Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

Tuesday, January 22, 2013

கலைந்துபோகுமோ கலைகள்... ~மகேந்திரன்




நாட்டின் வளர்ச்சிக்கு வளர்ச்சிக்கு கைத்தொழில் ஒரு இன்றியமைதாத ஒன்று. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை இல்லை உனக்கு ஒப்புக்கொள் வரிகள் மறக்கமுடியுமா , மறுக்க முடியுமா ? கற்றதையும் மறக்க கூடாது , கற்றவரையும் ஒதுக்கப்பட கூடாதே.

கோவையில் காந்திபுரம் மையப்பகுதி ஒரு சாக்கடை ஓரமாக மூங்கிலை கட்டுக்கட்டாக பையில் வைத்து கொண்டுவந்து சிறியது சிறியதாக ஒடித்து கொண்டு இருந்தார். திரு. ஜயசீலன் என்பவர் . அவர் எதற்க்காக அப்படி செய்கிறார் அடுத்து என்ன செய்வார் என்பதை கவனிக்கையில் நீண்டநேரம் சுமார் நன்குமநிநேரம் முயற்சிக் முயற்சிக்கு பிறகு அவர் அழகான ஒரு சின்ன மூங்கில் கப்பலை கட்டி முடித்தார் என்ன ஒரு கைவினை அதை வேடிக்கை பார்த்த ஒருவர் “என்ன விலை என்றார் இவர் 300 ரூபாய் என்று சொல்ல வாங்க வந்தவர் அந்த அழகிய மூங்கில் கப்பலை 100 ருபாயுக்கும் குறைவாக கேட்டார் எவ்வளவோ போராடியும் கொஞ்சம் சேர்த்து கொடுங்கள் என்று கேட்டும் வேறு வலி இல்லாமல் இறுதியில் வாங்க வந்தவர் சொன்ன விலைக்கே கொடுத்து அனுப்பினர்.

இதை கவனித நான் அவரை அணுகி அவரை பற்றி விசாரித்தேன் “அவர் பெயர் ஜயசீலன் கோவை சூலூர் பகுதியில் பிறந்து நான்காம் வகுப்பு வரை படித்ததாகவும் அதன் பிறகு பொருளாதாரம் நிலை காரணமாக படிப்பை தொடரமுடியவில்லை. கூலிவேலை செய்து பிழைப்பை ஒட்டி வந்ததாகவும் பெலிக்ஸ் என்பவர் இவருக்கு இந்த கலையை கற்றுக்கொடுத்தது தனக்கு ஒரு வரமாக கருதுகிறார் , இந்த கலையை கொண்டு சாலைகளில் அமர்ந்து வீடு , கப்பல் என செய்து விற்று வருமானத்தை தேடிக்கொள்கிறேன் என்றார் , இவருக்கு மனைவி தங்கமணி, மற்றும் விஜயகுமார் , பிரேம் குமார் என்னும் இரண்டு மகன்கள் அவர்கள் ஒரு தனியார் கம்பெனியில் கூலிவேலைக்கு போகிறார்கள், ஆனாலும் எதுவும் நிரந்தரமில்லாத பணியாக உள்ளது தற்போது கோவையில் நிலவும் மின் வெட்டால் இவர்கல்லால் சரிவர வேலைக்கு போகமுடியாத சூழல் . என்னுடைய இந்த கலையை கொண்டே குடும்பம் உள்ளது,

என்றார் . ஒரு கடையை போல வைக்கலாமே என்றதற்கு அதற்க்கு முதலீடாக குறைந்தது 20000 ஆகுமே என்றார் .அப்படி யாரேனும் வட்டிக்கு கொடுத்தால் கூட கடையில் வரும் வருமானத்தை கொண்டு சிறிது சிறிதாக கடனை அடைத்து விடுவேன் என்றார் .

மேலும் அவரிடம் இந்த கைவினையை கற்றுகொடுக்க குன்களால் முடியுமா என்பதற்கு ஒருமாத காலம் பயிற்சி கொடுக்கலாம் அதற்குள்ளாக இந்த பயிற்சியை கற்றுக்கொள்ளலாம் என்றார் திரு ஜயசீலன் அவருடைய அழகான படைப்புகளை பார்த்து நானும் ஒரு பொருளை வாங்கிவந்தேன் (பேரம் பேசாமல்)

மத்திய அரசு என்றாலும் சரி, மாநில அரசு என்றாலும் சரி, மக்களுக்கு தேவையான எத்தனையோ திட்டங்களை தீட்டுகின்றன. திட்டங்கள் எல்லாம் நல்ல திட்டங்கள்தான். ஆனால், அந்த திட்டங்கள் பல வெற்றி பெறுவதில்லை. இதற்கு காரணம், இந்த திட்டங்களால் பயனடையும் மக்களுக்கு அதுபற்றிய விவரங்கள் முழுமையாக போய் சென்றடைவதில்லை.

இது போன்று எத்தனையோ கைவினை பொருட்கள் தயாரிக்கும் கலையை கற்று வீதிக் உள்ளார்கள் , இவர்கல்ற்க்கேல்லாம் அரசாங்கம் என்ன திட்டங்கள் உள்ளது என்பது தெரிவது இல்லை . இப்படி பட்டவர்களை தேடிபிடித்து அவர்கள் மூலமாக கலைகளை கற்றுக்கொடுக்கலாமே ,

கலைவாணி வீதியில் விடாம காக்கலாமே

இவருக்கு நீங்கள் ஏதேனும் செய்ய விரும்புகிறீர்களா ஜயசீலன் 9698914658

கலைகளை போற்றுவோம் .


இந்த இணைப்பில் தினமலரில்  காணொளி  செய்தி காணலாம்.




http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=17929&cat=32#.UPU-OPux94Y.facebook

~மகேந்திரன்

Friday, January 18, 2013

சிற்ப கலைஞர் சரவணன். திருவண்ணாமலை




தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் கல்லிலும் இருக்கிறார் கடவுள். இதனை நம் கண் முன்னே காட்டுகிறார் திருவண்ணாமலையை சேர்ந்த திரு.சரவணன் என்னும் 35 வயது சிற்பி.


திரு சரவணன் ஒரு BA (பொருளாதாரம்) படித்த பட்டதாரி படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்காததால் இவரது தந்தை காசிலிங்கம் காலமான பிறகு அவரைப் போலவே சிற்பம் செதுக்கும் கலைஞனாக திருவண்ணாமலையில் இருபது வருடமாக இந்த கலைத்துறையில் உள்ளார். இவருக்கு தாயார் குணாம்பாள், மனைவி வசந்தி மற்றும் மீனாட்சி ,காயத்ரி என இரண்டு மகள்கள் உள்ளார்கள். இவரை திருவண்ணாமலையில் நேரில் சந்திக்கும்போது . ஒரு கல்லை உளியைகொண்டு சுத்தியலில் அடிக்க அடிக்க அந்த அடியை வாங்கிக்கொண்டிருந்த கல்லில் இருந்து கடவுள் சற்றுநேரத்தில் வெளிப்பட்டார். என்ன ஆச்சர்யம் அப்போதுதான் புரிந்தது பல அடிகள் வாங்கினால்தான் பக்குவம் அடையமுடியும் என்று .









