Monday, January 30, 2012

இன்று காலை 30/01/2012 நமது மகி அவர்களை பற்றி The Hindu நாளிதழில் வெளியான தகவலின் தமிழாக்கம்..

ப. மகேந்திரன் தெருக்களில் மனநிலை சரியில்லாதவர்களை மீட்டு அவர்களின் குடும்பங்களுடன் அவர்களை சேர்த்து வைக்கிறார்.

நாம் ஒவ்வொரு நாளும் அவர்களை கடந்து செல்கிறோம். ஆனால் சாக்கடை ஓரம் எலும்பும் தோலுமாக கிடக்கும் அம்மனிதர்களிடம் யார் அக்கறை காட்டுகிறார்கள்? ப. மகேந்திரன் செய்கிறார். மேலும் மகி என்கிற மகேந்திரன் அம்மனிதர்களின் அருகே அமர்ந்து அவர்களுடன் ஒரு உரையாடலை நிகழ்த்துகிறார். அவர், அவர்களை சுத்தமாக்கி அவரை சாப்பிடசெய்து மறுவாழ்வு இல்லத்திற்கு அழைத்து செல்கிறார். அத்துடன் நிற்பதில்லை. அம்மனிதனின் குடும்பம் கண்டுபிடித்து அவர்களை சேர்த்துவைக்க முயற்சியும் செய்கிறார்.

2009 முதல், மகி மனநிலை பாதித்தவர்களை அவர்களின் குடும்பங்களுடன் இணைத்து வைத்துள்ளார். அவர்களில் ஒருவருக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெற உள்ளது. மென்மையாக பேசும் மகியின் விருப்பம் “ நம் குடும்பத்தில் மனநிலை பாதித்தவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் இருந்தால் அவர்களை பாதுகாக்கும் பொறுப்பை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.” கோயம்புத்தூரில் நிறைய மருத்துவர்கள் குறைந்தபட்ச கட்டணத்தில மனநோய் சிகிச்சை செய்ய தாயாராக உள்ளனர்..



அவரது நண்பர்கள் தபசு ராஜ், மோகனசுந்தரம், செண்பகம், பரிமளா, பாலச்சந்திரன் மற்றும் பழனியப்பன் இவர்களுடன் சேர்ந்து 35 வயது மனிதர் பல உயிர்களுக்கு வாழ்வளித்துள்ளார்.. அவர் தனது வெற்றி கதைகள் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கிறார்.

பழனி என்கிற பாட்டன்


பழனி 30 வயது மதிக்கத்தக்க இளைஞர். ஒரு கல்லுரி மைதானம் அருகே கண்டடோம். சில மாணவர்கள் உதவிக்கு அழைத்தனர். அவரை முதலில் பார்த்த பொது அவரது தலைமுடி பின்னி படர்ந்திருந்து உடலெங்கும் அழுக்கு படிந்திருந்தது. அவருக்கு முடிதிருத்தி குளிக்க செய்தபின் மாப்பிளை போல் தோற்றம் அளித்தார். அவர் மிகவும் குழம்பிய மனநிலையில் காணப்பட்டார். அவரிடம் பேசியதில் அவர் கிராமம் நம்பியூர் என்றும் அவரது தந்தை நிலக்கடலை வியாபாரம் செய்வதும் தெரியவந்தது. உடன் அவரது கிராமத்தை தேடினோம்.

ஒரு நாள் முழுதும் அக்கிராமத்தில் இருந்து பார்ப்பவர்களை எல்லாம் “உங்களுக்கு பழனியை தெரியுமா?” என் வினவினோம். யாருக்கும் தெரியவில்லை. அப்பொழுது தான் பழனி “பாட்டன், பாட்டன்” என முனகியது நினைவிற்கு வந்தது. பின்னர் கிராமவாசிகளிடம் “உங்களுக்கு பாட்டன் தெரியுமா?” எனகேட்டோம். அவர்கள் ஒரு முதியவரிடம் அழைத்துச்சென்றனர். பார்த்ததும் அதிர்ந்தோம், அவர் பழநியைப் போன்றே தோற்றமளித்தார், அவர் தன் மகன் இறந்து விட்டதாக நம்பினார். அவரை சமாதானம் செய்து கோயம்புத்தூர் அழைத்து வந்து பழனியைக் காட்டினோம். பார்த்தவுடன் அவரால் பேச கூட முடியவில்லை. கண்ணீர் மல்க பழணியைக் கட்டி தழுவிக்கொண்டார்.

அவினாசி பாட்டி

 
அப்பகுதியில் தெரிந்த முகமாக இருந்தது. அங்குள்ள நடைபாதையில் படுத்து உறங்குகிறார். அவ்வழியே செல்லும் பயணிகள் கொடுக்கும் டீ பன் சாப்பிட்டி வருகிறார். நான் ஒரு சமயம் பேருந்தில் அவினாசிக்கு செல்லும் வழியில் அவரைப் பார்த்தேன். அவருடன் பேசியதில் அவரது சகோதரி ஈரோடில் வசிப்பது தெரியவந்தது. அவரிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்து இவருக்கு தேவை சிறிது உணவு படுக்கும் இடம் மட்டுமே என்று கூறினோம். அவரும் பாட்டியை பார்த்து கொள்வதாக உறுதியளித்தார். இப்பொழுது ஒரு மாதம் ஆகிறது. பாட்டி சந்தோஷமாக இருக்கிறார்.

சண்முகம் தாத்தா

என் நான்கு வயது பெண் இவரை கண்டுபிடித்து கூறினார். கணபதியில் ஒரு சாக்கடை ஓரம இருந்த சண்முகம் தாத்தா மிக மோசமாக இருந்தார். அவரை ஒரு இல்லத்தில் சேர்த்துவிட்டு அவருடன் பேசியதில் “கல்லறை வீதி” என்பது மட்டும் புரிந்தது. பிறகு அருகில் விசாரித்ததில் சவுரி பாளையம் என்று அறிந்தோம். அவரை புகைப்படம் எடுத்துக்கொண்டு புறப்பட்டோம்.

அந்த ஊரில் ஒவ்வொரு வீடாக சென்று புகைப்படத்தை காட்டினோம். கடைசியில் ஒரு பெண் இவரது மருமகள் நான், சிறிது நாட்களாக இவரை காணவில்லை என தேடிவருகிறோம் என்று கூறினார். இவ்வாறு தனது குடும்பத்துடன் சண்முகம் தாத்தாவைச் சேர்த்தோம்.

அசோகன்


அன்பாலயத்திற்கு செல்லும் போது  அசோகனை சந்தித்தோம். மன்னார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார். நண்பர்கள் உதவியுடன் அவரது சகோதரரின் தொலைபேசி எண் கிடைத்தது. அவர் 18 வருடங்களாக காணவில்லை என்றும் அவர் இறந்துவிட்டதாக முடிவு செய்து இறப்பு சான்றிதழ்க்கு விண்ணப்பிக்க இருந்ததாகவும் தெரிவித்தார். அவர் சகோதரர் உயிருடன் இருப்பதை கேட்டு ஆச்சரியம் அடைந்தார். இப்பொழுது அசோகன் அவரது குடும்பத்தினருடன் இருக்கிறார். அவருக்கு திருமணம் நடைபெற உள்ளது.

http://www.thehindu.com/life-and-style/metroplus/article2840007.ece

3 comments:

  1. வாழ்க வளமுடன் மகி..
    வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை..

    ReplyDelete
  2. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், மகி.

    ReplyDelete
  3. இதுவல்லவோ... மனிதநேயம்...எத்தனை பேருக்கு இந்த எண்ணம்.. நீ வாழ்க பல்லாண்டு..

    ReplyDelete