இது என்னுடைய ஆயிரமாவது பதிவு
"ஈர நெஞ்சம்" அமைப்பிற்கு மகாத்மா காந்தி விருது / Mahatma Gandhi Award to "EERA NENJAM" Organization
******
[For English version, please scroll down]
தேசிய மனித உரிமை இயக்கங்கள் சார்பில், சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்தில் நடந்த முதல் மாநில மாநாட்டில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி 12.10.2012 மற்றும் 13.10.2012 ஆகிய நாட்களில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில், ''ஈர நெஞ்சம்'' அமைப்பு செய்த பல சேவைகளைப் பாராட்டி (சாலையோரங்களில் ஆதரவின்றி இருக்கும் முதியோர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பங்களில் சேர்த்து பராமரித்தல், குடும்பத்தை விட்டு தவறுதலாகப் பிரிந்த இருபதுக்கும் மேற்பட்டவர்களை அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தல், ஆதரவற்றோர் காப்பகங்களில் இருந்து பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல், இரத்த தான முகாம் மற்றும் மரம் நடுதல் நிகழ்வுகள், இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்துதல், காப்பங்களுக்கு உணவு வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளை மிகச்சிறிய காலகட்டத்தில் செய்துள்ளமைக்காக) மகாத்மா காந்தி விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை ''ஈர நெஞ்சம்'' அமைப்பின் சார்பாக, நிர்வாக அறங்காவலர் திரு.மகேந்திரன் அவர்களுக்கு தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு கழக தலைவர் உயர் திரு. கஸ்மா. ராஜேந்திரன் அவர்கள் வழங்கி கௌரவித்தார்கள்.
~நன்றி. (தேசிய மனித உரிமை இயக்கம்)
(93/2012)
https://www.facebook.com/
......
National Human Rights Movements organized the ''First State Level Conference'' for appreciating ''Non-Government organizations'' on 12.10.2012 and 13.10.2012 at Omalur, Salem District, Tamil Nadu. We are pleased to inform you that EERA NENJAM Organization has received the Mahatma Gandhi Award for our various services such helping old and mentally challenged people who were left on streets, for uniting people who were separated for unknown reasons with their families, for giving educational scholarships to pupils from orphanages and homes, for conducting free blood donation camp, tree-plantation camp and eye camp to the unprivileged and public and providing food sponsorship to the homes.
Mr. P. Mahendiran, Managing Trustee of EERA NENJAM, received the award on behalf of our organization from Mr. Kasma Rajendran, Head, National Human Rights Protection Council.
~Thanks (National Human Rights Movements)
(93/2012)
அன்பு தோழர் மகி அவர்களுக்கு என் மனமார வாழ்த்துக்கள். உங்களின் சேவையின் முன்பில் எதுவும் இல்லை. தொடருட்டும் உங்கள் மனித நேய அரும்பணி...
ReplyDeleteமகி சார் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! தங்கள் சேவை இன்னும் பலருக்கு பயன்பட வேண்டும் ! அதற்க்கு இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளும் , ஆரோகியமான உடல் நலனும் தரட்டும் !
ReplyDeleteஅது சரி ! ட்ரீட் எப்போ ??????????????
1000 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் !
Ayesha Farook ,sakthi iruvarukkum ennudaiya manamaarntha nandringa
ReplyDelete