என்னுடைய இந்த வலைப்பகுதியில் சமூகம் , கவிதை, ஆன்மிகம் , கட்டுரை, சிந்தனை, மற்றும் கதைகள் ஆகியவை உள்ளடக்கி இருக்கும்.
Sunday, August 05, 2012
ஈரநெஞ்சம் உதவி தங்கவேல் தாத்தா நல்லா இருக்கட்டும்,
கோவை கணுவாய் பகுதியில் கடந்த பத்து நாட்களாக உணவு உடை இல்லாத நிலையில்
சுமார் 70 வயது மதிக்கத்தக்க மனிதர் (தங்கவேலு) சாலையோரமாக இருப்பதாக
கணுவாயை சேர்ந்த நமது நண்பர் திரு. ரஞ்சித் அவர்கள் "ஈர நெஞ்சம்"
அமைப்பிற்கு தகவல் குடுத்து, அவர் மேலும் அவருக்கு ஏதாவது தக்க பாதுகாப்பு
கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, "ஈர நெஞ்சம்" அமைப்பு
உறுப்பினர்கள், கோவை துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் அனுமதியுடன்,
அவருக்கு முதலுதவி செய்து, கோவை மாநகராட்சி ஆதரவற்ற காப்பகத்தில்
சேர்க்கப்பட்டார். மேலும், அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும் அவர் எங்கு
இருக்கிறார் என்றவிபரமும் தெரியவில்லை. திரு. தங்கவேல் அவர்களுக்கு, எந்த
ஊர் எப்படி இந்த பகுதிக்கு வந்தார் என்பதும் தெரியவில்லை மேலும் அந்த
முதியவருக்கு "ஈர நெஞ்சம்" உறுப்பினர்கள் முதல் உதவி செய்வதை நேரில்
பார்த்தவர்கள் ஈரநெஞ்சம் அமைப்பை மனதார பாராட்டினர். இதைப்பற்றிய காணொளி
உங்கள் பார்வைக்கு.http://youtu.be/qPxIPL5e6VA
நன்றி (51/2012)
------
An
elder man, Mr.Thangavelu (~70) was found, unattended and without proper
foods, at the roadside near Kanuvai, Coimbatore for the past ten (10)
days. Mr.Ranjth, one of the members of our organization, has informed
and requested us to take care of him. Hence, we have got a permission
from Thudiyalur police inspector, gave him first aid and made
arrangements to admit him into Coimbatore corporation home. It was also
found from him that he has a daughter and did not know whereabouts of
her. He was not sure himself how he has come here. Many people praised
our services. The video clipping on the same is attached herewith for
your kind reference.Thanks (51/2012).
அன்புள்ள நண்பர் மகி சார் ,மற்றும் நண்பர்களுக்கு என் மனதார வாழ்த்துக்கள் .
ReplyDeleteஇனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .
ஈர நெஞ்சத்தின் ஈரங்கள் தொடர வாழ்த்துக்கள் ,