Thursday, October 13, 2011

என்னுடைய பேனாவிற்கு பேச்சு வந்து பேச ஆரம்பிச்சுது...

என்னுடைய பேனாவிற்கு பேச்சு வந்து பேச ஆரம்பிச்சுது...


ஒரு கோடியில்  ஒரே ஒரு பூ பூத்திருப்பதை பார்த்து கவிதை எழுதியது...
‎"பூ பூத்தல் சொர்க்கம் , உதிர்ந்தால் தத்துவம் " என்று ...
பேனா : கவிதை எப்படி என்றது 
ஒருவர் : வைரமுத்து கவிதை போல இருக்கிறது என்றார்.
வேறு கவிதை எழுதியது...

"பூத்தால் செடிக்கு அழகு, நீ சூடினால் பூவுக்கு அழகு" . இது எப்படி என்றது....,

ஹ ஹ ஹ இது மகியின் கவிதை என்றார் மற்றொருவர் ,

மீண்டும் வேறு கவிதை ...,

பூ ஒற்றைக்கல் தவசி...: அட இது அப்துல் ரகுமானுடையது ...

"பூ வண்டுகளுக்காக  பிறந்த தாசி " வேதனை என்றார் ஒருவர் ஆனாலும் மேத்தாவின் சாயல் என்றார் ,

" பூ ஒருநாள் உலக அழகி " அட இது நம்ம ஜோதிகா பாடற பட்டு மாதிரி இருக்கு என்றார் ஒருவர்

என்னுடையா பேனா குழம்பியது....
தவித்தது ...,
புலம்பி புலம்பி , பேனா என்னிடம் கேட்டது... ஏன் இப்படி என்று

அதற்கு நான் சொன்னேன், என்ன எழுதுகிறேன் என்று தெரியாது என்ன எழுதுவது என்றும் எனக்கு தெரியாது ...
ஆனால் ஒன்று, 
எழுதுவதை எழுதிய பிறகு யாரிடமும் எப்படி இருக்கின்றது என்று மட்டும் கேட்க கூடாது என உனக்கு பேச்சு வந்தபிறகு கற்றுக்கொண்டேன் என்று...
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment