அது மட்டும் இல்லாமல். தான் கற்ற கலையை பள்ளி மாணவர்களுக்கும் பயன் பெரும் வகையில் சிறு சிறு கற்களை கொண்டு சிற்பம் செய்யும் கலைகளையும் கற்றுக் கொடுத்து வருகிறார்.
இந்த பணியெல்லாம் தனது குடும்பம் நடத்துவதற்கு என எடுத்துக் கொண்டாலும் , இவர் தற்போது துவங்கி செய்துவரும் கலை வேலைப்பாடு தனது வருமானத்திற்கும் மிஞ்சிய பொருட்செலவில் மக்களுக்கு விழிப்புணர்வை கொடுக்கும் வகையில் கோவையைச் சுற்றி உள்ள சுவர்களில் சிற்பம் வடித்து வருகிறேன் என்று கூறுகிறார் . மேலும் அதை பற்றி அவரிடம் கேட்ட பொழுது.


" நான் இந்த கலைப்பணியை கடந்த 20 வருடத்திற்கு மேலாக செய்து வருகிறேன் . பல சவால்களுக்கு இடையே தான் , நான் ஒரு நல்ல கலைஞன் என்று பெயர் வாங்கினேன் . குறிப்பாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் அமைக்கும் பொழுது கோவை மாநகராட்சி சார்பாக 150 பொறியாளர்களுக்கு மேல் தேர்வு செய்யப்பட்டு , யாரும் சரிவர அந்த கோபுரத்தை சாய்த்து அமைக்க முடியாமல் நிராகரித்த பிறகு வெறும் 6 ஆம் வகுப்புவரை மட்டுமே படித்த நான் மிக நேர்த்தியாக 16 அடியில் பைசா கோபுரம் 1.5 அடி சாய்வாக அமைத்து கட்டியது எனக்கு மிகவும் சவாலாக அமைந்து இருந்தது . காந்தி பூங்காவில் வைத்திருக்கும் காந்தி சிலையின் கண்கள் உயிருள்ள மனிதக் கண்களைப் போன்றே அமைக்கப்பட்டதாகும் . ஸ்கான் கோயிலின் முகப்பு வடிவம் அமைக்க எனக்கு அழைப்பு வந்த பொழுது நானும் எனது குடும்பத்தாரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை " என்றும் கூறினார் .
மேலும் அவர் கூறும் பொழுது பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத விஷயங்களான போக்குவரத்து நெறிமுறைகள் , மழைநீர் சேகரிப்பு , எரிபொருள் சிக்கனம் , மின்சார சிக்கனம் , தூய்மை , பிறருக்கு உதவும் மனம் , போதை பழக்க வழக்கங்களின் தீமைகள் போன்ற பல்வேறு விஷயங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்கமாக தத்ரூபமாக சாலைகளின் ஓரமாக இருக்கும் சுவர்களில் சுவர் சிற்பங்கள் உருவாக்கி வருவதாக கூறினார் ,
இந்த சுவர் சிற்பங்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும் கூறினார் . ஒரு சுவற்றில் சுவர் சிற்பம் உருவாக்க குறைந்தது 5 நாட்கள் வரை ஆகும் . அதற்கான செலவு 15 ஆயிரம் ரூபாய் வரையிலும் ஆகிறது என்றும் , இதுவரைக்கும் 5 இடங்களில் உருவாக்கி விட்டதாகவும் பொது மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் காரணமாக தனது மனைவி இந்திராணி அவர்களின் விருப்பப்படி அவரது நகைகளை அடமானம் வைத்து அதில் வந்த பணத்தை கொண்டு இந்த சுவர் சிற்பம் உருவாக்கி வருவதாகவும் கூறிய பொழுது , எங்கள் மனம் சற்று கனத்தது.






மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டுமல்லாமல் , லிம்கா உலக சாதனை மற்றும் கின்னஸ் சாதனையே தனது வாழ்வின் லட்சியமாக கொண்டு கலைத்துறையில் தன்னை அர்பணித்து வரும் அண்ணாமலை மக்களிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான் . சாலையோரமாக யாராவது நீண்ட சுவர் தந்து உதவினால் , அவர்கள் அவரது சாதனை கலைப் பயணத்திற்கு ஏணிப்படியாக இருப்பார்களே !!!

அண்ணாமலை அவர்களை தொடர்புகொள்ள ~92452 80844 / 90035 38492 / 0422 2499191

~மகேந்திரன்

Sunday, December 01, 2013

மைசூர் அருண் சிற்பி ~மகேந்திரன்

கட்டிடக் கலைக்கு அடுத்தபடியாக உள்ளது சிற்பக் கலை. கட்டிடக்கலையை விட சிற்பக் கலை நுட்பமானது. மனிதன், விலங்கு, பறவை, மரம், செடி, மலை, கடல் முதலிய இயற்கை உருவங்களையும், கடவுள், தெய்வம், தேவர், அரக்கர், அரசியல்வாதிகள்  என  முதலிய கற்பனை உருவங்களையும் அழகுபட அமைப்பதே சிற்பக் கலையாகும். புலவர் கற்பனைகளை அமைத்து நூல் எழுதுவது போலவே, சிற்பக் கலைஞரும்   தமது கற்பனைகளினாலே பலவகையான சிற்பங்களை அமைக்கிறார்கள்.


அதுமட்டும் அல்ல உடலை உருவாக்கி அதற்கு உயிரை தருவது தாய்மை. ஒரு சிலையை உருவாக்கி அதற்க்கு உயிர்ப்பை தருவது சிற்பக்கலை. எனவே இந்த கலையும் ஒரு தாய்மை தான். சிலையை உருவாக்கி காண்பவர் கண்களுக்கு அதை உயிர்ப்புடையதாக காட்டும் சிற்பியும் தாய்தான். அப்படி உயிரோட்டமுள்ள சிலையை உருவாக்கும் சிற்பிதான் திரு. அருண். இவரைப்பற்றியும் இவரது சிற்பக்கலை பற்றியும் நேரில் கூறும்போது.
திரு. பசவண்ண சிற்பி மைசூர் அரண்மனையில் ராஜா திரு. ஜெயச்சந்திர ராஜேந்திர உடையார் அவர்களின் அரசவையில் ஆஸ்தான அரசாங்க சிற்பியாக கி.பி. 1938 முதல் கி.பி.1952 வரை பணி பண்புரிந்து தேசிய மற்றும் மாநில விருதுபெற்ற புகழ்வாய்ந்த திரு. பசவண்ண சிற்பி அவர்களின் பேரன்தான் இவர். "அருண் சிற்பி" தொடர்ந்து ஐந்து தலைமுறைகளாக இவர்களது குடும்பத்தினர் சிற்பக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர்.



1958 ஆம் ஆண்டு கர்நாடகாவில் முதலமைச்சராக இருந்த திரு,. அனுமந்தையா அவர்கள் அரசாங்க சிற்பியாக இருந்த திரு. பசவண்ண சிற்பி அவருடைய சிற்ப்பக்கலையின் சிறப்பை நமது முன்னாள் இந்தியர் பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவரிடம் அறிமுகம் செய்ததில் பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவர்கள் பசவண்ண சிற்ப்பியை நேரு நேரில் வந்து அவரது இல்லத்தை அலங்கரிக்க சிற்பம் வாங்கி உள்ளாராம் . இந்த நிகழ்வு மிகப்பெரிய கவுரவமும் பெருமை தரும் நிகழ்வாக கருதுகின்றனர்.




இப்படி பெருமைக்குரிய பசவண்ண சிற்பியின் வம்சாவழியில் இன்று ஒரு இளம் வயதிலேயே அனுபவம் வாய்ந்த சிற்பியாக 29 வயதாகும் " திரு அருண்". இவரது சகோதரர்களும் பல வருடங்களாக சிற்பக்கலையில் இருந்தாலும் இவரது சிற்பங்கள் மிகவும் சிறப்பாக பேசப்பட்டு வருகிறது , இவர் சிற்பங்கள் உள்ள மிகுந்த ஆர்வத்தினாலேயே MBA படித்து விட்டு சிற்பக் கலையில் சுவாசிக்க வந்து விட்டார் . எழு ஏழுவயதில் இந்த கலைக்குள் நுழைந்த அருண் சிற்பி படிப்பு முடித்த பிறகு முழு நேர சிற்பியாக இருக்கிறார். இதுவரை ஆயிரக்கணக்கான சிற்பங்களுக்கு உயிர்தந்துள்ளதாக கூறும் இவர் . மைசூர் மாவட்டத்தில் K.R. நகர் தாலூக்காவில் 800 வருடங்கள் பழமை வாய்ந்த கோவிலில் இவர் வடித்த 8 அடி உயர யோக நரசிம்மர் சிலை, தும்கூர் மாவட்டத்தில் 6 அடி உயரத்தில் இவர் அமைத்துள்ள நந்தி சிலை, ஆந்திரபிரதேசத்தில் 9 அடி உயரத்தில் அமைத்துள்ள பெண் தெய்வம் மகேஸ்வரியின் சிலை போன்றவை சிலைகள் மக்களால் மிகவும் போற்றப்பட்டு வருகிறது . மேலும் ஒரு சிற்பம் உருவாக சிலையின் அளவு, வடிவமைப்பு, நேர்த்தி மற்றும் நுணுக்கங்களை பொறுத்து சிலை செய்ய தேவைப்படும் காலம் மாறும் என்கிறார். குறிப்பிட்ட சிலைகள் உருவாக 3 முதல் 4 மாதங்களும் ஆகும் ஒரு சில சிலைகளுக்கு பல வருடங்களும் ஆகும் என்கிறார்.
சிற்பங்கள் செய்ய எந்த வகையான கற்களை பயன்படும் என்று கேட்டதற்கு. ஆங்கிலத்தில் "Syst " என்று அழைக்கப்படும் இந்த கற்கள் வடமொழியில் " கிருஷ்ணசிலா" என்றும் சொல்லப்படுகிறது. இந்த கற்கள் வெளிர் நீல / சாம்பல் நிறத்தில் இருக்குமாம். இந்த கற்கள் கனடாவில் இருந்து வரவழைக்கப்பட்டு சிலைகள் செய்ய பயன்படுத்த படுகிறது.கற்களில் மட்டும் அல்லாது கண்ணாடியிலும் சிலைகள் செய்து வருகிறோம் . நாங்கள் உருவாக்கிய சிற்ப்பங்கள் ஜப்பான், US, ஆஸ்திரேலிய, சுவீடன், ஸ்ரீலங்கா மற்றும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு உள்ள கோவில்களில் பூஜை புனஷ்க்காரம் செய்யப்பட்டு வருகிறதாம்.
மேலும் அருண் சிற்பி கூறும்போது சிலைகள் செய்வதில் பல்வேறு விதங்கள் இருக்கிறது , ஹொய்சாலா , சாளுக்கியா, தஞ்சாவூர், மைசூர் போன்ற பல வித முறைகள் இருக்கிறது. அதில் இவர்களது முறை "ஹொய்சாலா " என்று அழைக்கப்படுகிறது. தமிழர் முறையில் இது "திராவிட" முறை என்றும் சொல்கிறார்.
மேலும் சிற்பக் கலைகளை ஊக்குவிப்பதற்காகவே இளைஞர்களுக்கு இந்த சிற்ப கலையை இலவசமாக கற்றுத் தருகின்றோம் என்றும் கலையில் ஆர்வமுடைய இளைஞர்கள் மாணவர்களுக்கு சவுகரியமான நேரத்தில் வந்து கற்று கொண்டு இருக்கிறார்கள் . இதுவரை பல மாணவர்கள் முழுமையாக பயிற்சி முடித்து சிலை செய்யும் கலையில் மிகப்பெரிய சிற்பியாக விளங்குகின்றனர். .
நல்ல தரமான சிலைகளை செய்ய வேண்டும், வாழ்நாள் முழுதும் இந்த கலையை மேம்படுத்த வேண்டும், காலத்தால் அழியாக கலை அம்சம் கொண்ட சிலைகளை உருவாக்குவதே தனது வாழ்நாள் லட்சியம் என்கிறார் இந்த இளம் சிற்பி அருண்.
கலைகளிலே  மிகச் சிறந்த்து சிற்பக்கலை. வரலாற்றுக்
கு முற்பட்ட காலத்திலிருந்தே இக்கலை வளர்ந்து வருகின்றது. மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் சான்றுகளின்  சிற்பக்கலையைவிட சிறந்தது வேறொன்றில்லை. அக்கலைகளை இந்நாளிலும் உயிர்ரூட்டிக்கொண்டு இருக்கும்  சிற்பி அருண் வாழ வாழ்த்துக்கள்.

~மகேந்திரன் 

Friday, January 18, 2013

சிற்ப கலைஞர் சரவணன். திருவண்ணாமலை




தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் கல்லிலும் இருக்கிறார் கடவுள். இதனை நம் கண் முன்னே காட்டுகிறார் திருவண்ணாமலையை சேர்ந்த திரு.சரவணன் என்னும் 35 வயது சிற்பி.


திரு சரவணன் ஒரு BA (பொருளாதாரம்) படித்த பட்டதாரி படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்காததால் இவரது தந்தை காசிலிங்கம் காலமான பிறகு அவரைப் போலவே சிற்பம் செதுக்கும் கலைஞனாக திருவண்ணாமலையில் இருபது வருடமாக இந்த கலைத்துறையில் உள்ளார். இவருக்கு தாயார் குணாம்பாள், மனைவி வசந்தி மற்றும் மீனாட்சி ,காயத்ரி என இரண்டு மகள்கள் உள்ளார்கள். இவரை திருவண்ணாமலையில் நேரில் சந்திக்கும்போது . ஒரு கல்லை உளியைகொண்டு சுத்தியலில் அடிக்க அடிக்க அந்த அடியை வாங்கிக்கொண்டிருந்த கல்லில் இருந்து கடவுள் சற்றுநேரத்தில் வெளிப்பட்டார். என்ன ஆச்சர்யம் அப்போதுதான் புரிந்தது பல அடிகள் வாங்கினால்தான் பக்குவம் அடையமுடியும் என்று .









அவரை அணுகி அவரிடம் இதை போல என்ன, என்ன சிற்பம் எல்லாம் செய்வீர்கள் செய்து உள்ளீர்கள் என்பதை கேட்க, அவர்  “பஞ்சமுக விநாயகர், அருணாச்சலேஸ்வரர் , விநாயகர் , லிங்கம், அம்மன் சிலை, மாரி  அம்மன்  என பலவகை கடவுள் சிற்பங்கள் இந்தபகுதியிலேயே செய்து விற்பனையும் செய்து வருகிறேன் நான் செதுக்கிய பச்சை அம்மன் நான்கு அடி கொண்டது. திருப்பத்தூரில் ஒரு இனத்தவரின் குலதெய்வமாக நிறுவப்பட்டு உள்ளது" என்றார்.  மேலும் இந்த கலைத்  தொழிலை பற்றி விவரிக்க , அவர் இந்த சிற்பம் செய்வதற்காக பயன்படுத்தும் மாவுகள் விழுப்புரம் அருகே உள்ள கல்வராயன் மலை பகுதியில் இருந்து கிடைக்கிறது ஒரு கிலோ கல் முப்பதிலிருந்து நாற்பது ருபாய் வரைக்கும் கிடைக்கிறது , அதை வாங்கிக்கொண்டு வந்து கடையிலேயே வைத்து சிற்பமாக்கி விற்கிறோம் என்றார்.  மேலும் "ஒருநாளைக்கு  300 ரூபாயில் ரூபாயில் இருந்து 350 வரை வருமானம் கிடைக்கும் அதுவும் நாங்கள் உற்பத்தி செய்வதை பொறுத்தே அது அமையும் , இந்த சிற்பங்களை வாங்க வருபவர்கள் எங்களது கலையை மதிக்காமல் அவர்கள் கேட்க்கும் விலைக்கே கொடுக்க வேண்டும் இல்லையேல் வாங்காமல் போய்விடுகிறார்கள் என்ன செய்யமுடியுமாக கேட்ட விலைக்கே கொடுத்துவிடுகிறோம். “ என்றார்


