Showing posts with label சாதனை. Show all posts
Showing posts with label சாதனை. Show all posts

Monday, January 18, 2016

கபடிக்கு ஒரு மின்னல் வீராங்கனை


!!! தர்ஷினி மாற்று மாற்றுதிறனாளி அல்ல மின்னல் வேக வீராங்கனை !!!
மனதில் திடமிருந்தால் மலைகள் கூட தடைகள் செய்யாது என்பதை நிரூபிக்கு வகையில் தன் குறைகளை கடந்து சாதித்திருக்கிறாள் 15 வயது சிறுமி தர்ஷினி .
கோவை சுந்தராபுரம் பகுதியில் கூலி வேலை செய்து வரும் திரு.பாலகிருஷ்ணன், திருமதி.ஜெயந்தி தம்பதியினரின் மூன்றாவது மகள் தர்ஷினி . பிறவி முதலே காது கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாதவர் , இருந்தும் யோகா மற்றும் நடனம் பயிற்சி பெற்ற தர்ஷினியின் சிறப்பு அம்சம் ஒரு கபடி வீராங்கனை. தனிப்பட்ட முறையிலும் குழுவாகவும் எண்ணற்ற போட்டிகளில் வெற்றிக் கோப்பைகளை வென்றுள்ளார்.

  
ஆறாம் வகுப்பு படிக்கும் போது விஸ்வநாதன் கபடி பயிற்சியாளரிடம் கபடி விளையாட்டில் பயிற்சி மாணவியாக சேர்ந்த தர்ஷினி அப்போதே கல்லூரி அளவிலான போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அளவிற்கு விளங்கினாள் .
பயிற்சியாளர் விஸ்வநாதன் கூறும் பொழுது கபடி விளையாட்டுக்கு கிடைத்த மின்னல் வேக வீராங்கனை தான் தர்ஷினி . இவள் என்னிடம் வரும் பொழுது தர்ஷினி ஆறாம் வகுப்பு மாணவி, பெற்றோர்கள் இவளுக்கு காது கேட்காது பேசமுடியாது . இவள் தொலைகாட்சியில் கபடி விளையாடுவதை கண்டு அதில் ஆர்வம் இருப்பதை தெரிவித்தாள். இவளுக்கு கபடிக் கற்றுக் கொடுங்கள் என்று முறையிட்டனர்.
மாணவியாக சேர்த்துக் கொண்ட ஆரம்பத்தில் இவளுக்கு பயிற்சி கொடுப்பது கடினமாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் ஆரம்பத்திலேயே இவள் ஒரு ஆண் விளையாட்டு வீரரை போல ஆறாம் வகுப்பு படிக்கும் இந்த சின்ன குழந்தையிடம் வேகம் இருப்பதை கண்டேன். ஆனால் கபடி விளையாட்டில் கபடி என்ற வார்த்தை உச்சரிப்பது மிகவும் அவசியம் அதுவும் மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் . இவளால் பேசமுடியாதே என்று வருத்தப்பட்டவேளையில் தொடர்ந்து இரண்டு மாதம் தானாக முயற்சி செய்து கபடி என்ற வார்த்தை மட்டும் உச்சரிக்க கற்றுக் கொண்டு களத்தில் இறங்க தகுதிப் பெற்றாள்.
அதனை தொடர்ந்து முறையான பயிற்சியின் மூலம் பல உள்ளூர் போட்டிகளில் கலந்து சாதனைபடைத்து வருகிறாள் . தர்ஷினியின் பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் , அவர்களுக்கு இவளது திறமை பற்றியும் கபடி போட்டிகளைப் பற்றியும் பெரும் அளவில் அறியாதவர்கள் , இவள் குவித்து வரும் வெற்றிக் கோப்பைகளை கண்டு ஆச்சரியமும் சந்தோசமும் அடைவார்கள் , ஆனால் வெளியூர் போட்டிகள் வரும் போது இவளை அனுப்ப தயக்கம் காட்டுவார்கள் . அப்போதெல்லாம் அவர்கள் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கேட்டு சம்மதம் வாங்கி அழைத்துப் போவோம்.
