Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

Friday, September 18, 2015

நம் பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்தும் அனுஷா

நம் பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்தும் அனுஷா..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


சாதிப்பதற்கு வசதியோ வயதோ ஒரு தடையாக இருப்பதில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் கோவை தீத்திபாளையத்தில் உள்ள ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஆனந்தன், ஜெயந்தி தம்பதியர்களின் மகளான 15 வயது சிறுமி அனுஷா பவித்ரா ஸ்ரீ. இவர் ஒரு அரசு பள்ளி மாணவியாக படிப்பில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் , அப்பள்ளியின் கதாநாயகியாக உலாவருவதோடு நமது தமிழ் கலாச்சார கலைகளை தன் கைவசப்படுத்தி வைத்திருக்கிறார்.





பரதம், அம்மன் நடனம், கரகாட்டம், பறை போன்றவை நம் பாரம்பரிய கலைகள் தான் என்றாலும், நடுத்தர மக்கள் எல்லாம் இந்த கலைகளை ரசிப்பதோடு மட்டும் தான் இருக்க முடியும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அப்படியே கற்றுக்கொள்ள விரும்பினாலும் இந்த கலைகளை கற்றுத்தரும் ஆசிரியர்களும் மிகவும் குறைவு. இதனாலேயே தற்போது இந்த பாரம்பரிய கலைகள் முற்றிலும் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆண்டவனின் வரபிரசாதமாக அனுஷா எந்த குருவிடமும் பயிலாமல் இயல்பாகவே நாட்டுப்புற நடனம் போன்ற அனைத்து கலைகளிலும் கை தேர்ந்து விளங்கினார் என்றால் மிகையாகாது.
அனுஷா 6 வயது முதல் தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களில் வரும் நடனக்காட்சிகளை மட்டுமே கவனித்து அந்த வயது முதலே பள்ளிகளிலும் , விழாக்காலங்களில் தெருக்களிலும் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதோடு மட்டுமல்லாமல் தவறாமல் ஒவ்வொரு முறையும் முதல் பரிசை வென்று வந்துள்ளார். இதனை தொடர்ந்த கவனித்த பலரும் அவருக்கு முறையாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யும்படி அனுஷ்யாவின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். அதை தொடர்ந்து அவரது ஆர்வத்தை உணர்ந்த பெற்றோர் அவருக்கு முறையாக அனைத்து கலைகளிலும் பயிற்சி அளித்துள்ளனர்.
சரஸ்வதி நாட்டிய பள்ளியில் முரளி என்ற ஆசிரியரிடம் முறையாக நடனம் கற்றுக்கொண்டுள்ளார். பள்ளி நடன நிகழ்ச்சிகளிலும் இவர் முதல் இடத்தை பிடித்து வருகிறார். தொடர்ந்து 5 வருடங்களாக மாவட்ட அளவிலான கிராமிய கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முதல் இடத்தை மட்டுமே பிடித்து வருகிறார். இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இவரது குடும்பத்தில் இதற்கு முன் யாருமே இது போன்ற நடன கலை பழகியவர் இல்லை.
கரகாட்டத்தின் முக்கிய அம்சமாக திகழ்வது சாகசத்தோடு கூடிய நடனம் தான். அதாவது ஆணி, கத்தி ஆகியவற்றின் மேல் நடனம் புரிவது, கண்ணாடி குவளை மற்றும் ஒற்றை தம்ளரின் மேல் நின்று நடனம் ஆடுதல் இப்படி. இதில் எல்லாவற்றிலும் கைதேர்ந்த அனுஷ்யா தொடர்ந்து 45 நிமிடம் விடாமல் கரகாட்டம் ஆடிக்கொண்டே இறுதியில் தரையில் இருக்கும் குண்டூசியை விழி இமையில் எடுத்து காட்டி பார்ப்பவர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிடுவார் .
அனுஷா நடனத்தில் சாதித்தது மட்டுமல்லாமல் அன்னை கலைக்கூடம் மூலம் நடிப்பும் கற்று வருகிறார். மேடை பல கண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரது திறமை கண்டு பலரும் இவருக்கு ஊக்கமும் உதவியும் வழங்கி வருகின்றனர்.
உதவியாக வந்த நிதியைக் கொண்டு இவரது தாய் ஜெயந்தி அன்னை கலைக்கூடம் மூலம் அனுஷாவை வைத்து “அரசுப்பள்ளி” என்ற குறும்படம் ஒன்றை தயாரித்தார். இந்த குறும்படம் கோவையில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக காட்டப்பட்டுள்ளது. நல்ல வரவேற்பைப் பெற்ற "அரசுப்பள்ளி" குறும்படம் பார்த்த இயக்குனர் பேரரசு தனது அடுத்த படத்தில் இவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு அளிப்பதாக கூறியிருக்கிறார்.
 

