Showing posts with label எல்லாம்மும் நீ. Show all posts
Showing posts with label எல்லாம்மும் நீ. Show all posts

Monday, November 28, 2011

எல்லாமும் நீ ...

எந்த கவிஞனையும்
எழுத
தடை விதித்தது
இல்லை
காகிதம்..!
எனக்கு
ஏனடி தடை செய்கிறாய் ..♥

 
நிலாவில்
நட்சத்திரம்
மின்னுவது தெரியுமா..?
உன் மூக்குத்தி
மின்னுகிறதே..♥

 
நீ
எனக்கு
கிடைக்கும் போது
நினைத்துக்கொண்டேன்
நான் கொடுத்து வைத்தவன் என்று...
நான்
உனக்கு குடுக்கும் போது
நினைத்துக்கொண்டேன்
உனக்கு
குடுப்பதர்க்காகவே
வைத்திருந்தவன் என்று..♥


 
 
நீ
எழுத்துப்பிழையோடு
எழுதும் கவிதைக்கு
என்
திருத்தல்கள்
அவசியம்...
அதற்காகவாவது கொஞ்சம்
மக்காய் இரு..♥


 
புத்தகம் இருந்தால்தான்
நூலகமா..?
நீ
நூலிடை கொண்ட
நூலகம்..♥