இவள் களத்தில் இறங்கும் போதே இந்த பெண்தானா இப்படி என்று ஆச்சர்யம் படும் அளவில் இவளது வேகம் இருக்கும் . இவளது ஆட்ட வேகத்தைக் காண தனி ரசிகர்கள் ஏராளம் உள்ளனர் .
காது கேட்கும் கருவி ஒன்று இவளுக்கு இருந்தால் இவளது திறமை முழு அளவில் வெளிப்படுத்தி விடலாம் , பொதுவாகவே நம்மூரில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இருக்கும் ஒரு முக்கியத்துவம் மற்றப்போட்டிகளுக்கு இருக்காது , அப்படிப் பட்ட போட்டிகளில் ஒரு மாற்றுத் திறனாளியான ஒரு இளம் பெண் சாதித்தாள் என்ன சாதிக்காவிட்டால் என்ற எண்ணம் தான் இருக்கும் போல . பலரிடமும் இவளுக்கு காது கேட்கும் கருவிக்கு உதவி கேட்டு இதனால்வரை யாரும் முன் வரவில்லை .இவளது திறமை கண்டு அரசும் கூட எந்த முக்கியத்துவமும் இவளுக்கு கொடுத்தது இல்லை .
தர்ஷினியின் அம்மா ஜெயந்தி கூறும் பொழுது " எங்கள் வீடு நிறைய இவள் வென்று வாங்கி வந்த கோப்பைகளும் மெடல்களும் தான் நிறைந்து இருக்கிறது. எல்லோரும் சொல்கிறார்கள் உங்கள் பெண் மிகவும் அருமையாக விளையாடி வருகிறாள் .எல்லோர் பெற்றோர்களுக்கும் இருக்கும் தயக்கம் தான் எங்களுக்கும் ,இவளுக்கு இருக்கும் குறைகளால் இவளை வெளி மாநிலங்களுக்கு அனுப்ப கொஞ்சம் பயமாக இருக்கும் . சில வருடங்களுக்கு முன் செஞ்சிலுவை சங்கத்தில் இருந்து தர்ஷினியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கேட்டவர்களிடம் அப்போது அனுப்ப மறுத்து விட்டோம் . அதன் பிறகுதான் போகப்போக இவளது உண்மையான திறமை பற்றி தெரிய வந்தது . அதன் பிறகு இவள் பெற்ற பல வெற்றிகளின் போதும் அவளது திறமையை கண்டு வியந்த பலரும் அவளுக்கு உதவுவதாக சொல்வார்கள். ஆனாலும் செய்தவர்கள் யாரும் இல்லை. அவரது பயிற்சியாளர் மட்டுமே போட்டிகளுக்கு செல்லும்போது அழைத்து செல்ல உதவுவார்.
தற்போது கோவை CCM அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் தர்ஷினி படிப்பிலும் சோடை போகவில்லை. படித்துக் கொண்டே கபடியிலும் வெற்றி பெற இவரது தனிப்பட்ட ஆர்வமே காரணமாக இருந்துள்ளது. இப்போதும் சில நேரங்களில் இப்படிப்பட்ட பெண்ணை வெளியே அனுப்ப ஏதும் ஆபத்து நேர்ந்து விடுமோ என்று பயம் கொண்டாலும் . தங்கள் பெண்ணின் திறமை ஓரிடத்தில் முடங்கி விடக்கூடாது என்றும், இவளது ஆர்வத்தையும் திறனையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் தர்ஷினிக்கு அனைத்து வகையிலும் ஆதரவு தந்து உறுதுணையாக இருந்து அவள் முன்னேற்றத்திற்கு வழிவகை தேடி வருகின்றனர்.
இப்படி பட்ட ஒரு மின்னல் வேக வீராங்கனை தர்ஷினிக்கு ஈரநெஞ்சம் அறக்கட்டளை இந்த பொங்கல் தினத்தில் காது கேட்கும் கருவி வழங்கியதில் பெருமை அடைகிறது .


முடிந்தால் நீங்களும் இந்திய அணிக்கு ஒரு மின்னல் வீராங்கனை தர்ஷினி கிடைக்க ஒரு துரும்பாக இருக்கலாமே .
மேலும் விபரம் பெற உதவி செய்ய தர்ஷினியின் பயிற்சியாளர் விஸ்வநாதன் 9842264193 . பெற்றோர் பாலகிருஷ்ணன் ஜெயந்தி 9629370528 .
~ஈரநெஞ்சம் அறக்கட்டளை
www.facebook.com/eeranenjam/

Sunday, June 08, 2014

அந்தியூரின் அதிவேக விழிப்புணர்வு நாயகன்

எத்தனையோ சாதனைகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம் . தங்கள் லட்சியங்களுக்காக எத்தனையோ கஷ்டப்பட்டவர்களை பார்த்திருப்போம். " இளம் கன்று பயமறியாது " என்பதற்கு ஏற்ப தன் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த துணிந்திருக்கும் இந்த இளைஞரை நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

"இந்தியாவின் சாதனை நாயகன் பதினெட்டு வயது துளசிமணி", அந்தியூர் தவுட்டுபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பிரமணி, ஆட்டோ டிரைவராக இருக்கிறார். தாய் அன்னபூரணி மற்றும் இவரது தங்கை எட்டாவது படிக்கிறார். இந்தியாவின் சாதனை நாயகன் துளசிமணி கோவை கற்பகம் கல்லூரியில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டு இருக்கிறார். சிறுவயது முதலே இவருடன் நெருங்கிய நட்புடன் இருந்த அவரது நண்பர் நந்தகுமார், இருவரும் நன்றாக பைக் ஓட்டுபவர்கள். ஒரு முறை பைக் பயணத்தின் போது ஏற்பட்ட சாலை விபத்தில் நந்தகுமார் வண்டி ஓட்டி போகும்போது தலைக்கவசம் (ஹெல்மட்) அணியாமல் சென்றதால் உயிரிழந்தார். தன் கண் முன்னர் நடந்த இந்த விபத்தில் உயிர் நண்பன் பலியானதை கண்டு மனம் உடைந்த துளசிமணி இனி யாருக்கும் இந்த நிலை நேராமல் இருக்க மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தார்.

இருசக்கர பயணத்தின் போது கண்டிப்பாக ஹெல்மட் அணியவேண்டும்,
சாலை விதிகளை மதிக்க வேண்டும்,
மரம் நட வேண்டும்,
பாலிதீன் பொருட்களை ஒழிக்க வேண்டும்,
இளைஞர்களிடம் சமூக சேவை விழிப்புணர்வு கொண்டுவரவேண்டும்.

போன்ற கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைக்க விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார் . கடந்த வருடம் 2013 டிசம்பர் 21தேதி சனிக்கிழமை அன்று காலை 5:20க்கு பொள்ளாச்சியில் கிளம்பி தாராபுரம், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமாரி அங்கிருந்து கிளம்பி திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் மீண்டும் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக வந்து காலை 5:10க்கு கன்னியாகுமரி வந்தடைந்தார். அதுமட்டுமின்றி இந்த பயணத்தின் போது அவர் தனது லட்சியங்களான ஹெல்மட் அணியவேண்டும், சாலை விதிகளை மதிக்க வேண்டும், மரம் நட வேண்டும், பாலிதீன் பொருட்களை ஒழிக்க வேண்டும், இளம் மாணவர்களிடையே சமூக சேவை மனப்பான்மையை உருவாக்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சுமார் 3800 பொது மக்களுக்கு வழங்கி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டார்.

அமெரிக்க நிறுவனமான "அயர்ட் அசோசியேசன்" அறிவித்திருக்கும் 24 மணிநேரத்தில் ஆயிரத்து அறுநூறு (1600 ) கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தால் "சேட்டில் சோர்" என்ற விருதுக்கு, இதுவரை 1624 கிலோமீட்டர் என்பது தான் அதிகபட்ச தூர சாதனையாக இருந்தது ... மேலும் இது போன்ற சாதனையை புரிய முயற்சி செய்த 24 பேர் இறந்துவிட்டனர்.

இதற்குமுன் இந்த விருதுக்காகவே பயிற்சி பெற்று களத்தில் இறங்கி உயிரிழந்த 24 பேரும் தங்கள் சொந்த பணத்தில்தான் இந்த முயற்சியை மேற்கொண்டனர். துளசிமணியின் நோக்கம் விருதல்ல மக்களிடயே ஒரு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றே இருந்தது கூடவே வறுமையும் இருந்தது மனம் தளராது துளசிமணி பொதுமக்களிடம் பண உதவி பெற்று இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க நிறுவனமான "அயர்ட் அசோசியேசனின் " " சேட்டில் சோர் " என்ற விருதுக்கும் சொந்தமாகி உள்ளார். இந்த சாதனை நிகழ்த்திய துளசிமணி 24 மணிநேரத்தில் 1804 கிலோமீட்டர் சென்று அதுவும் பத்து நிமிடத்துக்கு முன்னர் குறிப்பிட்ட தூரத்தையும் தாண்டி ( 204 கிமீ அதிகமாக ) அடைந்து சாதனை படைத்து இந்த விருதை பெற்றுள்ளார். இதில் அவர் பயணம் செய்த நேரம் 21 மணிநேரம் 30 நிமிடங்கள் மட்டுமே.

"இதுவரை இவரது இந்த சாதனை கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கவில்லை அப்படி பரிந்துரைத்தால் கண்டிப்பாக இவரது இந்த சாதனை கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பெற்றிருக்கும் "

இதோடு நின்று விடவில்லை. துளசிமணியின் அடுத்த முயற்சியாக வரும் ஜூலை மாதம் 72 மணிநேரத்தில் 6800 கிலோமீட்டர் தொலைவு இதேபோல இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்ல திட்டமிட்டுள்ளார். அது மட்டுமின்றி தனது விழிப்புணர்வு பிரசுரத்தையும் குறைந்தது 15000 பேருக்காவது பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார். அதில் அவர் வெற்றி பெறவேண்டும் , இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நாமும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

முந்தையை பயணத்தில் மணிக்கு 90 km வேகத்தில் பயணம் செய்த இவர் இவரது பயணத்தின் போது நிறைய விபத்துக்களை பார்க்க நேர்ந்தது. மேலும் பல விபத்துக்களில் இருந்து தப்பிக்கவும் செய்திருக்கிறார். எனவே தான் மக்களிடையே மீண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்த அடுத்த முயற்சிக்கு அடி எடுத்து வைத்திருக்கும் அவர் வெற்றி பெற வாழ்த்துவோம். துளசிமணியை சந்திராயன் விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்களும், கார் பந்தய வீரரான திரு. நரேன் கார்த்திகேயன் அவர்களும் பாராட்டியுள்ளனர். அவர் மேலும் பல சாதனைகள் புரியவும், அவற்றில் வெற்றி பெற்று அவரது லட்சிய விழிப்புணர்வுகளை மக்களிடையே நல்ல முறையில் கொண்டு சேர்க்க அந்த இறைவன் அவருக்கு மனோதிடத்தை வழங்கட்டும் . அவரது முயற்சியை நாமும் மனமார பாராட்டுவோம்.

~மகேந்திரன்

Monday, March 24, 2014

இனி ஒரு விதி செய்வோம்..!

இனி ஒரு விதி செய்வோம் !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கண்ட தோளினாய் வா வா வா
. - மகாகவி பாரதியார்...

சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும். எந்தச் சக்தியும் எந்தத் தடையும் அந்தச் சாதனைக்கு முட்டுக்கட்டை போட முடியாது. திறமைகளுக்கு உடல் ஊனமும் கூட ஒரு பொருட்டில்லை.

இறைவனின் படைப்புகளில் மனிதன் ஓர் ஆச்சரியம்!!!

இறைவன் படைப்பில் எத்தனையோ அற்புதங்களை எத்தனையோ அதிசயங்களை நேர்த்தியான படைப்புகளைக் கண்டு வியந்திருக்கிறோம். இறைவனே ஆனாலும் தவறுகளுக்கு விதிவிலக்கு இல்லை, என்று சொல்ல தோன்றும் "செய்வன திருந்த செய் " என்பது மனிதனுக்கு மட்டுமல்ல சில நேரங்களில் கடவுளுக்கும் கூட பொருந்துகிறதோ என்றும் என்ன தோன்றும் . உடலில் ஊனத்தைக் கொடுத்து விட்டு மனதில் ஏக்கத்தையும் அளவுக்கு அதிகமாகவே சுமந்து வாழ்கிறார்கள். இது கர்மவினை என்றோ பூர்வ ஜென்ம பலன் என்றோ மனதை தேற்றிக்கொள்ளக் முடிவதில்லை. உடல் ஊனம் என்ற நிலையில் அம்மனிதர்கள் படுகின்ற வேதனைகளை பார்த்தால் கடவுள் மீதும் கோபம் கொள்ள தோன்றும் ...ஏன் இப்படி, எதற்கு இப்படிப் படைத்தான் என்ற விடைதெரியாத கேள்விக்கு எல்லாம் விளக்கம் தன்னம்பிக்கையே இறைவன் வடிவம் அவன் கரம் பிடித்தோர் தோற்றதாக எந்த சரித்திரமும் இல்லை .

தன்னம்பிக்கை இழந்த வர்கள் பலர் பிறரை போலத் தான் இல்லையே என்று தன் குறைபாட்டை எண்ணி , ஏங்கி மண்ணோடு மண்ணாக மட்கிப்போய் விடுகின்றனர். ஆனால் ஒரு சிலரோ தன் ஊனத்தைப் பொருட்படுத்தாமல், அதை ஒரு குறையாக எண்ணாமல் தன் மனதில் வைராக்கியத்தை வளர்த்துக், தன்னம்பிக்கை என்னும் மகா சக்தி தந்துனை கொண்டு தன்னைத்தானே செதுக்கி கொள்ளும் சிற்பியாகி தனது பல்வேறு திறன்களால் தன்னைச் செதுக்கிக் கொண்டு சாதித்து உலகில் தங்கள் சுவடு பதித்து நிலைத்து நிற்கின்றனர். அவர்களைப் படைத்த இறைவனே அவர்களைக் கண்டு வியக்கும் வண்ணம் ஜொலிக்கின்றனர்.

இதுபோலத் தன் திறமைகளால் தன்னையே செதுக்கி கொண்ட ஒரு சாதனை சிற்பி தான் 17- வயதாகும் கலைவாணி என்ற சிறுமி ...

கலைவாணி பிறந்த சில நாட்களிலேயே தந்தை சக்திவேல் காலமானார். தாயார் கண்ணம்மாள் தந்தைக்குப் பிறகு கீரை வியாபாரம் செய்து கலைவாணியை வளர்த்து வந்தார். கலைவாணி கைக்குழந்தையாய் இருந்த பொழுது கூப்பிட்டால் திரும்பி பார்ப்பதில்லை, கத்தி அழுவதோ எந்தச் சப்தமும் தருவதோ இல்லை.. என்ற போதுதான் கலைவாணிக்கு ஏதோ பிரச்சினை இருப்பதை உணர்ந்தார் தாய் கண்ணம்மாள். மேலும் கலைவாணி மற்றக் குழந்தைகள் போல் இல்லாமல் தனித்து இருந்ததையும், மற்றக் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் எந்தச் சராசரி நடவடிக்கைகளும் இல்லாமல் இருப்பதைக் கண்ட தாயார் மிகவும் வருந்தி உறவினர்களின் உதவியை நாடினார். அவர்களுக்கும் போதிய படிப்பறிவும், விழிப்புணர்வும் இல்லாத காரணத்தால் மந்திரித்துப் பார்க்கும்படி கூறினர். அது எந்தப் பலனும் அளிக்காததால் கண்ணம்மாள் என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு மகள் கலைவாணியை அழைத்துச் சென்றார். அப்போதுதான் தன் மகள் கலைவாணிக்கு காது கேட்கவோ , வாய் பேசவோ முடியாது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் மருத்துவர்கள் இவர்களைப் போன்ற குழந்தைகளுக்கு என்று தனியாகப் பள்ளிக்கூடங்கள், காப்பகங்கள், தனிக் கல்விமுறைகள், விளையாட்டு முறைகள் போன்றவை இருப்பதைத் தெரியப்படுத்தினர். அங்குக் கலைவாணியைச் சேர்ப்பதன் மூலம் அவளது தனிமையைப் போக்க முடியும் என்பதைத் தாய் கண்ணம்மாவிற்கு உணர்த்தினர். அதன் பிறகு மூன்று வருடங்களாக அதற்கான முயற்சியை மேற்கொண்ட அந்த தாய் பல இடங்களில் தேடி இறுதியாக திருப்பூர் காது கேளாதோர் பள்ளியில் கலைவாணியைச் சேர்த்தார்.

இங்குத் தனிப்பட்ட சிறப்புப் பாட முறைகள், ஆதரவு, அன்பு, அனுசரணை போன்றவற்றால் கலைவாணி மிக விரைவிலேயே இங்கு உள்ள குழந்தைகளுடனும் ஐக்கியமாகி விட்டார். தனக்குள் இருக்கும் தனித் திறமைகளைச் சரியான முறையில் புரிந்து கொண்டு அவற்றை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தாள்.

தற்போது 11ஆம் வகுப்பு படித்து வரும் கலைவாணியின் ஆற்றலையும், தனித் திறமைகளையும், சாதனைகளையும் பற்றிச் சொல்வதென்றால் நாளெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம். காது கேட்க, வாய் பேச இயலாத நிலையிலும் கலைவாணி 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 82 % மதிப்பெண்கள் பெற்றுப் பள்ளியில் முதலிடம் பெற்றாள். கடந்த வருடம் 2003-2004க்கான தமிழக அரசு மாநில அளவில் நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஓட்டப் பந்தயப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றாள்.
அது மட்டுமல்லாமல் ஓவியக் கலையிலும் சிறப்பாகப் பயிற்சி பெற்று கோவை பாரதியார் பல்கலை கழகத்தில் நடந்த ஓவியப் போட்டியிலும் கலந்து கொண்டு சிறப்பாக ஓவியம் வரைந்து முதல் பரிசை தட்டிச் சென்றாள் . மேலும் கணினித் துறையிலும் திறமை வாய்ந்தவராகத் திகழ்கிறார். இதுவரையிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பதக்கங்களும், 100க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும் வென்றுள்ளார்.

இது போன்ற வெற்றிகளை எல்லாம் யார் வேண்டுமானாலும் சற்று முயற்சி செய்தால் சாதித்துக் காட்டலாம் . ஆனால் இவை எல்லாம் தாண்டி கலைவாணியிடம் இருக்கும் திறமையோ இறைவனையே இவரைப் படைத்தற்காகப் பெருமிதம் கொள்ளச் செய்யும். இனி இந்தத் தவறை செய்யாமல் இருக்கவேண்டும் என்று நினைக்க வைக்கும்.

வாய் பேச முடியாத காது கேளாத கலைவாணி ஒரு சிறந்த நடனக் கலைஞரும் கூட ...

இசைக்கு ஏற்ப நடனம் ஆடும் திறமை வாய்ந்த அதிசய படைப்பான இவள் கலைவாணி என்ற பெயருக்கேற்ப கலைகளின் தேவதை தான் ...