இவர் கலைஞர் டிவியின் “ஓடி விளையாடு பாப்பா” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றிருக்கிறார். மேலும் கேரளாவின் “மலர்விழி மனோரமா” டிவி யின் 1+1=3 மற்றும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றிருக்கிறார். இதுவரை இவர் எதிலும் இரண்டாவது பரிசைகூட வென்றதில்லை, எல்லாவற்றிலுமே முதல் பரிசு மட்டுமே தான்.
பொருளாதாரத்தில் சொல்லும்படியான வசதி இல்லாத போதும் இவரது ஆர்வத்தை கண்டு இவரது பெற்றோர் தங்களால் முடிந்தவரை இவருக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
இவர் தாய் ஜெயந்தி, “என் மகளுக்கு இயற்கையாகவே இப்படி ஒரு திறமை அமைந்திருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த சாதனைகளோடு அவள் படிப்பிலும் கெட்டிக்காரியாக இருந்து வருகிறாள்” என்று பெருமிதத்துடன் கூறினார்.
" கலையையும் வளர்க்கணும் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தணும் " மேல் நாட்டு மோகத்தில் நம் கலாச்சாரத்திற்கு சற்றும் ஒத்துவராத நடனங்களை மக்கள் மத்தியில் முகம் சுளிக்கும்படி ஆடுபவர்கள் தான் இக்காலத்தில் அதிகம். அனுஷா, அவரது பெற்றோர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நம்நாட்டின் கலாசாரத்தை பறைசாற்றும் இது போன்ற கலைகளை அரசாங்கம் மட்டுமல்லாமல் மக்களும் ஊக்கப்படுத்தவேண்டும் என்பதே. இதற்காக நாம் பெரியதாக எதுவும் செய்யவேண்டியது இல்லைங்க நம்முடைய வீட்டில் நடக்கும் சுபகாரியங்களுக்கும் , கல்லூரி மற்றும் பள்ளி கலை விழாக்களிலும் இது போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்தாலே போதும். அவ்விழாக்களில் அனுஷா போன்ற இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கலாமே..!
அனுஷா அலைபேசி எண் - 09629363067

~மகேந்திரன் 



Sunday, March 22, 2015

சாதனை பெண்களுக்கு சுதேசி "சக்தி சாதனா" விருது~மகேந்திரன்

இந்த மாதம் பெண்கள் மாதம் ஆமாம் மார்ச் 8 உலக மகளிர் தினம் இந்த தினத்தை கொண்டாடும் வகையில் உலகெங்கிலும் பல நிறுவனங்கள் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டு வருகின்றன. இதில் ஒரு நிகழ்வாக உலகெங்கிலும் மாதம் இருமுறை வெளிவரும் " சுதேசி " பத்திரிக்கை கோவையில் சாதனை பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. அதில்

 கீதாராணி (பிராணிகள் பாதுகாப்பு ஆர்வலர்) http://eerammagi.blogspot.in/2015/03/blog-post.html 
 
 

 

 லட்சுமி பாட்டி (முதியோர் தடகள வீராங்கனை) http://eerammagi.blogspot.in/2015/03/blog-post_10.html இவர்களுக்கு சுதேசி "சக்தி சாதனா" விருது 2015 

 

 

மற்றும் செல்வி. இலட்சியாமதியழகி (ஓவியர்) http://eerammagi.blogspot.in/2015/03/blog-post_17.html 

 

 

 அவர்களுக்கு "யுவ சக்தி சாதனா" விருது 2015 எழுத்தாளர் திரு ராஜேஷ்குமார் அவர்களால் வழங்கி கௌரவித்தார்கள் .

இந்த மூவரையும் நான் நேரில் சந்தித்து அவர்களை எனது கட்டுரை வாயிலாக அறிமுகப்படுத்தியதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். விருது வழங்கி கௌரவித்த சுதேசி பத்திரிக்கைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிதனையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

~மகேந்திரன் 


Thursday, May 02, 2013

"சாதாரணமாய் இருந்து சாதனை படைத்தவர்கள்"~ஈரநெஞ்சம்

"சாதாரணமாய் இருந்து சாதனை படைத்தவர்கள் "

28-04-13 அன்று கோவையில் உள்ள நேசம் என்ற அமைப்பு "சாதாரணமாய் இருந்து சாதனை படைத்தவர்கள் " என்று, வாழ்வில் சாதனை படைத்த சிலருக்குப் பாராட்டு விழாவை நடத்தினார்கள். அவர்களில் நமது ஈரநெஞ்சம் அமைப்பும் ஒன்று என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

சாலையோரங்களில் ஆதரவின்றி இருக்கும் முதியோர்களை, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, நோய் வாய்ப்பட்டு ஆதரவற்றவர்களைக் காப்பங்களிலும் மருத்துவமனைகளிலும் சேர்த்து பராமரித்தல், அவர்களில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களுக்கு இறுதி காரியங்கள் செய்தல், குடும்பத்தை விட்டுத் தவறுதலாகப் பிரிந்து விட்டவர்களை அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தல், ஆதரவற்றோர் காப்பகங்களில் இருந்து பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவி தொகை வழங்குதல், மேலும் அவர்களுக்குத் தேவையானப் பொருட்களை வழங்குதல், இரத்த தான முகாம் மற்றும் மரம் நடுதல், இலவசக் கண் சிகிச்சை முகாம்கள் நடத்துதல், உடல் தான விழிப்புணர்வு முகாம்கள், வாரம் தோறும் காப்பங்களுக்கு உணவு வழங்குதல், மளிகைப் பொருட்கள் வழங்குதல், ஆதரவற்ற மகளிருக்குத் தையல் இயந்திரங்கள் வழங்கி தொழில் வசதி செய்து கொடுத்தல் போன்ற பல்வேறு சேவைகளுக்காக ஈரநெஞ்சம் அமைப்பிற்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டு நேசம் அமைப்பின் இயக்குனர் திரு. ஆனந்த் அவர்கள் மூலம் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ஈரநெஞ்சம் அமைப்பின் அறங்காவலர் திரு. மகி மற்றும் உறுபினர்கள் திரு. அன்பு, திரு. பரணி, திரு. அருண், திரு. தபசு ராஜ், திரு. ஜெகதீசன், திரு. கண்ணன், திருநங்கை. வைஷ்ணவி, திருநங்கை. பிரியா, திருமதி. அஸ்மிதா, திருமதி. வசந்தா, செல்வி. சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

~நன்றி
ஈரநெஞ்சம்

“Ordinary People Achieving Extraordinary Tasks”


On 28/04/2013, ‘Nesam’, an organization in Coimbatore, conducted an appreciation function to felicitate few people under the banner “Ordinary People Achieving Extraordinary Tasks”. We are happy to inform you that our Eera Nenjam was also selected for that.
Mr. Anand, Director of ‘Nesam’ presented a memento to our organization for our extraordinary services that include taking care of the abandoned old people on streets, mentally challenged people and sick people and admitting them in hospitals or Homes, doing the final rituals if anyone of them died, reuniting some of them with their families if they have, taking care of the education of the orphaned children in Homes, conducting blood donation, tree plantation camps, organ donation and eye checkup camps, giving various help to the inmates of the Homes including meals and groceries, giving tailoring machines, training and job opportunities to women.
Eera Nenjam President Mr. Magi and other members Mr. Anbu, Mr. Bharani, Mr. Arun, Mr. Thabasu Raj, Mr. Jegadeesan, Mr. Kannan, Thirunangai Vaishnavi, Thirunangai Priya, Mrs. Asmitha, Mrs. Vasantha, Miss. Sudha attended this function.

~Thank You
EERANENJAM

Monday, October 15, 2012

"ஈர நெஞ்சம்" அமைப்பிற்கு மகாத்மா காந்தி விருது.


 இது என்னுடைய ஆயிரமாவது பதிவு


"ஈர நெஞ்சம்" அமைப்பிற்கு மகாத்மா காந்தி விருது / Mahatma Gandhi Award to "EERA NENJAM" Organization
******
[For English version, please scroll down]
தேசிய மனித உரிமை இயக்கங்கள் சார்பில், சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்தில் நடந்த முதல் மாநில மாநாட்டில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி 12.10.2012 மற்றும் 13.10.2012 ஆகிய நாட்களில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில், ''ஈர நெஞ்சம்'' அமைப்பு செய்த பல சேவைகளைப் பாராட்டி (சாலையோரங்களில் ஆதரவின்றி இருக்கும் முதியோர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பங்களில் சேர்த்து பராமரித்தல், குடும்பத்தை விட்டு தவறுதலாகப் பிரிந்த இருபதுக்கும் மேற்பட்டவர்களை அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தல், ஆதரவற்றோர் காப்பகங்களில் இருந்து பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல், இரத்த தான முகாம் மற்றும் மரம் நடுதல் நிகழ்வுகள், இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்துதல், காப்பங்களுக்கு உணவு வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளை மிகச்சிறிய காலகட்டத்தில் செய்துள்ளமைக்காக) மகாத்மா காந்தி விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை ''ஈர நெஞ்சம்'' அமைப்பின் சார்பாக, நிர்வாக அறங்காவலர் திரு.மகேந்திரன் அவர்களுக்கு தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு கழக தலைவர் உயர் திரு. கஸ்மா. ராஜேந்திரன் அவர்கள் வழங்கி கௌரவித்தார்கள்.
~நன்றி. (தேசிய மனித உரிமை இயக்கம்)
(93/2012)

