கோவை நகர பேருந்து நிலையத்தில் இன்று 11/01/12 மதியம் சுமார் ஒருமணியளவில் ஒரு பேருந்தில் இருந்து நீண்ட நேரமாக இறங்க மறுத்து அடம் பிடித்தபடி இருந்தார் . இதனால் அந்த பகுதியில் பதட்டமும் ஏற்பட்டது ,அதனை தொடர்ந்து தேவி என்னும் ஒரு பெண்மணி என்னை தொடர்பு கொண்டு விபரத்தை சொல்ல உடனடியாக நான் மகேந்திரன் அந்த அம்மா இருக்கும் இடமான கோவை நகர பேருந்து நிலையத்திற்கு சென்று அந்த அம்மாவை... சந்தித்தேன் அப்போது அந்த அம்மாவின் கால்கள் இரண்டும் வீக்கமடைந்து இருந்தது தெரிந்தது ஒரு பேருந்தில் ஏறிவிட்டு இறங்காமல் இருந்தார் ,அவரிடம் தாங்கள் யார் எங்கு போக வேண்டும் அம்மா என்று கேட்டதற்கு அவருடைய பெயரை தவிர அவர் சொல்வது எதுவும் புரியவில்லை , பிறகு அந்த அம்மாவை நான் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அன்னை தெரேசா காப்பகத்தில் சேர்த்து விட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தேன்,
அதனை தொடர்ந்து அன்னை தெரேசா காப்பகத்தின் பாதுகாப்பில் இருந்து வந்தார்கள் அந்த ராஜம் அம்மாவை நேற்று 12 /01 /12 காலை நான் சந்திக்க சென்று அந்த அம்மாவிடம் பேசும்போது அந்த அம்மா தான் திருவள்ளுவர் மாவட்டம் கடமுத்தூர்சேர்ந்தவர் என
நீண்ட நேரம் விசாரித்தபிறகு ஓரளவுக்கு இது மட்டும் புரிந்தது ,
இன்று காலை 14 /01 /12 பத்து மணியளவில் என்னை சந்தித்து ராஜம் அம்மாவின் புகைபடத்தகாட்ட அந்த அம்மாவின் பேரன் சுரேஷ் இவர் தான் என உறுதி செய்து கொண்டேன் , சுரேஷை அழைத்துக்கொண்டு எனது நண்பர்களுடன் அன்னை தெரேசா காப்பகத்தில் இருக்கும் ராஜம் அம்மாவை சந்திக்க சென்றோம், பேரனை எதிர் பார்த்து இருந்த ராஜம் அம்மாவின் முன் பேரன் சுரேஷை நிறுத்தினோம் , பேரனை பார்த்த சந்தோசத்தில் ராஜம் அம்மா ஆனத்த கண்ணீரில் மூழ்கினார்,
சுரேசும் கண்கலங்கினார் , அப்போது காப்பகத்தில் இருந்த ஆதரவற்றவ்ர்களும் அந்த நிகழ்வை கண்டு கண்கலங்கினார்.
நம்மை தேடியும் உறவினர்கள் வரமாட்டார்களா என்ற ஏக்கம் கண்களில் தெரிந்தது. பிறகு பாட்டியும் பேரனும் அன்பை பரிமாறி கொண்டதை கண்டோம் ,
சற்று நேரத்தில் பாட்டியையும் பேரனையும் சந்தோசமாக அவர்களின் ஊருக்கு வழி அனுப்பி வைத்தோம் ,
ராஜம் அம்மா ஊருக்கு செல்லும் போது தனது பேரனுடன் சேர்த்துவைத்த அனைவரையும் வாழ்த்தி சென்றார் ,

( ஒரு விஷயம் தேவி என்பவர் மட்டும் இந்த ராஜம் அம்மாவை கண்டும் காணாமல் சென்று இருந்தால் இந்த அம்மாவின் நிலை (?) வாழ்த்துக்கள் தேவி ,
~மகேந்திரன்