அவரை அணுகி அவரிடம் இதை போல என்ன, என்ன சிற்பம் எல்லாம் செய்வீர்கள் செய்து உள்ளீர்கள் என்பதை கேட்க, அவர்  “பஞ்சமுக விநாயகர், அருணாச்சலேஸ்வரர் , விநாயகர் , லிங்கம், அம்மன் சிலை, மாரி  அம்மன்  என பலவகை கடவுள் சிற்பங்கள் இந்தபகுதியிலேயே செய்து விற்பனையும் செய்து வருகிறேன் நான் செதுக்கிய பச்சை அம்மன் நான்கு அடி கொண்டது. திருப்பத்தூரில் ஒரு இனத்தவரின் குலதெய்வமாக நிறுவப்பட்டு உள்ளது" என்றார்.  மேலும் இந்த கலைத்  தொழிலை பற்றி விவரிக்க , அவர் இந்த சிற்பம் செய்வதற்காக பயன்படுத்தும் மாவுகள் விழுப்புரம் அருகே உள்ள கல்வராயன் மலை பகுதியில் இருந்து கிடைக்கிறது ஒரு கிலோ கல் முப்பதிலிருந்து நாற்பது ருபாய் வரைக்கும் கிடைக்கிறது , அதை வாங்கிக்கொண்டு வந்து கடையிலேயே வைத்து சிற்பமாக்கி விற்கிறோம் என்றார்.  மேலும் "ஒருநாளைக்கு  300 ரூபாயில் ரூபாயில் இருந்து 350 வரை வருமானம் கிடைக்கும் அதுவும் நாங்கள் உற்பத்தி செய்வதை பொறுத்தே அது அமையும் , இந்த சிற்பங்களை வாங்க வருபவர்கள் எங்களது கலையை மதிக்காமல் அவர்கள் கேட்க்கும் விலைக்கே கொடுக்க வேண்டும் இல்லையேல் வாங்காமல் போய்விடுகிறார்கள் என்ன செய்யமுடியுமாக கேட்ட விலைக்கே கொடுத்துவிடுகிறோம். “ என்றார்


திருவண்ணாமலையை சுற்றி சுமார் 150 சிற்பி குடும்பங்கள் சிற்ப கலையை நம்பி உள்ளார்கள் இந்த சிலைகளுக்கான கற்கள் திருவண்ணாமலை கன்றான்பெட் பகுதியில் தாழநோடை கிராமத்தில் கிடைக்கும் ஆனால் இதனை எடுக்க கொஞ்சம் காலமாக வனத்துறையினர் அனுமதிக்கப்படுவதில்லை. இங்கிருந்து கிடைக்கும் மாவுகள் விலை குறைவாகவும் தரமானதாகவும் செதுக்குவதற்கு சுலபமாகவும் இருக்கும் , வனத்துறையினர் அனுமதிக்காததினால் விலை அதிகம் கொடுத்து விழுப்புரத்தில் கற்களை வாங்க வேண்டி உள்ளது.
அது மட்டும் இல்லாமல் இருபது வருடங்களுக்கு முன்பாக ஏகப்பட்ட சிற்பிகள் திருவண்ணாமலை பேய் கோபுரம் பகுதியில் வாழ்ந்து வந்தனர் அதற்கு காரணம் மத்திய அரசு ஒரு திட்டம் செயல் படுத்தி இருந்தது அதில் இந்த சிற்ப கலையை மேம்படுத்தும் வகையில் கலைத்துறையில் விருப்பம் கொண்ட இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஊக்கத்தொகையும் கொடுத்து இந்த சிற்பக் கலையை கற்றுக்கொடுத்து வந்தது , ஆனால் காலப்போக்கில் அந்த திட்டம் என்னவானது என்று தெரியவில்லை , இதனால் இந்த சிற்ப கலை அழியும் அபாயம் உள்ளது , திரு சரவணனை போன்ற நல்ல கலைஞர்களை கொண்டு இந்த கலையை வளர்க்கும் பொருட்டு மத்திய அரசோ , அல்லது மாநில அரசோ இந்த கலையை இந்த கால இளைஞர்களுக்கு கல்வியாக கற்றுக்கொடுப்பதால் சிற்ப கலையில் நல்ல கலைஞர்களை உலகிற்கு பரிசாற்றலாமே.