கலைவாணியின் இந்த நடன திறனை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்ட சன் டிவியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சாதனையாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. அதில் நடந்த 13 வார நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசாக 5 லட்சம் வென்றார். காது கேட்க முடியாத இவரால் இசையை உணந்து அதற்கு ஏற்ப ஆட முடியும் என்பதை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டிய சன் டிவிக்கு நன்றி. கலைவாணியைப் படைத்த இறைவனையும் இவரைக் கண்டு பிரமிக்க வைக்கும் இந்தத் திறமை ஒவ்வொரு மாற்றுத் திறனாளிக்கும் ஊக்கத்தைக் கொடுக்கிறது. தன்னாலும் சாதிக்க முடியும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

இவருக்குக் கற்றுத் தரும் ஆசிரியர்களான சித்ரா மற்றும் ஸ்ரீனிவாசனிடம் கேட்ட போது, "பொதுவாகக் கலைவாணி மிகவும் துடிப்பு நிறைந்த சுறுசுறுப்பான பெண் , அவள் குழந்தை பருவத்தில் இருந்தே எல்லாப் பாடங்களிலும் எல்லாத் துறையிலும் முன்னிலை பெற்று வருவாள். சாதாரண மாணவர்களைக் காட்டிலும் கலைவாணி மிகவும் திறமைசாலியாகவே காணப்படுவாள். சொல்வதை எளிதில் புரிந்து கொள்வாள். இதைவிட மேலும் இவள் சாதிப்பாள் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது " என்று பெருமிதம் கொண்டார்கள்.

இவராலேயே இவ்வளவு சாதிக்க முடியும் என்றால், எந்த முயற்சியும் இல்லாமல் வாழ்ந்து மண்ணோடு மண்ணாகும் குறைகள் இல்லாத மனிதர்கள் உண்மையாக முயற்சித்தால் சுலபமாக வெல்லலாம். இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம். இதுபோன்ற மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் உலகை வெல்லத் துடிக்கும் இன்னும் எத்தனையோ கலை தேவதைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் சாதனைகளில் வென்று மகிழ்வுற வாழ்த்துவோம் !!! கலைவாணிக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள் !!!

‪#‎மகேந்திரன்‬

Wednesday, May 22, 2013

"திண்டுக்கல்லின் முதல் பெண்மணி பரிமளாதேவி" ~ மகேந்திரன்



திண்டுக்கல் மாவட்டத்தில் படிப்பறிவு அதிகம் இல்லாத சின்னாளப்பட்டியில் உள்ள மேலகோம்பை என்னும்  குக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் திருமதி. பரிமளா தேவி.வயது 43  மற்ற சராசரி பெண்களை போல் குடும்பத்தையும் , குழந்தைகளையும் மட்டும்உலகம் என இருக்காமல் , தன்னால் இயன்ற அளவு சமுதயாத்திற்கு உதவ வேண்டும் என உள்ளம் கொண்ட பெண்மணி . படித்தது பத்தாவது என்றாலும் இவரிடம்இருக்கும் திறமைகள் ஏராளம் .

கவிஞர் , எழுத்தாளர் , கைவினை கலைஞர் , சமுக சேவகி என இவரை பற்றிசொல்லி கொண்டே போகலாம் . சமீபத்தில் "மிதக்கும் சிற்பங்கள்" என்ற ஒரு அழகானகவிதை தொகுப்பினை  எழுதி வெளியிட்டுள்ளார் .  அதுமட்டுமில்லாமல் வீட்டில் தேவை இல்லாத பொருட்களை கூட அழகான உபயோகமான கைவினைபொருட்களாக மாற்றுவதில் வல்லமை படைத்தவர் . இவர் மட்டும் இதை செய்யாமல் வீட்டில் இருக்கும்பெண்களுக்கும், மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கும் , கல்லூரி  கல்லூரிகளிலும் சென்று  கைவினைபொருட்கள் செய்யும் பயிற்சியை  கற்று தருகிறார் . இதன் மூலமாகபயனடைந்தோர் ஏராளம். இவருடைய  சேவைகளுக்காக   இவரின் கணவர் ராஜாராம் , மகன் கார்த்திக் (இன்ஜினியரிங்இரண்டாமாண்டு)  இவருக்குமிகுந்த உறுதுணையாக உள்ளனர். 


அதுமட்டும் இல்லாமல்
மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவம் பயில இறந்தவர்களின் உடல்கள்தான் மிகிந்த அவசியம் தேவை என்பதை திருமதி. பரிமளா தேவி புரிந்து கொண்டு பிறந்தோம் இறந்தோம் என இல்லாமல் தன்னுடைய உடலை மருத்துவ கல்லூரிக்கு பெற்றவர்களின் எதிர்ப்பையும் மீறி தன்   கணவரின்  ஆதரவுடன் உடல் தானம் செய்ய   பதிவு  செய்துள்ளார் .இது  திண்டுக்கல் மாவட்டத்தில்முதல் உடல் தானம் செய்தவரும் இவரே என்னும் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் பெண்மணியாக  திகழ்கிறார்  திருமதி. பரிமளா தேவி. இதன் மூலமாக  இவர் உடல் தானத்தின் முக்கியத்துவத்தை விளக்கி தனது குடும்பத்தில் உள்ள  ஏழு பெறாது உடல்களையும் தானத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குரிப்புடதக்கது. மேலும் உடல்தானத்தை பற்றி  பல்வேறுவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி பலபேர்  உடல்தானம்  செய்ய முன்வந்து பதிவு செய்துவருகின்றனர்   .


அதுமட்டுமில்லாமல்தன்னுடைய 12ஆம் வயதிலேயே தன்னுடைய உறவினர் ஒருவருக்கு விபத்தினால் அடிபட்டு இரத்தம் தேவை பட்ட பொழுது மற்ற உறவினர்கள் கூடபயத்தினால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இரத்த தானம் பற்றி  அறிந்து கொண்டு அது   விலைக்கு  வாங்கும் திரவம் அல்ல என்று உணர்ந்து ,    அன்று முதல் இன்று வரை இரத்த தானம் பற்றிய  விழிப்புணர்வு பிரசாரம் மற்றும்  தேவைபடுபவர்களுக்கு இரதம் சேகரித்து கொடுப்பதும்  திருமதி. பரிமளா தேவி தனது கடமையாக செய்து வருகிறார். . இவருடைய இத்தகையசேவை மனப்பான்மையை பாராட்டி திண்டுக்கல் ரோட்டரி கிளப் சார்பில்சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்கள் பரிமளா  தேவிக்கு சாதனைபெண் என்ற பாராட்டு  கிடைத்தது இவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை ஏற்ப்படுத்தி  இருப்பதாக கூறினார்.


பாராட்டுக்களும் ஊக்கங்களும் மட்டுமே இவர் போன்றோருக்கு ஒரு உந்துதல் சக்தி...
எனவே இப்படி சமுகத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளைசெய்து வரும் அவருக்கும் , அவருடைய குடும்பத்திற்க்கும் நம்
வாழ்த்துக்களைதெரிவிப்போம்  !!!


~மகேந்திரன்

Tuesday, January 22, 2013

யோகா அசத்தும் பத்துவயது பிரதிப்பா பாப்பா...


அறிவுக்கும் திறமைக்கும் வயது ஒரு பொருட்டல்ல. மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது என்று சொல்வார்கள். அதற்கு இணங்க கோவையை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் P. பிரதிப்பா என்னும் 10 வயது குழந்தை சிறுமி அசாத்திய திறமை பெற்று திகழ்கிறார்கள்.

ஏழாம் வயதில் தனது பள்ளியான சந்திர மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆரம்பித்த யோகாசனம், அடுத்தடுத்து P. பிரதிப்பா எடுத்துக்கொண்ட முயற்சியிலும் பயிற்சியிலும் 2010, 2011 சென்னையில் தமிழ்நாடு யோகா அமைப்பு நடத்திய மாநில அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பெற்றாள். அதனை தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளில் P. பிரதிப்பா பல பரிசுகளை வென்று இந்த ஆண்டு குஜராத்தில் நடந்த தேசிய அளவிலான யோகாசனம் போட்டியில் தமிழ்நாடு யோகா அமைப்பின் சார்பில் கலந்துக்கொண்டு மூன்றாம் இடம் பெற்றால் . இதனால் மே மாதம் மலேசியாவில் நடக்க உள்ள உலக அளவிலான யோகா போட்டிக்கு P. பிரதிப்பா பரிந்துரை செய்யப்பட்டு உள்ளால் என்பது குறிப்பிடத்தக்கது.
யோகா மட்டும் இல்லைங்க இந்த பத்து வயது P. பிரதிப்பா பல கட்டுரை போட்டிகளில் கலந்துக்கொண்டு முதல் பரிசும் தட்டி சென்று இருக்கிறாள் . பாரத நாட்டியத்தில் சலங்கை பூஜை முடித்து அரங்கேற்றமும் நடந்தி இருக்கிறாள்.


இப்படிப்பட்ட ஒரு அசாத்திய திறமை கொண்ட சிறுமியை கோவை விலாங்குருச்சியில் உள்ள அவளது வீடிற்கு சென்று P. பிரதிப்பா வின் தந்தை பூவராகவன் அவர்களை சந்தித்தோம் அவர் சாதாரண ஒரு கம்பெனியில் கூலித்தொழில் செய்துவருவதாகவும் பிரதிபாவின் இளம் வயதில் இந்த திறமையை தன் வறுமையும் பொருளாதாரம் எந்த வகையிலும் இடையூறாக இருக்க கூடாது என்பதற்காக அரும்பாடு பட்டு இவளை ஊக்குவித்து வருகிறேன் என்று கூறினார்.

மேலும் பிரதிப்பாவை சந்தித்து அவளது லட்சியம் பற்றி கேட்க்கையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதே தன்னுடைய லட்சியம் என்றும் அதற்காக தான் கடும் பயிற்சி எடுத்துவருகிறேன் மருதுவராகவேண்டும் என்று கூறினால்.
திறமை எங்கிருந்தாலும் நாம் அதை ஊக்குவிக்க வேண்டும் அதுவும் இந்த இளம் வயதில் வறுமை கோட்டில் இருக்கும் இந்த சிறுமி பிரதிபாவின் திறமையை பாராட்டாமல் விடலாமா.
வாழ்த்துக்கள் பிரதிப்பா கண்டிப்பா உனது எண்ணம் போல இந்தியாவிற்கு பெருமை தேடித்தரும் பெண்ணாக நீ விளங்க எங்களுடைய வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் பிரதிப்பாவை ஊக்குவிக்க வேண்டும் , வாழ்த்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கா கண்டிப்பா இந்த அலைபேசி எண்ணுடன் தொடர்புகொண்டு பேசுங்கள் பிரதிபாவின் தந்தை பூவராகவன் 9787835373
~மகேந்திரன்


இந்தியன்  எக்ஸ்ப்ரஸ் நாளிதழில் 16/01/13 அன்று வெளியான செய்தி .

 


திறமை உள்ளவர்களை பாராட்டாமல் விடலாமா
அதுவும் இந்த இளம் வயதில் பிரதிபா தன்னுடைய முயற்சியால் யோகா போட்டியில் சென்னை நடந்த மாநில அளவிலான போட்டியில் இரண்டாம் இடமும் , குஜராத்தில் நடந்த போட்டியில் மூன்றாம் இடமும் வெற்றி பெற்று மலேசியாவில் நடக்க இருக்கும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றமைக்கு பிரதிபா வசிக்கும் விளாங்குறிச்சி 32 வார்டு சார்பாக இன்று பொதுமக்கள் சார்பாக பாராட்டுவிழா நடந்தது அதில் கவின்சிலர் K.R. ஜெயராமன் கலந்து கொள்ள பிரதிபாவிர்க்கு பொன்னாடையும் பரிசுப்பொருளும் கொடுக்கப்பட்டது.

வாழ்த்துக்கள் பிரதிபா மே மாதம் மலேசியாவில் நடக்க இருக்கும் இறுதி சுற்றில் நீ வெற்றி பெற்று இந்தியாவிற்கு நீ பெருமை தேடி தருவதில் எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது வாழ்த்துக்கள் பிரதிபா பாபா.

  ~மகேந்திரன்
 

Wednesday, November 28, 2012

கம்போடியாவில் தமிழனின் படைப்பு~மகேந்திரன்

கம்போடியா நாடு எங்கு இருகின்றது என்று தெரியுமா ?
சத்தியமா எனக்கு தெரியாதுங்க.
ஆனால் அந்த நாட்டில் உள்ள ஒரு விஷயம் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோசபடறேங்க...
என்னனு சொல்லவா...
அந்த நாட்டு தேசிய கோடியில் நம்ம தமிழன் கட்டிய கோவில்தான் பொறிக்கப்பட்டு உள்ளதுங்க.
என்ன அதிசயமா பாக்கறிங்களா..?
உண்மைதானுங்க...
கம்போடியா நாட்டில் நம் தமிழன் ஒருவன் கலை திறமையை உலகிற்கே காட்டி உள்ளார்.
அவர் பெயர் "சூர்யா வர்மன்" கம்போடிய மாகாணத்தில் ஒரு பகுதியை கைப்பற்றிய போது அதன் நினைவாக விஷ்ண

ு பகவானுக்கு கோவிலை கட்டினாராம்,
அந்த கோவில் தான் தற்போது கம்போடியா நாட்டின் தேசிய கோடியில் பொறிக்கப்பட்டு உள்ளது ,
அந்த கோவிலின் பெயர் "அங்கோர் வாட்"
இந்த கோவிலுக்கு இன்னொரு சிறப்பு இருக்குங்க,
உலகிலேயே அதிக பரப்பளவு கொண்ட கோவில் இதுதாங்க , சும்மா இல்லைங்க 402 ஏக்கர் பரப்பளவு நினைச்சே பாக்க முடியாது இல்லைங்களா...
நமக்கு "சூர்யா வர்மன்" என்று ஒருத்தர் இருந்தாரா என்றே சந்தேகமா இருக்குங்களா ?
உண்மைதாங்க.
தமிழன் தமிழன்தாங்க.
~மகேந்திரன்