Sunday, August 26, 2012

காஞ்சிபுரத்தில் ஈரநெஞ்சம் நடத்திய இரத்ததானம் முகம்


[For English version, please scroll down]

எங்களது அமைப்பு, ஆரம்பித்த மூன்று மாதங்களில், பணிகள் மற்றும் சேவைகளை, கோவையை அடுத்து, காஞ்சிபுரத்தில் கடந்த சுதந்திர தினத்தில் (15 08 .2012) தடம்பதித்தது. எங்கள் அமைப்பின் திரு. ராஜ் குமார் மற்றும் திரு. பரணிதரன் அவர்களின் தலைமையில், காஞ்சிபுரத்தில் முதன்மை அரசு மருத்துவமனையில், 'ஈர நெஞ்சம்' மற்றும் 'முதன்மை அரசு மருத்துவமனை காஞ்சிபுரம்' இணைந்து 15/08/2012 சுதந்திர தினத்தன்று இரத்ததானம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அதில், எங்கள் அமைப்பிற்கு அமோக வரவேற்ப்பு கிடைத்துள்ளது. இந்த முகாமில், முப்பத்தைந்து (35) பேர் இரத்ததானம் செலுத்தியுள்ளனர். அவர்களுக்கு எங்கள் அமைப்பின் சார்பாக நன்றிகள். இதுவரை நடந்த மருத்துவ முகாமில், அதிகதானம் செய்யப்பட்டதில் இதுவும் ஒன்று என்று பாராட்டினர். விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட இந்த முகாமில், தானம் செய்தவர்களில் அநேகம் பேருக்கு இந்த முகாம் தான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும், கோவையில் இருந்து வெகு தூரத்தில் இருக்கும் காஞ்சிபுரத்தில் எங்கள் அமைப்பு, இப்படிபட்ட இரத்த தானம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தியுள்ளது, எங்களது வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாக கருத்தப்படுகின்றது.

இந்த முகாமிற்கு தேவையான சான்றிதல்கள், பேனர்கள், பரிசுபொருட்கள் மற்றும் சிற்றுண்டி ஆகியவற்றிற்கு நிதியுதவி அளித்தவர்கள்: திரு. அருண்குமார், திரு. ராஜ் குமார், குமாரி.அன்னபூரணி மற்றும் திருமதி. மணிமேகலை அவர்கள். அனைவருக்கும், எங்கள் அமைப்பின் சார்பாக எங்களது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோல், இன்னும் நிறைய நட்செயல்கள் எங்கள் அமைப்பின் மூலம் நடை பெறுவதற்கு உங்கள் ஆதரவும், கடவுளின் அருளும் கிடைத்திட அனைவரும் பிராத்திப்போமாக.

https://www.facebook.com/eeranenjam

~நன்றி /(57/2012)
ஈர நெஞ்சம்.
******
Though we had organized/conducted about sixty activities around Coimbatore in three months, it was our first time that we had extended our activities and services to Kancheepuram on Indian independence day (15.08.2012). We had co-organized and conducted 'Blood donation and awareness camp ' on 15.08.2012 at Kancheeopuram Government Hospital. Thirty five donors had donated blood in this camp out of which many of them were first timers. We appreciate their outstanding contributions in the health and well-being of the community. Medical officials praised us that it was one of camps where many peoples donated blood. As we had successfully conducted this camp outside Coimbatore, we feel ourselves that it was one of the important milestones in our organization activities.

At this junction, we should thank the following persons who had donated items like Certificates, prizes, banner and food. Mr Arun Kumar, Mr Raj Kumar, Ms Anna poorani and Mrs. Mani Megalai.

We request your help and the almighty to perform these kinds of good activities through our "EERA NENJAM" organization.

~ Thanks (57/2012)EERA NENJAM


Banner

Medical officials and our team

Independence day celebration

Blood camp

Blood donation

Blood donation

Blood donation

Blood camp-Our certificates

Blood camp

Blood camp

Blood donation

Blood donation

Blood camp

Blood donation

Souvenirs presentation

Blood donation

Blood donation

Blood donation

Souvenirs presentation

Souvenirs presentation

Souvenirs presentation

Souvenirs presentation

Souvenirs presentation

Souvenirs presentation

Blood donation

Blood donation

Blood donation

Blood donation

Blood donation

Blood donation

1 comment:

  1. 'ஈர நெஞ்சம்' அமைப்புகளுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete