இன்று காலை17/02/2012 எனக்கு அலைபேசியில் ஒரு அழைப்புவந்தது அதில் கோவை B9. காவல் நிலையத்தில் இருந்து சங்கரபாண்டியன் (ஏட்டு) (இவர் நல்ல நேர்மையான காவலாளர் ) என்பவர் "மகேந்திரன் நல்லா இருகிங்களா உங்களை பார்த்து நாட்கலானதே" என்று விசாரித்துவிட்டு தனக்கு ஒரு உதவி வேண்டுமென கேட்க்க நானும் சரி என்ன உதவி சொல்லுங்கள் என்னால் முடிந்தது செய்கிறேன் என்றேன்,
திரு சங்கரப்பண்டியன் கூறும்போது நேற்று16/02/2012 காலை முதல் கோவை நல்லாம் பாளையம் பகுதியில் சுமார் 90 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி சற்று புத்திசுவாதினம் இல்லாதநிலையில் சுற்றிக்கொண்டு இருந்ததாகவும் மாலை நேரம் மின்சாரம் இல்லதவேலையில் இருட்டில் கீழே விழுந்து அவரது மூக்கில் காயம் பட்டு மயங்கி இருப்பதாகவும் சொல்லி B.மகேந்திரன் (தேசிய மனித உரிமை போராளி அமைப்பின் மாநில தலைவர்) என்பவர் தகவல் கொடுத்தார் அதனைதொடர்ந்து நாங்கள் (சங்கரப்பண்டியன், மற்றும் B.மகேந்திரன் ) அந்த மூதாட்டி இருக்கும் இடத்திற்கு சென்று அந்த மூதாட்டியிடம் எங்கு இருந்து வருகிறீர்கள் தாங்கள் யார் என்று கேட்டோம் அதற்க்கு அந்த மூதாட்ட்யை கோவை கணபதியில் இருக்கும் இமயம் பெண்கள் காபகத்தில் சரத்து விட்டு வந்துள்ளோம் , ஆனால் அந்த காப்பகத்தில் முதியவர்களை பராமரிப்பது இல்லை இரவு நேரம் என்பதால் இன்று ஒரு நாள் மட்டும் பார்த்துக்கொள்கிறோம் நாளை வேறு எங்காவது சேர்த்துவிட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள் ,அதனால் உங்களது உதவியால் அந்த அம்மாவை வேறு ஏதாவது காப்பகத்தில் சேர்த்துவிட உங்களை கேட்டு கொள்கிறோம் என்று கூறினார் "
இதனை தொடர்ந்து நான் மகி மகேந்திரன் (நான்) இமயம் காப்பகத்தில் இருக்கும் அந்த மூதாட்டியை சந்திக்க சென்றேன் , அங்கு அந்த மூதாட்டி சற்று தெளிவுடன் இருக்க அவரிடம்விபரம் கேட்க்க வயதான காரணத்தால் அவர் பேசுவது ஏதும் சரியாக புரியவில்லை ,நீண்டநேரதிர்க்கு பிறகு தனது பெயர் பச்சை அம்மாள் , மகன் ராஜேந்திரன், மருமகள் புஷ்பா ,கோவை சாய்பாபா கோவில் அருகில் என்று சொல்வது ஒரு அளவுக்கு புரிந்தது , அதனை வைத்துக்கொண்டு சுமார் மூன்றுமணிநேரம் நான் (மகேந்திரன்) மற்றும் B.மகேந்திரன் இருவரும் கோவையில் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலில் தேடி இந்த பாட்டியை பற்றி தெரிந்தவர்கள் யாரும் இல்லை ,ஆகையால் எங்களது முயற்சி சற்று தொய்வு ஏற்ப்பட்டு அந்த மூதாட்டியை கோவை அன்னைதேறேசா வில் சேர்த்துவிடலாம் என்று முடிவுக்கு வந்து அந்த்ச பாட்டியை இமயம் பெண்கள் காப்பகத்தில் இருந்து அழைத்துக்கொண்டு என்னுடைய இருசக்கரவாகனத்தில் உட்க்காரவைது துணைக்கு B.மகேந்திரன் அவரையும் அழைத்தேன் நல்ல மனிதர் நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரும் வருகிறேன் என்று அந்த பச்சை அம்மாளை பிடித்தபடி எனது வாகனத்தின் பின்புறம் உட்கார்ந்து கொண்டார் , அன்னைதேறேசா காப்பகத்திற்கு சென்று கொண்டு இருக்கும் வேளையில்
பாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு மூக்கில் அடிப்பட்டு இருந்ததற்கு மருந்திட்டு மீண்டும் சென்றோம் செல்லும் போது எனக்கு ஒரு யோசனை இந்த மூதாட்டி கூறும் அந்த சாய்பாபா கோவில் அருகில் அழைத்து போனால் ஒருவேளை தனது முகவரியை கூற வாய்ப்பு இருக்குமே என்று தோன்றியது ,
யாராக இருந்தாலும் சொந்தங்கலோடுதானே இருக்கவேண்டும் அந்த எண்ணம் தான்.
அதன்படியே அந்த மூதாட்டியை அழைத்துக்கொண்டு மூதாட்டி குறிப்பிட்ட சாய்பாபா கோவில் பகுதியில் சுற்றி வர அந்த பாட்டியால் அடையாளம் கூற முடியவில்லை , பாட்டியை பார்க்க பரிதாபமாய் இருந்தது வேறு வழி இல்லாமல் அன்னைதேறேசா காப்பகத்தில் சேர்க்க வாகனத்தை திருப்பினோம் சற்று தூரம் கன்னப்பநகர் வழியாக வரவும் அந்த மூதாட்டி ஒரு இடத்தை காட்டி இங்குதான் எனது வீடு இருக்கிறது என்றார் , எனகுக்கு மிகுந்த இன்ப அதிர்ச்சி உடனே வாகனத்தை அவர் சொன்ன இடத்தில நிறுத்த இதுதான் எனது வீடு என்றார் ,
வீட்டினுள் மூதாட்டியை அழைத்து செல்ல மூதாட்டியின் மருமகள் புஷ்பா தனது பாட்டி வருவதை கண்டு மிகுந்த இன்பதிர்த்சியில் "பாட்டி... எங்க போன உன்னை காணாம மூணுநாள தேடிட்டு இருக்கோம் என்று கூற நாங்கள் நடந்ததை கூறினோம் பாட்டி கிடைத்த மகிழ்ச்சியில் புஷ்பா பாட்டியை அவரது சொந்ததொடு சேர்த்துவைத்த மகிழ்ச்சியில் நாங்கள்,
அந்தபச்சை அம்மாள் பாட்டி கூறிய கோவில் பகுதிக்கு இந்த பாட்டியை அழைத்து போகலாம் என்ற யோசனை வராவிட்டால் இந்த பாட்டி இந்நேரம் ஆதரவு இல்லாதவர்கள் என்றோர் கணக்கில் சேர்ந்துவிடுவார் எனக்கு அந்த யோசனையை கொடுத்த அந்த ஆண்டவனுக்கு நன்றி...
நண்பர்களே இதுப்போல இன்னும் எத்தனையோ பேர் ஆதரவை பறிகொடுத்து கொண்டு இருக்கிறார்கள் நாம் சற்று முயற்சித்தால் ஏதோ ஒருவிதத்தில் அவர்களுக்கு ஒரு எதிர்காலம் இருக்கும் என்பது உண்மைங்க...
சேவை மனபான்மைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteபலபேர் (என்னையும் சேர்த்து தான்) மனதில் மட்டுமே தோன்றும் மனிதாபிமானத்தை, செயலாகவே வைத்திருக்கும் உங்களை எப்படி வாழ்த்துவது என்றே தெரியவில்லை.
ReplyDelete