இந்த காப்பகம் மாநகராட்சி உதவியால் மட்டும் இல்லாமல் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் கடந்த 14/12/2014 அன்று ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் சேவைகளை பார்வையிட நேரில் வந்த ஆன்மீக சொற்பொழிவாளர் கலைமாமணி திரு.சுகிசிவம்அவர்கள் காப்பகத்தில் இருப்பவர்களுக்காக தாமும் ஏதாவது பயனுள்ள உதவி செய்வதாக உறுதி அளித்து அதன்படி திருப்பூரில் இருக்கும் அவரது நண்பர்கள் திரு. கிரிபிரபு, திரு. நந்தகோபால் அவர்களுடன் இணைந்து காப்பகத்தில் வாழும் ஆதரவற்றவர்களுக்காக தண்ணீரை கொதிக்கவைத்து சுத்தம் செய்யும் அதி நவீன குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் [ Water Purifier ] தானமாக வழங்கி உள்ளார்கள்.
இந்த உபகரணத்தினால் காப்பகத்தில் வாழும் ஆதரவற்றவர்களுக்கு இதுநாள் வரையில் தூய்மையான குடிநீர் கிடைக்காமல் இருந்த நிலை மாற்றப்பட்டு கொதிக்கவைத்த சுத்தமான குடிநீர் கிடைக்கிறது .
கொடை வழங்க இன்று (26.12.2014) நேரில் வந்த திரு. சுகிசிவம்அவர்களது நண்பர்களான திரு. கிரிபிரபு அவர்களும் திரு. நந்தகோபால் அவர்களும் " ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்பது, அந்த ஆண்டவனுக்குத் தொண்டு செய்வதைக் காட்டிலும் உயர்வானதொரு தொழுகை. அது அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்த்திடாது அந்த வாய்ப்பினை எங்களுக்கு அளித்த கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கும், மாநகராட்சி ஆதரவற்ற காப்பகத்திற்கும் முதற்கண் அங்கு வாழும் ஆதரவற்றவர்களுக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் " என்றார்கள்.
என்ன தான் அவர்கள் நன்றி தெரிவித்தாலும், இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் சில முக்கியமான உதவிகள் கனவாக இருப்பதை நனவாக்குவது என்பதும் கனவாகவே இருக்கிறது.. இந்நிலையில் அதிக பொருள் செலவில் நவீன உபகரணம் வழங்கிய ஆன்மீக சொற்பொழிவாளர் கலைமாமணி திரு.சுகிசிவம் மற்றும் அவரது நண்பர்கள் திரு. கிரிபிரபு, திரு.நந்தகோபால் இவர்களுக்கும் நன்றிகளையும் வணக்கங்களையும் உங்கள் சார்பாக தெரிவிப்பது இறையாண்மை என்று ஈரநெஞ்சம் அமைப்பு மனதார நன்றியை தெரிவிக்கிறது.
~ ஈரநெஞ்சம்
வணக்கம்
ReplyDeleteபுதிய ஆண்டில்தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆர். எஸ் புரத்தில இது எங்கீங்க இருக்குது?
ReplyDelete