Monday, December 03, 2012

மாற்றுதிறனாளிகளை ஆதரிப்போம் , மனித நேயத்தோடு வாழ்வோம் மனிதராய்.

கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள லக்ஷ்மி காம்ளக்ஸ் முன் சாலையோரமாக கீசெய்ன் , மொபைல் கவர் விற்று கொண்டு இருந்த பார்வை இழந்த R. விஜயகுமாரை சந்தித்து பேசியதும் , அவர் M.Phil பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்பதை கேட்டதும் பத்தாம் வகுப்பிற்கே தா
ளம் போட்ட என் பழைய நியாபகம்
என்னுள் என்னை கேலி செய்துக்கொண்டது,
ஒரு மாற்றுத் திறனாளிக்கு உதவவேண்டும் என்ற விருப்பம் என்னை அன்று அவரை பற்றி முகநூலில் நான் எழுதியதன்
https://www.facebook.com/photo.php?fbid=439543019436102&set=a.156690734388000.32695.100001412246659&type=3&theater
தொடர்ச்சி இன்று 03/12/12 மாற்று திறனாளிகள் தினத்தை ஒட்டி கோவை ரேடியோ மெர்சி தொகுப்பாளர் திரு கிருஷ்ணா என்னை தொடர்பு கொண்டு ஒரு நிகழ்ச்சிக்கு விபரத்தை கூறி அதற்க்கு ஒருவர் வேண்டும் என்று கேட்டு கொண்டதும் R.விஜயகுமாரை பரிந்துரைத்தேன். இன்று அவர் ரேடியோ மெர்சி நிலையத்தில் நேரடியாக சென்று விஜயகுமார் மக்களுக்கு "மாற்று திறனாளிகளும் மனிதர் தாங்க , எங்களை புறக்கணிக்காதீர்கள் நாங்களும் வாழ்ந்து காட்டுவோம்" என்ற உரை உங்களுக்கு எப்படியோங்க என்னை இன்னும் தெளிவுபட வைத்துள்ளது,
நிகழ்ச்சியில் விஜயகுமார் பாடிய பாடல் " ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி" உண்மையில் நாம் அனைவருமே தொளிலாளிதானங்க .. , உயர்வு என்ன தாழ்வு என்ன மண்ணுக்குள் போகும் மனிதனுக்கு....?
திரு , R.விஜயகுமாருக்கு இந்த வாய்ப்பளித்த ரேடியோ மெர்சி தொகுப்பாளர் திரு கிருஷ்ணா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வணக்கங்கள் தெரிவித்துக்கொள்கிறேன் .
மாற்று திறனாளிகள் தினமான இன்று ஒன்னு சொல்றேங்க , நமக்கு எல்லாம் இருக்கு என்று நினைக்காதிங்க எந்த நேரமும் எதுவும் ஆகலாம் .
மாற்றுதிறனாளிகளை ஆதரிப்போம் , மனித நேயத்தோடு வாழ்வோம் மனிதராய்.
ஒன்னு சொல்ல மறந்துட்டேங்க திரு R.விஜயகுமார் நல்ல பலகுரல் மன்னரும் கூட, இதை நான் நிகழ்ச்சியை கேட்க்கும் பொது தெரிந்து கொண்டேன் .
~மகேந்திரன்

No comments:

Post a Comment