கோவை விநாயகபுரம் கிரிமலை நகரில் இன்று (22/01/23) தங்கள் நகரை பசுமைநகராக மாற்றும் முயற்சியின் முதல் படியாக பெற்றோர்களும் குழந்தைகளும் இன்றைய விடுமுறை நாளை அழகாகப் பயன்படுத்தி உள்ளனர்...
மரம் வளர்ப்பது தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு நம் முன்னாள் குடியரசு தலைவர் மற்றும் மாணவர்களின் நாயகன் APJ அப்துல் கலாம் அவர்கள் கூறிய உறுதிமொழி:
நான் என் வீட்டிலோ, காட்டிலோ, பள்ளிக்கூடத்திலோ, வேலை இடத்திலோ 10 மரங்களை நட்டு, அதைப் பாதுகாப்பேன். நான் என் குழந்தைகளை மரம் நட்டு வளர்க்க ஊக்குவிப்பேன், என்று அவர் கடைப்பிடிக்க சொல்லிய உறுதிமொழியை இந்த பெற்றோர்களும் குழந்தைகளும் செயல்படுத்தி உள்ளனர்.
அழிந்து வரும் இயற்கையைப் பாதுகாக்கவும், மரங்களின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு புரியவைக்கவும் அவர்களை தங்கள் பகுதியில் பராமரிப்பற்ற நிலையில் இருந்த பூங்காவில் மரம் நட ஊக்கப்படுத்திய பெற்றோர்க்கு வாழ்த்துகள்..
நிகழ்வில் கலந்து கொண்ட மழலைச் செல்வங்கள் புதிதாக நடப்பட்ட மரக் குழந்தைகளுக்கு தங்கள் பெயரைச் சூட்டி மகிழ்ந்ததோடு தண்ணீர் ஊற்றி எந்நாளும் பராமரிப்போம் என்று உறுதியளித்தனர்.
எங்களை எங்கள் அப்பா அம்மா பார்த்துக் கொள்வது போல மரங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று குழந்தைகள் கூறுகையில் கலாம் கண்ட கனவு இந்தியா கண்ணில் ஒளிர்ந்தது.
~ ஈரநெஞ்சம் மகேந்திரன்
Tweet | ||||
No comments:
Post a Comment