அவினாசியில் 15/12/2011 அலமேலு அம்மாள் இருந்த நிலை ...
அவினாசியில் அலமேலு என்பவர் ஆதரவு இல்லாமல் சாலையோரமாக இருக்கின்றார் தகவல் வந்தது உடனடியாக நான் Magi Mahendiran, Mohan Sundaram, Senbagam Subramaniyam, மூவரு அவினாசிக்கு நேரில் சென்று அந்த அம்மாவை சந்தித்தோம் , அந்த அம்மாவிற்கு உறவினர்கள் இருப்பது தெரிய வந்தது, அனால் அவர்கள் அவினாசியில் இல்லை திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதியில் வசிப்பது தெரியவந்தது , மேலும் இந்த அம்மாவின் பெயர் அலமேலு என்றும் அவருக்கு வயது எம்பது என்றும் இந்த அம்மா ஒரு சாலையோரமாக வாழ்க்கையை களிதுவருவதும் தெரிந்தது , அதனைதொடர்ந்து நாங்கள் அந்த அலமேலு அம்மாவின் உறவினரை தேடி செல்லும் பொது ,அலமேலு அம்மாவின் அண்ணன் மகன் வெங்கடேசை அலைபேசியில் தொடர்பு கொள்ள நேர்ந்தது அவரிடம் நம்மைப்பற்றிய விபரத்தை சொல்லி , அந்த அம்மாவை காப்பகத்திற்கு சேர்க்கும்படி அறிவுரிதியதும் வெங்கடேஷ் அவர்கள் உறவினர்களிடம் கலந்து பேசி காப்பகத்தில் சேர்க்க சம்மதிக்கிறோம் என்று கூறி உள்ளார், அப்படி அவர்கள் முயற்சி இடிக்க வில்லை என்றால் காவல்துறை உதவியுடன் நங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று கூறிவந்துள்ளோம் .
இதனை தொடர்ந்து இன்று 19/12/11 அலமேலு அம்மாவின் சகோதரிக்கு ஈரோட்டில் வசிக்கிறார்கள் அவர்களிடம் கடந்த இரண்டுநாட்களாக பேசிவந்தோம், அவர்கள் மனம் மாறி இன்று ஈரோட்டில் இருந்து அவினாசிக்கு வந்து தனது சகோதரியை பலநாட்களுக்கு பிறகு குளிப்பாட்டி முடி வெட்டிவிட்டு புது ஆடை அணிவித்து தனது ஈரோட்டில் உள்ள வீட்டில் பாதுகாப்புடன் வைத்துக்கொள்கிறேன் ,
இனி இப்படி வெளி விடமாட்டேன் என்றும் சொல்லி , இன்று மாலை அழைத்து போக உள்ளார் , இப்படி ஒவ்வொருவரும் மனம் மாறினால் ஆதரவு இல்லை என்பது இல்லாமல் போகுமே ....
இன்று 21/12/2011 ஈரோட்டில் உள்ள தனது சகோதரி தேவியுடன் அலமேலு அம்மா
~மகேந்திரன் ,
நல்ல விசயம் தான் வாழ்த்துக்கள்:)
ReplyDeleteநல்ல ஒரு நிகழ்வு நன்றி
ReplyDeletemagi அருமையான பனி வாழ்த்துக்கள்
ReplyDelete