எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை காந்திபுரத்தில் உள்ள நடைபாதை பாலத்தில், எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர், கடந்த மூன்று நாட்களாக உணவின்றி நடக்க முடியாத நிலையில் படுத்திருந்தார். அவர் சரிவர பேசாததால், எந்த ஊர், என்ன விபரம் என்பது அறியவில்லை. "ஈர நெஞ்சம்" உறுப்பினர் ஒருவர், இவர் இருந்த நிலையை கண்டு, அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு இந்த பெரியவரை பற்றி தகவல் கொடுக்க, காவல்துறையைச்சேர்ந்த துணை ஆய்வாளர் திரு. விஜயேந்திரன் அவர்கள், "ஈர நெஞ்சம்" அமைப்பிற்கு தகவல் கொடுத்து எங்கள் அமைப்புடன் இணைந்து, அவருக்கு முதலுதவி செய்து, கோவை ஸ்ரீ சாய்பாபா முதியோர் காப்பகத்தில் சேர்த்தோம். மேலும், அந்த காப்பகத்திற்கு தென் காசியை சேர்ந்த திரு. ராஜகோபால் அவர்கள் எங்கள் அமைப்பின் மூலமாக தேவையான உபகரணங்களை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே, காவல்துறை என்றால் மக்கள் மத்தியில் ஒருவித பயம் கலந்த உணர்வு உலவுகின்ற நிலையில் காவல்துறை இதுபோன்ற சமூக அமைப்புகளுடன் இணைத்து மக்களுக்கு சேவை செய்வது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை தருகின்றது. இந்த நிகழ்வை "டெக்கான் கோர்னிகல்" நாளிதழ் 13.08.2012 அன்று வெளியிட்டது. அது உங்கள் பார்வைக்கு.
~நன்றி (டெக்கான் கோர்னிகல் நாளிதழ்)
(ஈர நெஞ்சம்-55 /2012)
https://www.facebook.com/eeranenjam
******
An elder person (~70) was found, unconscious, without proper food, on the over-bridge near heart of the city, Gandhipuram, Coimbatore for the past three days. As he could not speak well, his identity was not unknown. Yesterday, a volunteer from our organization informed the nearest police station and the sub-inspector Mr Vijayendran had made arrangements to give him first-aid and got admitted into Coimbatore "Sri SaiBaba Home" with the help of our organization. Moreover, Mr. Rajagopal, from Tenkasi, had donated few apparatus to this home through us.
This service of police,joining hands with NGO, proved that police are our friends and it has been applauded by public. This humanitarian service was published in "Deccan Chronical" newspaper on 13.08.2012 with the title" NGO, COPS RESCUE AILING 70-YEAR-OLD MANON THE ROAD"~Thanks (Deccan Chronical newspaper)(EERA NENJAM -55/2012)
இந்த செய்தி தினமலர் , தினத்தந்தி, மற்றும் டெக்கான் க்ரோநிகளில் வெளியானது.
No comments:
Post a Comment