திருவண்ணாமலையை சுற்றி சுமார் 150 சிற்பி குடும்பங்கள் சிற்ப கலையை நம்பி உள்ளார்கள் இந்த சிலைகளுக்கான கற்கள் திருவண்ணாமலை கன்றான்பெட் பகுதியில் தாழநோடை கிராமத்தில் கிடைக்கும் ஆனால் இதனை எடுக்க கொஞ்சம் காலமாக வனத்துறையினர் அனுமதிக்கப்படுவதில்லை. இங்கிருந்து கிடைக்கும் மாவுகள் விலை குறைவாகவும் தரமானதாகவும் செதுக்குவதற்கு சுலபமாகவும் இருக்கும் , வனத்துறையினர் அனுமதிக்காததினால் விலை அதிகம் கொடுத்து விழுப்புரத்தில் கற்களை வாங்க வேண்டி உள்ளது.
அது மட்டும் இல்லாமல் இருபது வருடங்களுக்கு முன்பாக ஏகப்பட்ட சிற்பிகள் திருவண்ணாமலை பேய் கோபுரம் பகுதியில் வாழ்ந்து வந்தனர் அதற்கு காரணம் மத்திய அரசு ஒரு திட்டம் செயல் படுத்தி இருந்தது அதில் இந்த சிற்ப கலையை மேம்படுத்தும் வகையில் கலைத்துறையில் விருப்பம் கொண்ட இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஊக்கத்தொகையும் கொடுத்து இந்த சிற்பக் கலையை கற்றுக்கொடுத்து வந்தது , ஆனால் காலப்போக்கில் அந்த திட்டம் என்னவானது என்று தெரியவில்லை , இதனால் இந்த சிற்ப கலை அழியும் அபாயம் உள்ளது , திரு சரவணனை போன்ற நல்ல கலைஞர்களை கொண்டு இந்த கலையை வளர்க்கும் பொருட்டு மத்திய அரசோ , அல்லது மாநில அரசோ இந்த கலையை இந்த கால இளைஞர்களுக்கு கல்வியாக கற்றுக்கொடுப்பதால் சிற்ப கலையில் நல்ல கலைஞர்களை உலகிற்கு பரிசாற்றலாமே.

~மகேந்திரன்



Thiruvannamalai based Mr. Saravanan, BA (Economics) graduate who couldn’t find suitable decided to take over his father’s profession sculpture artist. He is living at Thiruvannamallai with his mother Mrs. Gunambal, wife Mrs Vasanthi and his two daughters Meenakshi & Gayathri. By Chiseling the stone with hammer he  creates God s statue. 
He is making “Panjamuga vinayagar, Arunachaleswara, Vinayagar, Siva lingam, Mariyamman statues and selling it at Thiruvannamalai.  One family of origin from Thiruppathur workship the four feet Pachaiyannan statue made by Mr. Saravanan.

He is getting raw materials from Nearby town Villupuram at the cost of rs 30-40 per kg of stone.  With that stone he make statues and selling it.  He is earning rs 300-350 per day and it depends his work.  Most of the buyers are not giving respect or importance to the workmanship but they bargain the price.  We have no option and we have to sell it for they buyers wish. 

In and around of Thiruvannamalai there will be 150 sculpture families living.  Earlier we used to get stones from near by village Thazhanoadai, but now a days forest department is not allowing us to take the stone, so we have to pay more amount for stones and buy from Villupuram. 

There was a scheme by Central govt for the welfare of sculptures, they gave training and encouragement. Now its not  continued, and the art of sculpture is in a danger of extinction. 
Either central or state Govt should encourage sculptures like Saravanan and teach this art to interested person to give life to this art.