~மகேந்திரன்



Thiruvannamalai based Mr. Saravanan, BA (Economics) graduate who couldn’t find suitable decided to take over his father’s profession sculpture artist. He is living at Thiruvannamallai with his mother Mrs. Gunambal, wife Mrs Vasanthi and his two daughters Meenakshi & Gayathri. By Chiseling the stone with hammer he  creates God s statue. 
He is making “Panjamuga vinayagar, Arunachaleswara, Vinayagar, Siva lingam, Mariyamman statues and selling it at Thiruvannamalai.  One family of origin from Thiruppathur workship the four feet Pachaiyannan statue made by Mr. Saravanan.

He is getting raw materials from Nearby town Villupuram at the cost of rs 30-40 per kg of stone.  With that stone he make statues and selling it.  He is earning rs 300-350 per day and it depends his work.  Most of the buyers are not giving respect or importance to the workmanship but they bargain the price.  We have no option and we have to sell it for they buyers wish. 

In and around of Thiruvannamalai there will be 150 sculpture families living.  Earlier we used to get stones from near by village Thazhanoadai, but now a days forest department is not allowing us to take the stone, so we have to pay more amount for stones and buy from Villupuram. 

There was a scheme by Central govt for the welfare of sculptures, they gave training and encouragement. Now its not  continued, and the art of sculpture is in a danger of extinction. 
Either central or state Govt should encourage sculptures like Saravanan and teach this art to interested person to give life to this art.

Sunday, August 07, 2011

சகலகலா இளம் நாயகி அபிநயா

பெயர் : அபிநயா.R ,  வயது 11

அப்பா  : UMT சக்தி ராஜா,
அம்மா : UMT. R. ராதிகா,

படிப்பு : ஆறாம் வகுப்பு

பள்ளி : ஆஸ்ரம் மெட்றிக் பள்ளி

கோவை குனியமுத்தூர் சேர்ந்தவள் 
சகலகலா நாயகன் UMT சக்தி ராஜாவின், சகலகலை புதல்வி அபிநயா,
அபிநயா என்று பெயர் வைத்து விட்டார்கள் தன் பெயருக்கு ஏற்றார் போலவே அபிநயா...

அபி விடியலில் சுப்ரபாதமாக  MGR பாடல் இல்லையென்றால் விடியலுக்கு விடுமுறை விட சொல்லிவிட்டு மீண்டும் உறங்கிவிடுவாராம்...

இவள் வசிக்கும் தெருக்களில் அபிநயா அல்லது அபி என்று அழைத்தால் யாருக்கும் தெரியாது குட்டி TR  என்று சொன்னால்தான் இவளுடைய முகவரி கிடைக்கும் TR போலவே நடித்ததில் குட்டி TR என்ற பட்டமும், காவிய TV தொகுப்பாளர் ,  நாதஸ்வரம் TV தொடரில் குழந்தை நட்சத்திரமாகவும், அதில் மட்டும் இல்லாமல் "யாத்தி" " மணிமேகலை" போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்,
ஒரு முறை இவள்
சென்று இருந்த திருமண விழா நிகழ்ச்சி ஒன்றில் அதில் நடந்த கச்சேரியில் தானாக பங்கு கொண்டு பலகுரலில் பேசும் போது சாலையில் சென்று கொண்டு இருந்தவர்கள் எல்லோரும் இவளுடைய நிகழ்ச்சியை காண மண்டபத்திற்குள் நுழைந்துவிட்டர்கலாம் கட்டுபடுத்தா முடியாத கூட்டம் வந்துவிட்டதாம்,
இவள்
படிக்கும் ஆஸ்ரம் பள்ளி விழாக்களில் இவருடைய பங்கு இல்லை என்றால் விழாக்களே இல்லையாம், இதுவரை 37  சான்றுகள் வாங்கி உள்ளாராம்...
இவள்
பெற்றோர் ஆசைபோலவே தேவிகா , ராதிகா , ஜோதிகா வரிசையில் இந்த அபினயாவை விரைவில் எதிர்பார்க்கலாம்... வாழ்த்துக்கள்  நாயகி...

-விகடனுக்காக
P.மகேந்திரன்.