https://www.facebook.com/eeranenjam
......
National Human Rights Movements organized the ''First State Level Conference'' for appreciating ''Non-Government organizations'' on 12.10.2012 and 13.10.2012 at Omalur, Salem District, Tamil Nadu. We are pleased to inform you that EERA NENJAM Organization has received the Mahatma Gandhi Award for our various services such helping old and mentally challenged people who were left on streets, for uniting people who were separated for unknown reasons with their families, for giving educational scholarships to pupils from orphanages and homes, for conducting free blood donation camp, tree-plantation camp and eye camp to the unprivileged and public and providing food sponsorship to the homes.

Mr. P. Mahendiran, Managing Trustee of EERA NENJAM, received the award on behalf of our organization from Mr. Kasma Rajendran, Head, National Human Rights Protection Council.
~Thanks (National Human Rights Movements)
(93/2012)

Monday, December 19, 2011

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்: விருது

அதீதமான கல்வியறிவு, பெரும் தொழில் என்றில்லாமல், மிகச்சாமனியனாக இருந்து கொண்டு இந்த இளைஞர் செய்து வரும் அரிய பணிகள் போற்றுதலுக்குரியது. புத்தருக்குப் போதி மரம் போல், ஓவ்வொருவரின் முக்கிய முடிவுக்கும், திருப்புமுனைக்கும் போதி மரத்துக்கு நிகரானதொரு நிகழ்வு நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட நிகழ்வு இவருடைய வாழ்விலும் ஒருமுறை நடந்தேறியிருக்கின்றது. ஒரு முறை அவரது சகோதரிக்கு பொது இடத்தில் ஏற்பட்ட உடல் நல குறைவின்போது ஓரிருவரே மட்டுமே உதவ முன்வந்து, பலரும் வேடிக்கைமட்டுமே பார்த்துக்கொண்டிருந்த இக்கட்டான சூழலே இவரை சமுதாயத்தின் மேல் அதீத அன்புகொண்டவராக மாற்றியிருக்கின்றது. தெருவில் ஆதரவில்லாமல் இருப்பவர்களின் நிலைமை உண்மையில் பரிதாபமானது என்பதை உணர்ந்து, ஆதரவில்லாதவர்கள், மனநலம் இல்லாதவர்கள் போன்றவர்களுக்கு நம்மை போன்றவர்கள் உதவ முன்வரவேண்டும் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டவர்.

அப்படி இருப்பவர்களுக்கு இனி என்னால் முடிந்த   உதவி செய்ய வேண்டும் என அவர் எடுத்த முடிவு பலநூறு பேரை மீட்டு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுத்திருக்கிறது. யாரும் செய்யத் தயங்கும் துணிந்திடாத காரியமாக, சாலை ஓரம் கிடக்கும் வயதானவர்களையும், மனநிலை பிறழ்தவர்களையும் நல்ல உள்ளம் படைத்த நண்பர்களோடு மீட்டு அதற்கான இடங்களில் சேர்க்கவும், மருத்துவ உதவிகள் அளிக்கவும் உழைத்து வருகிறார். மனநிலை பாதிப்பால் பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர்கள் கூட இவரின் உதவியால் தங்கள் சொந்த பந்தங்களோடு இணைந்திருக்கிறார்கள் என்பது நெகிழ்ச்சியானதோரு விசயம்.

இதுவரை கிட்டத்தட்ட அறுபதிற்கும் மேற்பட்டவர்களை  பாதுகாப்பாக காப்பகங்களில் சேர்த்து நல்வாழ்வு அமைத்துக்கொடுத்துள்ளார்.  அதோடு காப்பகத்தில் இருந்தும் சாலையோரமாக இருந்தும் ஆதரவற்று இருந்த பத்து பேரை அவர்களது வீடு தேடி அவர்களின் உறவினரிடத்தில் சேர்த்து வைத்துள்ளார்.

சமூக ஆர்வலர், கவிஞர் மகேந்திரன் அவர்கள்.



••••