அவர்களைக்கண்டால் ஏளனமாய் பார்ப்பதும் கிண்டல் செய்வதும் என கேலிக்கூத்தாக்கி விட்டது சமுதாயம்.
ஆனால் கோவை சௌரிபாளையம் பகுதிக்கு திருநங்கை சண்முக ப்ரியா, 35 வயது,திருநங்கை சண்முக ப்ரியா திருநங்கைகளின் தாய் அறக்கட்டளை அமைப்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார உறுப்பினராகவும் செயல் படுகிறார், அதுமட்டும் அல்லாது சித்திரை வெயிலில் பாதசாரிகளின் தாகம் தணிக்க கம்மன்கூழும் மோரும் விற்று பிழைப்பை நடத்திவருகிறார் . அவர் தயாரிக்கும் கம்மங்கூழ் அவ்வளவு சுவையானதாகும் . அது மட்டும் அல்லாது
கடைக்கு வருபவர்களிடம் பாசத்தோடும் பரிவோடும் நடந்து கொள்கிறார். இவரை யாரேனும் கேலி செய்துவிட்டால் உண்டு இல்லை என ஆக்கி விடுவார்.
திருநங்கைகள் என்றால் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர் என்பது இல்லாமல் சண்முகப்ரியா உயர்ந்து வருகிறார் இவருடைய லட்சியம் எல்லாம் சொந்தமாக ஒரு சிற்றுண்டி விடுதி வைக்க வேண்டும் என்பதே. கவலை வேண்டாம் சண்முக ப்ரியா உங்களது முயற்சி வென்று சிற்றுண்டி என்ன நட்சத்திர ஹோட்டலே வைக்க கூடும்...
வாழ்த்துக்கள் சண்முக ப்ரியா...
~மகேந்திரன்
பிச்சைக்கும்,
ReplyDeleteபலான தொழிலுக்கும்,
ஒதுக்கி வைத்து,
பரம்பரை இல்லாதவர்களை,
குற்றப் பரம்பரையாக்காமல்,
மனிதராய் வாழ விடுவோம்!
அர்த்த நாரீஸ்வரர்கள்
எதிர்பார்ப்பது
இரக்கத்தை அல்ல ~
அங்கீகாரத்தை மட்டுமே;
வாழ்த்துகள் சண்முக ப்ரியா...
ஆஹா..அருமையான பதிவு!
ReplyDelete//கவலை வேண்டாம் சண்முக ப்ரியா உங்களது முயற்சி வென்று சிற்றுண்டி என்ன நட்சத்திர ஹோட்டலே வைக்க கூடும்...
ReplyDeleteவாழ்த்துக்கள் சண்முக ப்ரியா...//
மிகச் சரியாக சொன்னீர்கள் மகேந்திரன். அவருடைய தைரியத்தையும் துணிவையும் கட்டாயம் பாராட்ட வேண்டும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
வளர்க சண்முகப்ரியா.
ReplyDeleteWord Vrification அவசியமா?
ReplyDeleteநன்றிங்க நண்பர்களே ...
ReplyDeleteகுற்றப் பரம்பரையாக்காமல்,
ReplyDeleteமனிதராய் வாழ விடுவோம்!வளர்க திருநங்கை சண்முக ப்ரியா...