கோவில் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் கடந்த நாற்ப்பது வருடமாக சாலையே கதி என்று இருந்தவர் இவர், இவரால் பேசமுடியாது ,அதனால் இவருடைய பெயர் தெரியலைங்க , இவரால் நடக்கவும் முடியாதுங்க எங்கு போனாலும் நகர்ந்துதான் போகிறார் , அந்தபகுதியில் இருப்பவர்கள் எல்லோரும் இவரை கோவையன் என்றுதான் கூறிவருகிறார்கள்.
நண்பர்களே உங்களுக்கு தெரியும் நான் சாலையோரமாக ஆதரவற்ற முடியாத நிலையில் இருப்பவர்களை ஏனைய பேர்களை ஏதேனும் காப்பகங்களில் இடம் கேட்டு அதில் அவர்களை சேர்த்து வருகிறேன் என்று.
அதேபோல இந்த பெரியவரையும் காப்பகத்தில் இடம் கேட்டு அனுமதி கிடைத்தும் இவரை அழைத்து செல்ல ஆமுலன்ஸ் வரவழைத்தாலும் இவரை பார்த்துவிட்டு ,இவர்மேல் வீசும் துர்நாற்றம் பொறுக்கமுடியாமல் யாரும் முன் வருவது இல்லை, எத்ததையோ பேருக்கு என்னால் அடிக்கலாம் கிடைத்து இருக்கிறது ஆனால் இவருக்கு எந்த ஒரு நல்வழி கிடைக்க வில்லை என்று எனக்கு பலநாள் தூக்கம் கேட்டு உள்ளது.
ஆனால் இன்று இவருக்கு நல்ல காலம் பிறந்தது , எனது நண்பன் அருள் அவரது வாகனம் கிடைத்தது அதில் இந்த பெரியவரை அழைத்து பொய் கோவை அன்னை தெரேசா காப்பகத்தில் சேர்த்துவிட்டு அவருக்கு தேவையான முதல் உதவிகளை செய்து குடுத்து விட்டு நிம்மதியுடன் வீடு திரும்பினேன் .
"போகும் பொது என்னங்க கொண்டு போகபோறோம் ?"
~மகேந்திரன்
பெரிய மனசு சார் உங்களுக்கு
ReplyDeletekadavul eppothum neril varuvathillai vara muidyathu so apppa appa unkali pola oru silarai anupi vaipan
ReplyDeleteதூயநல் பணிகள் செய்யும்
ReplyDeleteதொண்டரே வாழ்கநீவீர்
ஆயநல் வளமும்பெற்று
அன்பரே வாழ்கவாழ்க!!
புலவர் சா இராமாநுசம்
ஒருமுறை என் வலைவழி வருக!
தங்களின் பணியில் என்னையும் இணைத்து கொள்வீர்களா ..சார்
ReplyDeleteதங்களின் பொதுத்தொண்டு மிகவும் பாராட்டுக்குரியது.
ReplyDeleteஎன் மனமார்ந்த நன்றிகள்.
//அவருக்கு தேவையான முதல் உதவிகளை செய்து குடுத்து விட்டு நிம்மதியுடன் வீடு திரும்பினேன் .
"போகும் பொது என்னங்க கொண்டு போகபோறோம் ?"
~மகேந்திரன்//
பாராட்டுக்கள். இது போன்ற தங்கமான மனம் எத்தனை பேருக்கு அமையும். ;)))))