Saturday, November 12, 2011

எல்லா உயிர் இடத்திலும் அன்பு காட்டவேண்டும் ~மகேந்திரன்

அன்புக்கும் ஒரு எல்லை இருக்குங்க அதையும் தாண்டி கோவையில் வடவள்ளியில்  வசிக்கும்  இவங்க திருமதி, கல்பனா வாசுதேவன் ,
மனிதருக்கு மனிதனே அதரவு அளிக்காத இந்த காலகட்டத்தில்



தெருக்களில் திரியும் வாயில்லா ஜீவன்களுக்கு சிறு துன்பம் என்றாலும் உடனே அங்கு வந்து அந்த ஜீவன்களை அழைத்து   அடைக்கலம் கொடுத்து  தனது குழந்தைகள் போல எண்ணி  தமது இல்லத்திற்கு அழைத்து சென்று பார்த்துகொல்கிறார் திருமதி , கல்பனா வாசுதேவன், இதுவரை ஆயிரம் தெருநாய்களுக்கு அடிக்கலாம் குடுத்து  பராமரித்து வருகின்றாராம் ,  இந்த பணியில்  சிறு வயதில் இருந்தே  ஆர்வத்துடன்  மனதிருப்தியுடன்  செய்துவருகிறார் , ஒரு தாய் தன குழந்தையை கூட இவளவு பக்குவமா பாத்துபங்களா என்று தெரியாது ஆனா இந்த  கல்பனா வாசுதேவன் அவர்கள் இந்த வாயில்லா ஜீவன்களுக்கு சிறு உபாதை என்றாலும் தேவையான மருத்துவ உதவிசெய்து பராமரிப்பதை  பார்க்கும்போது என்னையறியாமலே நானும் இந்த  வாயில்லா ஜீவன்களோடு நானும் ஒரு ஜீவனாய் இந்த தாயுடன்  இருந்துவிட தோன்றுகிறதே... மேலும் இவர் கூறும் பொழுது மனிதர்களுக்கு செய்யும்  உதவியை காட்டிலும்  இந்த வாயில்லா ஜீவனுக்கு செய்யும் உதவி கடவுளை நேரடியாக சென்றடைகிறது என்றார் , ஒரு தாய்மையின் உணர்வை  கண்டதிருப்தியில்  அங்கு இருந்து வெளி வந்தேன்  ...
~மகேந்திரன்

No comments:

Post a Comment