Sunday, August 26, 2012

ஆதரவற்றவர் என யாருமில்லைங்க~முகமது அலி


"அனாதைகள் என்று யாரும் இல்லை" / "No one is orphan"

[For English version, please scroll down]

 
கடந்த 12. 08. 2012 அன்று, கோவை காந்திபுரம் பகுதியில் சாலையோரமாக 'முகமது அலி' என்பவர், நான்கு நாட்களாக உடல் நோய்வாய் பட்ட நிலையில் விழுந்து கிடந்தார்.
 

அவரை கோவை "ஈர நெஞ்சம்" உறுப்பினர்கள், மற்றும் கோவை காட்டூர் காவல் நிலைய காவலர்கள் இணைந்து, அவருக்கு பாது காப்பு கொடுப்பதற்காக கோவை ஸ்ரீசாய்பாபா முதியோர் இல்லத்தில் சேர்த்து பராமரித்து வந்தோம்.


இந்த செய்தி 13. 08. 2012 அன்று டெக்கான் குரோனிக்கல் ஆங்கில நாளிதழிலும் , "தினமலர் மற்றும் தினத்தந்தி" நாளிதழ்கள் முறையே "மடிந்துவிடவில்லை மனிதாபிமானம்" & மேம்பாலத்தில் தவித்த முதியவர் மீட்பு" என்ற தலைப்புகளில் 14. 08.2012 அன்று வெளியிட்டது.


அதனை தொடர்ந்து அடுத்த சிலநாட்களில், முகமது அலியின் வாக்காளர் அடையாள அட்டை காந்திபுரம் பகுதியில் இருந்து, "ஈர நெஞ்சம்" அமைப்பிற்கு கிடைக்கப்பெற்றது.


அதில் உள்ள முகவரியை, முகமது அலியின் புகைப்படத்துடன் முகநூலிலும் , காவல் துறையிடமும், மற்றும் பல நண்பர்களிடமும் "ஈர நெஞ்சம்" பதிவிட்டு முகமது அலியின் உறவினர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டது.


தொடர்ந்து காப்பகத்தில் இருந்த முகமது அலியின் உடல் நிலை மேலும் கவலைக்கிடம் ஆனதால், ஈரநெஞ்சம் மற்றும் ஸ்ரீசாய்பாபா முதியோர் காப்பகம் ஆகியவைகள் மூலம் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து பராமரித்து கவனித்து வந்தோம்.


ஆயினும், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணமுடியாமல் கடந்த 23.08.2012 அதிகாலை முகமது அலி இயற்க்கை எய்தினார்.


முகமது அலி உயிரோடு இருக்கும்போது அவரது உறவினர்களுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியடைந்தது. உறவினர்கள் எங்கு இருக்கிறார்களோ தெரியவில்லை. ஒருவேளை உறவினர்கள் இருக்கிறார்களா இல்லையா என்ற விபரமும் தெரியவில்லை.


இனி முகமது அலிக்கு எல்லா உறவுமே "ஈர நெஞ்சம்" அமைப்பு உறுப்பினர்கள் தான் என்று அவரது இறுதி காரியத்தில் இறங்க, ஸ்ரீ சாய்பாபா முதியோர் காப்பகத்துடன் இணைந்து முகமது அலியின் உடலை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய TMMK [ தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ] நண்பர்களை அணுகி, முகமது அலி பற்றி கூறி நல்லடக்கதிற்கு ஏற்பாடு செய்து 23.08.2012 அன்று காலை 10:30 மணிக்கு நல்லடக்க பணி துவங்கி மதியம் 2:00 மணிக்கு நிறைவேறியது.


"ஆதரவு இல்லாத நிலையில் சாலையில் கிடந்த முகமது அலிக்கு இறந்த பிறகு அவருக்காக கூடிய ஈரநெஞ்சங்கள் ஏராளம்."


முகமது அலி இருக்கும் போது என்ன கொடுமை அனுபவித்து இருப்பாரோ தெரியவில்லை. ஆனால் அவரது இறப்புச் சடங்கு மிகவும் அமைதியாக ஈரநெஞ்சம் அமைப்பால் மேற்கொள்ளப்பட்டது.


யாரும் அனாதைகள் இல்லங்க... எல்லோருக்கும் யாரோ ஒருவர் இருக்கிறார்.


இந்த சேவைக்கு உதவி செய்த ஈர நெஞ்சங்களுக்கு நன்றி. திரு. தபசு ராஜ், திரு. மோகன சுந்தரம் (நிதி உதவி) , திரு. பாலசுப்ரமணி, திரு. ராஜேந்திரன் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நண்பர்கள்.


நன்றி (62/2012)
ஈர நெஞ்சம்


https://www.facebook.com/eeranenjam

******


We all knew that Mr. Mohamed Ali (70) had been admitted into Sri Saibaba Homes, Coimbatore with the help of the City cops and our organization on 12.08.2012. He had been taking treatment at Coimbatore Medical College Hospital, Coimbatore for the past few days.


"Dinamalar and Daily Thanthi" daily newspapers had published "EERA NENJAM" 's services on 14.08.2012 by articles "Humanity still alive & An elder man rescued from over-bridge",respectively.


We had received his voter's identity card (TN/21/111/0093362) lately and the address in the card was read as follows: 91, Johnny Beagum Colony North, Udumalpet (Taluk), Coimbatore (Dt.) on 18.08.2012. The search operation had been going on with the help of our friends.


"Eeera Nenjam", Police department and few friends together had searched for him.


Due to ageing and ineffective treatment, inspite of our care and Srisaibaba Homes, Mr. Mohamed Ali passed away (23.08.2012) midnight and his final rituals had been performed, in Islamic manner  on (23.08.2012) at 10.30 a.m. in Coimbatore.


With lots of efforts and pains, we had failed in our search to know his idendity when he was alive. Hence, we had decided to perform his final rituals with the help of SriSaibab Homes and TMMK [Tamilnadu Muslim Munnetra Kazhakam]. It was perfomed in an Islamic manner with fullest cooperation from all of us from 10.30 am to 2.00 pm on 23 August 2012.


We found that there was no one to take care when he was alive but for the last rituals there were lots of helping hands. We didn’t know how he suffered during his last days, but there were many peoples attended his last rituals.


It clearly shows that “There is no orphan” - Someone would be there for everyone.


We salute the following persons for this service. Mr Thabasuraj, Mr Mohana Sundaram (Financial support), Mr Balasubramani, Mr Rajendiran and members of TMMK [Tamilnadu Muslim Munnetra Kazhakam].


Thanks(62/2012)
EERA NENJAM



 





2 comments:

  1. மனிதம் மடிந்து விட வில்லை. சிறந்த சேவைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. படித்து கண்கலங்கிவிட்டேன். இதற்கு முன்னும் திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்தா முதிய பெண்மனிகளை தன் மகன் இடம் சேர்த்து வைத்தது உங்கள் சேவைக்கு பாரட்டுக்கள். உங்கள் பணி மென்மேலும் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete